மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | அலகு 1 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Civics : Chapter 1 : How the State Government Works
மீள்பார்வை
•நம்
நாட்டில் 28 மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தை
மேற்கொள்ள ஓர் அரசாங்கத்தைக் கொண்டுள்ளது.
•இந்தியாவின்
மாநில அரசின் தலைவராக ஆளுநர் இருப்பார் என அரசியலமைப்பு கூறுகிறது.
•மாநில
அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
•மாநில
அரசாங்கத்தின் சட்டங்களை இயற்றுபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
•மாநிலத்தின்
உயர்ந்த நீதி அமைப்பாக உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும்
ஒரு உயர் நீதிமன்றம் இருத்தல் வேண்டும்.
மேற்கோள்
நூல்கள்
•
The Constitution of India, Government of India, Ministry of Law and Justice,
2011.
•
Om Prakash Aggarawala, S.K. Aiyar The Constitution of India, Metropolitan Book
Company Ltd., Delhi, 1950.
இணையதள வளங்கள்
•
www.tnrajbhavan.gov.in/
•
www.tn.gov.in/
•
indiancourts.nic.in/
இணையச் செயல்பாடு
மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
இச்செயல்பாட்டின்
மூலம் மாணவர்களை இந்திய நாடாளுமன்றம் பற்றி மெய்நிகராக அறியச் செய்தல்.
படிநிலைகள்
• கீழ்க்காணும்
உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி மக்களவையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச்
செல்க. அதில் "Members" என்பதைத் தேர்வு செய்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின்
பெயர்களை அறிந்து கொள்க.
•இணையப்
பக்கத்தின் நடுப்பகுதிக்கு வருக. நாட்டின் பல்வேறு துறைகளின் அமைச்சரவை உறுப்பினர்கள்
பற்றி அறிந்து கொள்க.
•வட்ட
விளக்கப்படத்திற்கு மேல் சுட்டியைக் கொண்டு சென்று, நடுவண் அரசில் அங்கம் வகிக்கும்
கட்சிகளின் பலத்தைத் தெரிந்து கொள்க.
•இணையப்
பக்கத்தின் கீழ்ப்பகுதிக்குச் செல்க. 'Virtual tour' என்பதைச் சொடுக்கி நாடாளுமன்றத்தின்
அமைப்பு குறித்த மெய்நிகர் காணொலிப் பயணம் மேற்கொள்க.
உரலி:
https://indiancitizenshiponline.nic.in/Home.aspx