Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

நினைவில் கொள்க

பூக்கும் தாவரங்களில் இரு முக்கியத் தொகுப்புகள் உள்ளன. அவையாவன:

1. வேர்த் தொகுப்பு 2. தண்டுத் தொகுப்பு

வேர், தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்தச் செய்கிறது அது மண்ணிலிருந்து நீரையும், கனிம உப்புகளையும் உறிஞ்சுகிறது.

தண்டு, தாவரத்தின் மைய அச்சில் மேல்நோக்கி வளரும் பகுதி ஆகும். இதில் கணு மற்றும் கணுவிடைப் பகுதி ஆகியவை காணப்படுகின்றன.

இலைகளின் மூன்று முக்கியப் பணிகள்:

1. ஒளிச்சேர்க்கை

2. சுவாசம்

3. நீராவிப் போக்கு

தாவரங்கள் வாழும் சுற்றுப்புறம் அதன் வாழிடம் எனப்படும்.

இரண்டு வகையான வாழிடங்கள் உள்ளன. அவை:

1. நீர் வாழிடம்

2. நில வாழிட

தகவமைவுகள் - ஒரு தாவரம் அதன் வாழிடத்தில் வாழ்வதற்கேற்ப, அவற்றில் காணப்படக்கூடிய சிறப்பு அம்சங்கள்.

பற்றுக் கம்பி மெலிந்த தண்டுடைய தாவரங்கள் ஆதாரத்தைப் பற்றுவதற்குப் பயன்படும் உறுப்பு.

பின்னு கொடி மெலிந்த தண்டுடைய தாவரங்கள் நேராக நிற்க உதவுவது,


இணையச் செயல்பாடு

தாவர உலகம் - மலரின் பாகங்களை அறிதல்


மலரின் பாகத்தை அறிவோமா.


படிநிலைகள்:

Google தேடுபொறியில்/உலவியில் சென்று மலரின் பாகங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள "Science Kids" என்று தட்டச்சு செய்யவும். அதில் "games" பகுதிக்குள் சென்று "plants" என்று தட்டச்சு செய்யும் போது திரையில் " drag one of the stamens flowers into labelled box" என்று தோன்றும் அதில் மலரின் குறிப்பிட்ட பாகத்தை, மலரின் பாகம் குறிப்பிட்ட பெட்டி boxற்குள் இழுத்துச் சென்றுவிடவும்.

இது ஒரு சோதனை செயல் தான் அடுத்து ஒரு box என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையுடன் தோன்றும். அதில் OK பட்டனை அழுத்தினால் அடுத்தபடி தோன்றும். அதில் நாம் மலரின் ஒவ்வொரு பாகத்தையும் இழுத்து அதற்குரிய box ல் கொண்டு விடவேண்டும்.

அதில் உள்ள உருப்பெருக்குக் கண்ணாடியைச் சொடுக்கும் போது ஒவ்வொரு பாகத்தின் பணிகளும் திரையில் தோன்றும். OK கொடுத்த உடன் மலரின் பாகங்கள் குறித்த மதிப்பீட்டு படிவம் தோன்றும் அந்த மதிப்பீட்டு படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

திறன் பேசியின் மூலம் நேரடியாகச் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள QR CODE அல்லது உரலி மூலம் உள்ளே சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


உரலி:

http://www.sciencekids.co.nz/gamesactivities/lifecycles.html

Tags : The Living World of Plants | Term 1 Unit 4 | 6th Science தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants : Keywords, Points to Remember The Living World of Plants | Term 1 Unit 4 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம் : நினைவில் கொள்க - தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம்