மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | அலகு 1 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Civics : Chapter 1 : How the State Government Works
மதிப்பீடு
I சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
அ) குடியரசுத்
தலைவர்
ஆ) துணைக்
குடியரசுத் தலைவர்
இ) பிரதம
மந்திரி
ஈ) முதலமைச்சர்
[விடை: அ) குடியரசுத் தலைவர்]
2. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) சபாநாயகர்
ஈ) உள்துறை
அமைச்சர்
[விடை: ஆ) முதலமைச்சர்
3. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும்,
ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
அ) உள்துறை
அமைச்சர்
ஆ) குடியரசுத்
தலைவர்
இ) சபாநாயகர்
ஈ) ஆளுநர்
[விடை: ஈ) ஆளுநர்]
4. உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில்
பங்கு பெறாதவர் யார்?
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) உயர்
நீதி மன்ற தலைமை நீதிபதி
ஈ) குடியரசுத்
தலைவர்
[விடை: ஆ) முதலமைச்சர்]
5. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும்
வயது
அ)
62
ஆ)
64
இ)
65
ஈ)
58
[விடை: அ) 62]
II. கோடிட்ட
இடங்களை நிரப்புக
1. இந்தியாவில்
உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 29 ஆகும்.
2. ஆளுநரின்
பதவிக்காலம் 5
ஆண்டுகள் ஆகும்.
3. மாவட்ட
நீதிபதிகள் ஆளுநர்
ஆல் நியமிக்கப்படுகின்றனர்.
4. ஆளுநர்
ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார்.
5. ஒருவர்
சட்டப்பேரவை உறுப்பினராக 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
III பொருத்துக
1. ஆளுநர்
- கீழவை
2. முதலமைச்சர்
– பெயரளவுத் தலைவர்
3. சட்டமன்ற
பேரவை - மேலவை
4. சட்டமன்ற
மேலவை – உண்மையான தலைவர்
விடைகள்
1. ஆளுநர் - பெயரளவுத் தலைவர்
2. முதலமைச்சர் – உண்மையான தலைவர்
3. சட்டமன்ற பேரவை - கீழவை
4. சட்டமன்ற மேலவை – மேலவை
IV சரியா
/ தவறா எனக் குறிப்பிடுக
1. முதலமைச்சர்
மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். விடை : சரி
2. ஆளுநர்
சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார். விடை: தவறு
3. உயர்
நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை . விடை : சரி
V சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள்
யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்.
i. குடியரசுத்
தலைவர்
ii. துணை
குடியரசுத் தலைவர்
iii.
ராஜ்ய சபை உறுப்பினர்கள்
iv. சட்டமன்ற
மேலவை உறுப்பினர்கள்
அ)
i, ii & ii சரி
ஆ) i
மற்றும் iii சரி
இ) iii
மற்றும் iv சரி
ஈ) i,ii,iiii
மற்றும் iv சரி
விடை : இ) iii மற்றும்
iv சரி
VI.கீழ்க்காணும்
வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி
1. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை
எழுதுக.
> இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது
இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்
> சட்டமன்ற மேலவை, சட்டமன்ற கீழவை முதலியன இரு அவைகளாகும்.
2. மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு
உள்ள தகுதிகள் யாவை?
> சட்டமன்ற பேரவை உறுப்பினராக ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல்
வேண்டும்.
> இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
> பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது
3. முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
> ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின்
தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
> முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
இவர் பதவியேற்கும் போது உறுப்பினராக இல்லாவிட்டால் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
4. மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
> முதலமைச்சர், அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை
தேர்வு செய்கிறார்.
> முதல்வர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும்
கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. இதுவே அமைச்சரவை குழுவாகும்.
VII விரிவான
விடையளி
1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை
விவரி?
> மாநிலத்தின் தலைமை நிர்வாகி முதலமைச்சர் ஆவார். மாநில அரசின் பல
முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
> அமைச்சரவையை உருவாக்குவதில் முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இவரது ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுனர் நியமிக்கிறார்.
> பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்கி, அவற்றின் நடவடிக்கைகளை
ஒருங்கிணைக்கிறார்.
> முதலமைச்சர் மாநில அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு
வகிக்கிறார். மேலும் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி
செய்கிறார்.
> மாநில அரசின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியானது ஆகும்.
இவர் மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
> முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளூனர் பல்வேறு
உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.
2. மாநில சட்ட மன்றத்தின் மன்றத்தின் அதிகாரங்கள்
மற்றும் பணிகளை விவரி?
> சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான
சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும்.
> சட்டமன்றம் மாநிலப்பட்டியல் மற்றும் மத்தியப்பட்டியலில் உள்ள துறைகள்
தொடர்பாக சட்டத்தை இயற்றலாம். எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம்
தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது.
> மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது.
> மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் மற்றும்
பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.
> அமைச்சரவை செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில்
ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.
> மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுபடுத்துகிறது.
நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும்.
> சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசு வரியினை விதிக்கவோ,
அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கிக் கொள்ளவோ இயலாது.
> சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை
உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கு கொள்கின்றனர்.
> குறிப்பாக அரசியலமைப்பைத் திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம்
பங்கு வகிக்கிறது.
3. உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும்
எழுது?
உயர் நீதிமன்றத்தின்
அதிகாரம் மற்றும் பணிகள்
> அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம்
பல வித நீதிப் பேராணைகளைப் பிறப்பிக்கின்றன.
> குறிப்பாக ஆட்கொணர்வு, தகுதி முறை வினவும், தடை உறுத்தும், கட்டளையிடும்
மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப் பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.
> ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ
நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும்
தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.
> சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட
முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே
முடிவு செய்யலாம்.
> இது மாநிலத்திலுள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
> உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின்
ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.
> குறிப்பாக அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூலமே உறுதி செய்யப்படுகிறது.
VIII செயல்திட்டம்
மற்றும் செயல்பாடு
1. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் ஆளுநர்,
முதலமைச்சர் பெயர்களைப்
பட்டியலிடுக.