Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு

பொருளாதாரம் - வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு | 12th Economics : Chapter 3 : Theories of Employment and Income

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு

"வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுகோட்பாடு"

வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு (Keynes Theory of Employment and Income)


நவீனப் பொருளாதாரக் கோட்பாடுகளின் வளர்ச்சியில், கீன்ஸ் எழுதிய புத்தகமான "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுகோட்பாடு"

ஒரு திருப்புமுனையாக இருக்கிறது. அதிக தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நூல் 1936ல் வெளியிடப்பட்டது.

தொன்மைப் பொருளதார அறிஞர்கள் ஒரு முதலாளித்துவ பொருளதார அமைப்பில் சந்தை சக்திகளே மாற்றங்களை ஏற்படுத்தி சமநிலையை உருவாக்கும் என நம்பினர். இதற்கு எதிர்மாறான கருத்தை கீன்ஸ் கொண்டிருந்தார், எனவே அதில் உள்ள குறைகளை களைய தன்னுடைய புதிய கோட்பாட்டை வேலைவாய்ப்பு உருவாக்கினார்.

J.M. கீன்ஸ் 20ஆம் நூற்றாண்டில் ஒரு தாக்கத்தை உருவாக்கிய ஒரு பொருளியல் அறிஞர். 1883ல் Cambridgeல் இவர் பிறந்தார். அவர் பொருளாதார அறிஞராகப் பணியாற்றினார். அத்துடன் ஒரு குடிமைப் பணியாளராகவும் (Civil Servant), Bank of Englandó இயக்குநராகவும் Bretton woods மாநாட்டில் ஒரு முடிவை எடுப்பதற்கான ஒரு குழுவுக்குத் தலைவராகவும் இருந்தார். அவருடைய கருத்தின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரக் கருத்துக்கள் கீன்ஸியன் பொருளாதாரம் என அழைக்கப்படுகின்றன. இன்றைய காலகட்டத்திலும் அதிக தாக்கத்தை பேரியல் பொருளியலில் ஏற்படுத்துகிறது.

கீன்ஸின் கோட்பாடு முழுவேலைவாய்ப்பு கருத்தை மட்டும் விளக்காமல், குறைந்த வேலை நிலைக்கும் (Underemployment) வாய்ப்பு இருப்பதை சுட்டிகாட்டுகிறது. கீன்ஸின் கோட்பாடு ஒரு பொதுக்கோட்பாடாகவே திகழ்ந்தது. இது எல்லாவகைச் சூழ் நிலைகளுக்கும் பொருந்துவதாக இருக்கிறது.

கீன்ஸின் கருத்துக்கள் குறுகிய காலத்தை அடிப்படையாக கொண்டு இருந்தன. அவரது கருத்துப்படி, வேலை வாய்ப்பின் அளவு நிர்ணயிக்கப்படும் போது உற்பத்திக் காரணிகளான மூலதனம், உழைப்பு, திறன், தொழில்நுட்பம் ஆகியவை மாறாமலேயே இருக்கும்.


Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 3 : Theories of Employment and Income : Keynes’ Theory of Employment and Income Economics in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் : வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்