அலகு 1 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | 8th Social Science : Civics : Chapter 1 : How the State Government Works
குடிமையியல்
அலகு -1
மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
கற்றலின்
நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றுக்கொள்வதின் வாயிலாக மாணவர்கள் பின்வருவனவற்றில்
அறிவைப் பெறுகின்றனர்
>மாநில நிர்வாகம்
>ஆளுநரின் அதிகாரம் மற்றும் பணிகள்
>முதலமைச்சரின் அதிகாரம் மற்றும் பணிகள்
>மாநில சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை
>மாநில நீதித்துறை
அறிமுகம்
நமது
நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு என்ற இரண்டு வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன.
இந்தியாவில் 28 மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தைக்
கவனித்துக் கொள்ள தனக்கென ஒரு அரசைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலமும்
நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை கொண்டுள்ளது. மாநில நிர்வாகம் மாநில ஆளுநர்
மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையால் மேற்கொள்ளப்படுகிறது. மாநில ஆளுநர் சட்டமன்றத்தின்
ஒரு அங்கமாகத் திகழ்கிறார்.