பொருளாதாரம் - முழு வேலை வாய்ப்பின் பொருள் | 12th Economics : Chapter 3 : Theories of Employment and Income
முழு வேலை வாய்ப்பின் பொருள்
நல்ல உடல் நலம் உள்ள தனிநபர்கள் மற்றும், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கிறதெனில் அதனை முழு வேலை வாய்ப்பு என்கிறோம். அதாவது முழுவேலை நிலை என்பது வேலை செய்ய விருப்பமும் திறமையும் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் வேலை நிலையை குறிக்கும். கீன்ஸின் கூற்றுபடி முழு வேலைநிலை என்பது விருப்பமில்லா வேலையின்மை (Involuntary Unemployment) இல்லாமல் இருப்பது ஆகும். உதாரணம் : சில செல்வந்தர்களின் குழந்தைகள் வேலைக்கு செல்ல விரும்புவது இல்லை (Voluntary Unemployment ).
லர்னரின் கூற்றுப்படி, முழு வேலை நிலை என்பது "கூலியும் விலையும் எந்த வேலை நிலையில் மாறிமாறி அதிகரிக்கின்றதோ அங்கு முழு வேலைவாய்ப்பு நிலவுகிறது" என்கிறார்.
உலகில் ஒவ்வொரு நாடும் முழு வேலை நிலையை அடைவதை குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. இதற்காக தங்கள் நாட்டில் இருக்கும் வளங்களை முழுமையாக பயன்படுத்தி உத்தம அளவு உற்பத்தியை அடைய முயல்கின்றன. ஆனால் நடைமுறையில் முழு வேலைவாய்ப்பு என்பது நாட்டின் உழைப்பாளர்களை முழுமையாக பயன்படுவது ஆகும்.