பொருளாதாரம் - தொன்மையியம் மற்றும் கீன்ஸியம் – ஓர் ஒப்பீடு | 12th Economics : Chapter 3 : Theories of Employment and Income
தொன்மையியம் மற்றும் கீன்ஸியம் – ஓர் ஒப்பீடு (Comparison of Classicism and Keynesianism)
கீன்ஸியம்
1. குறுகிய காலச் சமநிலை
2. சேமிப்பு கெடுதல்
3. பணத்தின் பணி என்பது ஒருபுறம் பரிமாற்றத்திற்கு உதவவும், மறுபுறம் சேமிக்க கூடியதாகவும் செயல்படும்
4. நாட்டின் பிரச்சனைகளை தாக்க பேரியல் அணுகுமுறை தேவை
5. அரசுத்தலையீடு அனுமதிக்கப்படுகிறது
6. எல்லா சூழநிலைக்கும் முழு வேலைவாய்ப்பு மற்றும் குறைமுழு வேலை வாய்ப்பு பொருத்தமானது
7. முரண்பாடுகளைக் கொண்டது முதலாளித்துவம்
8. பொருளாதாரத்தின் தேவைக்கு ஏற்ப வரவு - செலவு அறிக்கையை மாற்றிக் கொள்ளலாம்
9. வருமான மாற்றம் மூலம் சேமிப்பு முதலீடு சமநிலை முன் வைக்கப்படுகிறது
10. பணத்திற்கான தேவை மற்றும் அளிப்பே வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது
11. வட்டி வீதம் மாறிக்கொண்டே உள்ளது (Flow)
12. தேவையே அதன் அளிப்பை உருவாக்குகிறது
13. வட்டி என்பது ரொக்க இருப்பை விட்டுக் கொடுப்பதற்கான வெகுமதி
தொன்மையியம்
1. நீண்ட காலச் சமநிலை
2. சேமிப்பு நல்லது
3. பரிவர்த்தனைக்குத் மட்டுமே பணம் உதவும்
4. நுண்ணின அடிப்படையில் பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் அணுகுமுறை
5. தலையிடாக் கொள்ளை வலியுறுத்தப்படுகிறது
6. முழு வேலை வாய்ப்புச் சூழலுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது
7. முதலாளித்துவம் சரியானது
8. சமநிலை வரவு - செலவு அறிக்கை ஆதரிக்கப்படுகிறது
9. வட்டிவீத மாற்றம் மூலம் சேமிப்பு முதலீடு சமத்துவம்முன்வைக்கப்படுகிறது
10. சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய இரண்டும் வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது
11. வட்டி வீதம் மாறாதது (Stock)
12. அளிப்பு தன் தேவையை தானே உருவாக்குகிறது
13. வட்டி என்பது சேமிப்பிற்கான வெகுமதி
தொகுப்புரை
தொன்மைப் பொருளியல் கோட்பாட்டுக்கு கீன்ஸ் மறுப்புரை வழங்கினார். அவர் அரசுத் தலையீடு அவசியமென்று தன் கோட்பாட்டில் விளக்கியுள்ளார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் பல நாடுகள் அவரின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
அருஞ்சொற்பொருள்
* முழு வேலைவாய்ப்பு: உழைக்க திறமையுள்ள, விருப்பமுள்ள அனைவரும் வேலை கிடைக்கும் நிலை .
* வேலையின்மை : உழைக்க திறமையுள்ள, விருப்பமுள்ளவர்கள் வேலை பெறமுடியமால் இருக்கும் நிலை.
* மறைமுக வேலையின்மை: ஒரு குறிப்பிட்ட பணியினைச் செய்யத் தேவைப்படுகிறவர்களின் எண்ணிக்கையை விட (உம். 10 நபர்கள்) அதிகமானவர்கள் (உம். 20 நபர்கள்) அவ்வேலையில் ஈடுபட்டு இருப்பது.
* வேலைக்குறைவு : உற்பத்தியில் வளங்களை (உம். உழைப்பு) முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பது.
* விளைவுத்தேவை: உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மூலம் தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கும் பணத்தின் அளவு.
* தொகுத் தேவை: ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மேல் குடும்பங்களும், நிறுவனங்களும், அரசு. மற்றும் வெளிநாட்டவரும் செய்கின்ற மொத்த செலவுத் தொகையாகும்.
* தொகு அளிப்பு: ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு.
* இறுதிநிலை நுகர்வு விருப்பம்: இருக்கின்ற வருமானத்தில் ஓர் அலகு வருமானம் உயரும்போது அதிகரிக்கக் கூடிய நுகர்வுச் செலவு.
* மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் : புதிய மூலதன பொருளின் செலவை காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கக் கூடிய விளைவு விகிதம்.
* பண அளிப்பு: ஒரு பொருளாதாரத்தில் புழக்கத்தில் இருக்கிற மொத்த பணத்தின் இருப்பு.