தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants

   Posted On :  16.09.2023 01:09 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம்

வினா விடை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. குளம் ------------------- வாழிடத்திற்கு ஒரு உதாரணம்.

அ) கடல்

ஆ) நன்னீர்

இ) பாலைவனம்

ஈ) மலைகள்

விடை: ஆ) நன்னீர்

 

2. இலைத்துளையின் முக்கிய வேலை ---------------------------

அ) நீரைக் கடத்துதல்

ஆ) நீராவிப்போக்கு

இ) ஒளிச் சேர்க்கை

ஈ) உறிஞ்சுதல்

விடை: ஆ) நீராவிப்போக்கு

 

3. நீரை உறிஞ்சும் பகுதி ................... ஆகும்

அ) வேர்

ஆ) தண்டு

இ) இலை

ஈ) பூ

விடை: அ) வேர்

 

4. ஆகாயத் தாமரையின் வாழிடம்.

அ) நீர்

ஆ) நிலம்

இ) பாலைவனம்

ஈ) மலை .

விடை : அ) நீர்

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக..

 

1. புவிப் பரப்பு 70% நீரால் மூடப்பட்டுள்ளது.

2. பூமியில் காணப்படும் மிகவும் வறண்ட பகுதி பாலைவனங்கள்

3. ஊன்றுதல், உறிஞ்சுதல் ஆகிய இரண்டும் வேரின் ன் வேலை.

4. ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மைப் பகுதி இலைகள்

5. ஆணிவேர்த் தொகுப்பு இருவித்திலைத்  தாவரங்களில் காணப்படுகிறது.

 

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின்  சரியான கூற்றை எழுதுக.

 

1. தாவரங்கள் நீரின்றி வாழ முடியும்.

விடை: தவறு பல்வேறு வளர்சிதை மாற்றங்களைச் செய்வதற்கு தாவரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

2 தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படுகிறது.

விடை: தவறு பசுமையான பாகங்களில் மட்டும் பச்சையம் காணப்படுகிறது.

3. தாவரங்களின் மூன்று பாகங்கள் -வேர், தண்டு, இலைகள்.

விடை: சரி

4. மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்.

விடை: தவறு மலைகள் நில வாழிடத்திற்கு உதாரணமாகும்.

5. வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.

விடை: தவறு முட்கள் பொதுவாக இலையின் மாறுபாடு ஆகும்.

6. பசுந்தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.

விடை: சரி

 

 

IV. பொருத்துக.    

1. மலைகள் - ஒரு வித்திலைத் தாவரங்கள்

2. பாலைவனம் – கிளைகள்

3. தண்டு - வறண்ட இடங்கள்

4. ஒளிச் சேர்க்கை - இமயமலை

5. சல்லிவேர்த் தொகுப்பு – இலைகள்

 

விடைகள்

1. மலைகள் - இலைகள்

2. பாலைவனம் – இமயமலை

3. தண்டு - வறண்ட இடங்கள்

4. ஒளிச் சேர்க்கை - கிளைகள்

5. சல்லிவேர்த் தொகுப்பு – ஒரு வித்திலைத் தாவரங்கள்

 

 

V. மிகக் சுருக்கமாக விடையளி.


1. வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.

நில வாழிடம் - நீர் வாழிடம் என வகைப்படும்.


 

2. பாலைவனத் தாவரங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

சப்பாத்திக்கள்ளி,  ஹைடிரில்லா, மா, ரோஜா.

சப்பாத்திக்கள்ளி தாவரங்கள்  பாலைவனத்தில் காணப்படுகின்றன. அவை தண்டுகளில்  நீரைச் சேமிக்கின்றன.

 

3. வாழிடம் என்பதை வரையறு

ஒவ்வொரு உயிரினமும், உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும், தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்.

(உ.ம்) நன்னீர் வாழிடம் - ஆறுகள், குளங்கள், குட்டைகள்.

