தலப்பட விவரணம் - புவியியல் - எல்லையோர விவரங்கள் | 11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map
எல்லையோர விவரங்கள்
எல்லையோர விவரங்கள் தலப்படத் தாள் எண், அமைவிடம், குறிப்பு சட்டகம், அட்ச தீர்க்க அளவைகளின் பரவல், அளவை, மாவட்டங்கள் போன்றவைகளை உள்ளடக்கியது. எல்லையோர விவரங்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வெளி எல்லை விவரங்கள் : வரிசை எண்கள், மாநில, மாவட்டத்தின் பெயர்கள் மற்றும் பிற தகவல்கள்.
இடைப்பட்ட எல்லை விவரங்கள் : குறிப்பு சட்ட எண், சம உயரக் கோட்டு எண், போக்குவரத்தால் இணைக்கப்பட்ட அடுத்த மிக அருகில் உள்ள இடங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் தூரம் கிலோ மீட்டரில் குறிக்கப்பட்டிருக்கும்.
உள் எல்லை விவரங்கள் அல்லது நிலவரைபட உட்பகுதி: பல்வேறு முறைக்குறியீடுகள் மற்றும் குறிகளைப் பயன்படுத்தி நிலத்தோற்றங்களை சித்தரிப்பது.