நோய்த்தடைக்காப்பியல் - இயல்பு நோய்த்தடைகாப்பு | 12th Zoology : Chapter 8 : Immunology
இயல்பு நோய்த்தடைகாப்பு (Innate Immunity)
இது உயிரினங்களில் இயற்கையாகவே காணப்படும், தொற்றுக்கு எதிரான நோய்த்தடுக்கும் ஆற்றலாகும். ஒவ்வொரு உயிரியும் பிறவியிலிருந்தே இந்த ஆற்றலை பெற்றிருக்கின்றன. இயல்பு நோய்த்தடைக்காப்பு இலக்கு அற்றதாகும். இது பரந்த அளவிலான திறன் கொண்ட நோய்த்தொற்று முகவர்களுக்கு எதிராக செயல்படுகின்றது. இவற்றை இலக்கு தன்மையற்ற நோய்த்தடைக்காப்பு அல்லது இயற்கையான நோய்த்தடைகாப்பு எனக் கூறலாம்.
பல்வேறு நுண்ணுயிரிகளுக்கு எதிராக இலக்குதன்மையற்ற முறையில், பரந்த அளவிலான நோய்த்தொற்று முகவர்களுக்கு எதிரான இயல்பு நோய்த்தடைகாப்பின் செயல்பாடுகள் அட்டவணை 8.1, படம் 8.2 ல் காட்டப்பட்டுள்ளன.

