Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள்

ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் | 8th Science : Chapter 3 : Light

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள்

கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் இரண்டு வகைப்படும். அவை: மெய் பிம்பம் மற்றும் மாய பிம்பம் மெய் பிம்பங்களை திரையில் பிடிக்க இயலும். ஆனால் மாய பிம்பங்களை திரையில் பிடிக்க இயலாது.

கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள்

கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் இரண்டு வகைப்படும். அவை: மெய் பிம்பம் மற்றும் மாய பிம்பம் மெய் பிம்பங்களை திரையில் பிடிக்க இயலும். ஆனால் மாய பிம்பங்களை திரையில் பிடிக்க இயலாது. குவி ஆடி தோற்றுவிக்கும் பிம்பங்கள் எப்பொழுதும் நேரான, அளவில் சிறிய மாயபிம்பங்களாகவே இருக்கும். எனவே, இவ்வகை ஆடிகளால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களைத் திரையில் வீழ்த்திப் பிடிக்க இயலாது.

குழி ஆடியின் முன் பொருள் வைக்கப்படும் இடத்தைப் பொருத்து உருவாகும் பிம்பத்தின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. பொருள் ஒன்று குழி ஆடியை நோக்கி வரும்போது அதன் பிம்பம் பெரிதாகிக் கொண்டே செல்லும். அது ஆடிமையத்தை அடையும்போது பிம்பத்தின் அளவானது பொருளின் அளவிற்குச் சமமாக இருக்கும். பொருளானது ஆடியை விட்டு விலகிச் செல்லச் செல்ல பிம்பத்தின் அளவானது சிறியதாகி இறுதியில் முக்கியக் குவியத்தில் தோன்றுகிறது. பொருளானது ஈறிலாத் தொலைவிற்குச் செல்லும்போது அதன் பிம்பமானது முக்கியக் குவியத்தில் ஒரு புள்ளி போன்று தோன்றும். குவி ஆடியினால் தோன்றும் பிம்பத்தின் அளவு மற்றும் தன்மை அட்டவணை 3.1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

குழி ஆடிகள் மெய் பிம்பங்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றைத் திரையில் பிடிக்க இயலும். குவிஆடிகளைப் போல் அல்லாமல், குழி ஆடிகள் வெவ்வேறு வகையான பிம்பங்களைத் தோற்றுவிக்கின்றன. ஆடியின் முன்னர் பொருள் வைக்கப்பட்டுள்ள இடத்தைப் பொருத்து பிம்பத்தின் நிலை, அளவு மற்றும் தன்மை ஆகியவை மாறுபடுகின்றன. குழியாடியில் தோன்றும் பிம்பங்களின் தொகுப்பானது அட்டவணை 3.2 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து குழிஆடி எப்போதும் தலைகீழான,  மெய்பிம்பத்தையே உருவாக்குகிறது என்பதை அறியலாம். குவியத்திற்கும், ஆடிமையத்திற்கும் இடையில் பொருள் வைக்கப்படும்பொழுது மட்டும் நேரான மாயபிம்பத்தை உருவாக்குகிறது என்பதை நீங்கள் காணமுடியும். இந்த நிலையில் தலைகீழான மாய பிம்பத்தை அது ஏற்படுத்துகிறது.


செயல்பாடு 1

வளைந்த பரப்புடைய தேக்கரண்டி ஒன்றை எடுத்து, அதில் தோன்றும் பிம்பத்தைக் காண்க. இப்பொழுது அதைத் திருப்பி அதில் தோன்றும் பிம்பத்தைக் காண்க. ஏதாவது வேறுபாட்டைக் காணமுடிகிறதா? காரணத்தைக் கண்டுபிடிக்கவும்.




Tags : Light | Chapter 3 | 8th Science ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 3 : Light : Images formed by Spherical Mirrors Light | Chapter 3 | 8th Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் - ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்