 

4. இலைக்கும், ஒளிச் சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

இலைகள் பசுமையாக உள்ளன. அவற்றில் பசுங்கணிகங்கள் காணப்படுகிறது. இவை ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

 

VI. பின்வருவனவற்றை சரியான வரிசையில்

 

1. இலைகள் - தண்டு - வேர் - மலர்கள்

விடை: வேர் - தண்டு - இலைகள் - மலர்கள்

 

2 நீராவிப்போக்கு - கடத்துதல் - உறிஞ்சுதல் – ஊன்றுதல்

விடை: ஊன்றுதல் - உறிஞ்சுதல் - கடத்துதல் - நீராவிப்போக்கு

 

VII. சுருக்கமாக விடையளி.

 

1. மல்லிகைக் கொடி ஏன் பின்னு கொடி என அழைக்கப்படுகிறது ?

நலிந்த, மெலிந்த தண்டுடைய தாவரங்கள் தாமாக நிலைநிற்க இயலாது. எனவே அவை ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறுகின்றன. (உ.ம்) பட்டாணி.

 

2 ஆணிவேர் மற்றும் சல்லி வேர்த் தொகுப்புகளை ஒப்பீடு செய்க.



ஆணிவேர்

முளைவேர் தடித்த முளைவேராக வளர்கிறது இதிலிருந்து துணை வேர்களான, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வேர்கள் தோன்றுகின்றன.

எ.கா. இருவித்திலைத் தாவரம் அவரை, மா


சல்லிவேர்

தாவரத்தின் கணுவிலிருந்து, ஏராளமான மெல்லிய சம பருமனுள்ள வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன.

எ.கா. ஒருவித்திலைத் தாவரம் நெல், புல்

 

3. நிலவாழிடம் மற்றும் நீர்வாழிடத்தை வேறுபடுத்துக.


நிலவாழிடம்

நிலப்பரப்பில் உள்ளது

இயற்கையாக காணப்படுவது

மனிதனால் உருவாக்கப்பட்டது

1. பாலைவனம்

2. புல்வெளி

3. காடுகள்

(எ.கா) வெப்ப வறட்சிப்பாலைவனங்கள்


நீர்வாழிடம்

நிரந்தரமாக அல்லது நீர் சூழ்ந்து காணப்படும்பகுதி

நன்னீர் வாழிடம்.

கடல் நீர் வாழிடம்

(எ.கா) ஆறுகள், ஏரிகள்

 

4. உங்களுடைய பள்ளித் பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களைப் பட்டியலிடுக.

செம்பருத்தி, பெரணிகள், குரோட்டன்கள், ரோஜா, லில்லி, சப்பாத்திக் கள்ளி (கள்ளி வகைகள்), தென்னை மரங்கள், ராயல்பனை, கிளிட்டோரியா, சைகஸ், தங்க அரளி, ஹெலிகோனியா, தக்காளி, கத்தரி, வெண்டை , முதலானவை மாடித் தோட்டத்தில் உள்ளன.

 

 

VII. விரிவாக விடையளி.

 

1. வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பட்டியலிடுக.

1.  ஊன்றுதல் - தாவரத்தை பூமியில் நிலை நிறுத்துகிறது.

2.  உறிஞ்சுதல் - மண்ணிலுள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.

3.  சேமிப்பு - சில தாவரங்கள் வேர்களில் உணவைச் சேமிக்கிறது.

(எ.கா) கேரட்.

தண்டின் பணிகள்

தாங்குதல் - கிளைகளையும், இலைகளையும், மலர்களையும், கனிகளையும் தாங்குகிறது.

கடத்தல் - நீரையும் தாது உப்புகளையும் வேர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு மேல் நோக்கிக் கடத்துகிறது.

• இலைகள் தயாரித்த உணவை மற்ற பகுதிகளுக்குக் கடத்துகிறது.

சேமித்தல் - கரும்பு போன்ற சில வகை தண்டுகள் உணவைச் சேமிக்கின்றன.


2. கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் படத்தில் அதன் தொடர்ச்சியான கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க


Tags : The Living World of Plants | Term 1 Unit 4 | 6th Science தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants : Questions Answers The Living World of Plants | Term 1 Unit 4 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம் : வினா விடை - தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம்