Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | நாளமில்லாச் சுரப்பிகளை அடையாளம் காணுதல்

உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - நாளமில்லாச் சுரப்பிகளை அடையாளம் காணுதல் | 10th Science : Bio-Zoology Practicals

10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள்

நாளமில்லாச் சுரப்பிகளை அடையாளம் காணுதல்

நாளமில்லாச் சுரப்பிகள், அவற்றின் அமைவிடம், கரக்கும் ஹார்மோன்கள் அதன் பணிகள் ஆகியவற்றை அடையாளம் காணல் - தைராய்டு சுரப்பி, கணையம்.

நாளமில்லாச் சுரப்பிகளை அடையாளம் காணுதல்


நோக்கம்: 

நாளமில்லாச் சுரப்பிகள், அவற்றின் அமைவிடம், கரக்கும் ஹார்மோன்கள் அதன் பணிகள் ஆகியவற்றை அடையாளம் காணல் - தைராய்டு சுரப்பி, கணையம். 


தேவையான பொருள்கள்:

1. நாளமில்லா சுரப்பிகள் - (அ) தைராய்டு சுரப்பி (ஆ) கணையம் - வாங்கர்ஹான் திட்டுகள் ஆகியவற்றின் அடையாளம் குறிக்கப்பட்ட நாளமில்லாச் சுரப்பியின் படம், 

தேவைக்கேற்ப, அடையாளம் குறிக்கப்பட்ட நாளமில்லாச் சுரப்பிகளின் மாதிரிகள் / வரைபடம் / புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல். 



அடையாளம் காணல்:

அடையாளம் குறிக்கப்பட்ட நாளமில்லாச் சுரப்பி, அவற்றின் அமைவிடம், சுரக்கும் ஹார்மோன்கள் மற்றும் அவற்றின் பணிகளை எழுதவும். 


(அ) தைராய்டு சுரப்பி


அடையாளம்: அடையாளம் குறிக்கப்பட்ட நாளமில்லா சுரப்பி தைராய்டு சுரப்பி எனக் கண்டறியப்பட்டது.

அமைவிடம்: தைராய்டு சுரப்பி இரு கதுப்புகளை உடையது. இது மூச்சுக்குழலின் இருபுறமும் கழுத்துப் பகுதியில் காணப்படுகிறது.

சுரக்கும் ஹார்மோன்கள்: டிரை அயோடோ தைரோனின் (T3) மற்றும் தைராக்ஸின் (T4

தைராய்டு ஹார்மோன்களின் பணிகள்: 

1. தைராய்டு ஹார்மோன் அடிப்படை வளர்சிதை மாற்ற வீதத்தை அதிகரிக்கிறது. 

2. இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. 

3. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. 

4. இது இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. 

5. இது ஆளுமை ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. 

6. தைராக்ஸின் குறை சுரப்பின் விளைவாக எளிய காய்டர், மிக்ஸிடிமா (பெரியவர்களில்), கிரிடினிசம் (குழந்தைகளில்) தோன்றுகிறது, 

7. அதிக சுரப்பின் விளைவாக கிரேவின் நோய் உண்டாகிறது. 


(ஆ) கணையம் - லாங்கர்ஹான் திட்டுகள்

அடையாளம்: அடையாளம் குறிக்கப்பட்ட நாளமில்லா சுரப்பி கணையத்திலுள்ள லாங்கர்ஹான் திட்டுகள் எனக் கண்டறியப்பட்டது.

அமைவிடம்: வயிற்றுப் பகுதியில் உள்ள கணையத்தில் லாங்கர்ஹான் திட்டுகள் புதைந்து காணப்படுகின்றன.

சுரக்கும் ஹார்மோன்கள்: 

1.  α - செல்கள் குளுக்கோகானையும்

2. β - செல்கள் இன்சுலினையும் சுரக்கின்றன. 

ஹார்மோன்களின் பணிகள்: 

1. இன்சுலின் குளுக்கோஸை, கிளைக்கோஜனாக மாற்றி கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கிறது. 

2. குளுக்கோகான் கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுகிறது. 

3. இன்சுலின் மற்றும் குளுக்கோகான் ஒன்றுக்கொன்று எதிராக செயல்பட்டு இரத்தத்தில் சர்க்கரையின் (80 - 120 மிகி / டெசிலி) அளவைப் பராமரிக்கின்றன. 

4. இன்சுலின் குறை சுரப்பினால் டயாபடீஸ் மெல்லிடஸ் உண்டாகிறது.


Tags : Bio-Zoology Laboratory Practical Experiment உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை.
10th Science : Bio-Zoology Practicals : Identification of Endocrine Glands Bio-Zoology Laboratory Practical Experiment in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள் : நாளமில்லாச் சுரப்பிகளை அடையாளம் காணுதல் - உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள்