Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ் - காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Tamil : Term 3 Chapter 3 : Kattukulle patu potty

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி: கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

வாங்க பேசலாம்


கதையில் நடுவர் மயிலக்கா கூறும் தீர்ப்பு சரியானதா? உம் கருத்தைச் சொந்தநடையில் கூறுக.

விடை

கதையில் நடுவர் மயில் அக்கா கூறும் தீர்ப்பு சரியானது. காகம் பாடாது என்று அதனை கேலி பேசியவர் முன்னிலையில் தொடர்ந்து அரைமணி நேரம் பாடி அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த காகம்தான் பரிசு பெறுவதற்கு சரியான பறவை. காகம் தான் பாடியதோடு மட்டுமல்லாமல் மற்ற பறவைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தது. எனவே பாட்டு ராணி என்ற பட்டம் காகத்திற்குக் கிடைத்தது ஏற்புடைய ஒன்றாகும்.

 

உங்கள் பள்ளியில் நடைபெற்ற பாட்டுப்போட்டி நிகழ்வுகள் குறித்துப் பேசுக.

விடை

வணக்கம்!

எங்கள் பள்ளியில் நவம்பர் பதினான்கு அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

அன்று பல போட்டிகள் நடைபெற்றது. நான் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலைப் பாடினர். ஒரு சிலர் நடனமாடியும் பாடல் பாடியும் மகிழ்ந்தனர். ஒரு சிலர் இசைக்கருவிகளை இசைத்தனர். என்னுடைய தோழி குறையொன்றுமில்லை என்ற எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைப் பாடினாள். அனைவரும் அப்பாடலை மெய்மறந்து கேட்டனர். பாடலுக்கு அழகு கேட்டார் நன்று எனக் கூறல் என்ற சிறுபஞ்சமூலம் கூற்றின்படி அவளுடைய பாடலை அனைவரும் இரசித்தனர். இறுதியில் பரிசு அறிவிக்கப்பட்டது. என் தோழிக்குப் பரிசு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ந்தேன்.

 

சிந்திக்கலாமா!


போட்டியில் வெற்றி பெறுவதைக்காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையாதது என்று உன் தந்தை கூறுகிறார். ஏன் தெரியுமா?

விடை

போட்டியில் பங்கேற்பதன் மூலம் அவரவர் ஆற்றல் வெளிப்படுகிறது. பலமுறை தோற்றாலும் ஒரு முறையாவது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.

போட்டியில் கலந்துகொள்ளும் போது தன்னால் என்ன முடியும், முடியாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

போட்டியில் தோற்றாலும் சரி என்று கலந்து கொள்ளும் போது அவர்களுக்குள் ஓர் உந்துதல் சக்தி உண்டாகிறது. அச்சக்தி அவர்களை முயற்சி செய்யத் தூண்டுகோலாய் அமைகிறது.

போட்டிக்காக அவர்கள் செய்யும் பயிற்சியும் முயற்சியும் அவர்களைச் சுறுசுறுப்பாக்குகிறது. செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவுகிறது.

இக்காரணங்களால் போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையதாதது என்று தந்தை கூறுகிறார்.

 

வினாக்களுக்கு விடையளிக்க

1. காட்டில் நடந்த போட்டியின் பெயர் என்ன?

விடை

காட்டில் நடந்த போட்டியின் பெயர் பாட்டுப்போட்டி ஆகும்.

 

2. காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா என்ன கூறினார்?

விடை

காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா ஆகா. என்ன சுருதி சுத்தம்; அற்புதம்!என்று கூறினார்.

 

3. 'பாட்டு ராணி' பட்டம் பெற்ற பறவை எது?

விடை

பாட்டு ராணி பட்டம் பெற்ற பறவை காகம்.

 

புதிர்களைப் படிப்போம்! விடை காண்போம்! படத்துடன் பொருத்துவோம்!



இரவில் உணவு தேடிடுவேன்,

தலைகீழாகத் தொங்கிடுவேன்.

நான் யார்? விடை : வௌவால்

 

கரைந்து கரைந்து அழைத்திடுவேன்,

கூட்டமாக வாழ்ந்திடுவேன்.

நான் யார்? விடை : காகம்

 

பச்சைநிறத்தில் இருந்திடுவேன்,

பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன்.

நான் யார்? விடை : கிளி

 

மழை வருமுன்னே உணர்த்திடுவேன்,

தோகை விரித்து ஆடிடுவேன்.

நான் யார்? விடை : மயில்

 

வெண்மை நிறத்தில் நானிருப்பேன்,

ஒற்றைக் காலில் நின்றிடுவேன்,

நான் யார்? விடை : கொக்கு

 

மீண்டும் மீண்டும் சொல்வோம்

ஒரு குடம் எடுத்து அரைக்குடம் இறைத்துக் குறைகுடம் நிரப்பி நிறைகுடம் ஆக்கினான்.

துள்ளி எழுந்து பள்ளி சென்றாள் வள்ளி. அவளுடன் மெள்ள மெள்ள வந்து சேர்ந்து கொண்டாள் அல்லி.

 

கலையும் கைவண்ணமும்

காகிதத்தில் கரடி செய்வோம்


 

அறிந்து கொள்வோம்

ஆண்மயிலுக்குத்தான் தோகை உண்டு.

ஆண் சிங்கத்துக்குத்தான் பிடரிமயிர் உண்டு.

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும்.

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.

 

செயல் திட்டம்

எவையேனும் ஐந்து பறவைகளின் படங்களை ஒட்டி, அவற்றைப்பற்றி ஐந்து வரிகள் எழுதி வருக.

Tags : Term 3 Chapter 3 | 4th Tamil பருவம் 3 இயல் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 3 Chapter 3 : Kattukulle patu potty : Kattukulle patu potty: Questions and Answers Term 3 Chapter 3 | 4th Tamil in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி