Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பொருளாதார மேம்பாட்டிற்கான குறியீடுகள்

பொருளியல் - பொருளாதார மேம்பாட்டிற்கான குறியீடுகள் | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability

   Posted On :  11.09.2023 09:05 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

பொருளாதார மேம்பாட்டிற்கான குறியீடுகள்

நிகர நாட்டு உற்பத்தி (NNP), தனிநபர் வருமானம் (PCI) வாங்கும் திறன் சமநிலை (PPP), மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (HDI) ஆகியவை பொருளாதார முன்னேற்றத்தின் முதன்மையான குறியீடுகளாகும்.

பொருளாதார மேம்பாட்டிற்கான குறியீடுகள்

நிகர நாட்டு உற்பத்தி (NNP), தனிநபர் வருமானம் (PCI) வாங்கும் திறன் சமநிலை (PPP), மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (HDI) ஆகியவை பொருளாதார முன்னேற்றத்தின் முதன்மையான குறியீடுகளாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்திச் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

 

நிகர நாட்டு உற்பத்தி

நிகர நாட்டு உற்பத்தி தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக கருதப்படுகிறது. இது நாட்டு வருமானம் என்றும் அறியப்படுகிறது. தனிநபர் வருமான உயர்வு எப்போதும் மொத்த உண்மையான உற்பத்தியின் உயர்வு என்று பொருள்படும். எனவே தனிநபர் வருமானமே நாட்டின் மேம்பட்டை அளவிடும் சிறந்த குறியீடு ஆகும்.

நாடுகளின் மேம்பாட்டை அளவிடுவதற்கு வருமானம் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிக வருமானம் கொண்ட நாடுகள் குறைவான வருமானத்தைக் கொண்ட நாட்டைவிட அதிக வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படுகின்றன. எனவே நட்டு வருமானமே பொருளாதார மேம்பாட்டின் குறியீடாகக் கருதப்படுகிறது.

 

தலா வருமானம்

நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட, மொத்த வருவாயைக் கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு வித மக்கள் தொகை காணப்படுகிறது. நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டிலுள்ள மக்களைவிட வேறொரு நாட்டில் உள்ள மக்களிடையே அதிக வருமானம் உள்ளதா?. எனவே நாட்டின் தலா வருமானத்தை கணக்கிட நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும். சராசரி வருவாயை தவாவருமானம் என்று அழைக்கிறோம். அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக அமெரிக்க டாலரில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

தலா வருமானம் உலக வங்கியின் அறிக்கையின்படி, நாடுகளின் வருமான அளவீடுகள் கீழ்க்கண்டவாறு புதியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (2017-18)


 

வாங்கும் திறன் சமநிலை

வாங்கும் திறன் சமநிலை என்பது ஒரு நாட்டினுடைய நாணயங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு சந்தையில் அமெரிக்க டாலரில் வாங்குவதற்கேற்றவாறு உள்நாட்டு சந்தையில் அதே அளவிலான பொருட்களையும் வாங்குவதற்குத் தேவைப்படுகிறது.

வாங்கும் திறன் மன்பாட்டின் நுட்பம் என்பது இரு நாடுகளின் இரண்டு நாணயங்களுக்கிடையேயான பரிமாற்றம், அந்தந்த நாடுகளில் உள்ள இரண்டு நாணயங்களின் துல்லியமான வாங்கும் திறனை வெளிப்படுத்தத் தேவை என்பதை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. சமீபத்தில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளதார நாடாக உள்ளது. மேலும் சீனா முதலிடத்திலும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

 

மனிதவள மேம்பாட்டு குறியீடு

எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனித வளங்கள் அவசியமாகும். உற்பத்தித் துறையில் பயன்படுத்தக் கூடிய மனித வளங்களை கொண்டிருக்கும் மக்களையே மனித வளம் என்ற சொல் குறிக்கிறது.

மனித வள மேம்பாடு என்பது மனிதனின் உடல்திறன் மனத்திறன் மற்றும் சுகாதாரத் திறன்களை கல்வி, மருத்துவம் மற்றும் பயிற்சியின் மூலம் மேம்படுத்துவதாகும். எனவே மனித வளத்தில் கல்விமற்றும் உடல்நலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு குழந்தைக்கு அளிக்கப்படும் நல்ல கல்வி, சிறந்த சுகாதாரம் எதிர்காலத்தில் அவர்களுக்கு அதிக வருமானம் பெறக்கூடிய முதலீடு ஆகும். இது அவர்களின் உற்பத்தியின் மூலம் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்புத் தந்து அதிக வருமானம் அளிக்க முடியும். மனித வளர்ச்சி குறியீடு என்பது சமூகத்திலுள்ள மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் குறிக்கிறது. கடந்த காலங்களில் பொருளாதார வல்லுனர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் விகிதத்தை, மக்களின் உடல் உழைப்பை மூலதனம் ஆக்குவதன் மூலமே முதலீட்டை அதிகரிக்க முடியும் என்று நம்பினர். ஆனால் மனித உழைப்பின் முதலீடு என்பது உடல் நலத்தின் மீது செய்யப்படும் முக்கியமான முதலீடு என்பதை பின் நாட்களில் அவர்கள் உணர்ந்தனர்.


உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் மனித  வளங்களின் வளர்ச்சிக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பொறுப்பாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ளது.

Tags : பொருளியல்.
9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability : Indicators of Economic in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை : பொருளாதார மேம்பாட்டிற்கான குறியீடுகள் - பொருளியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை