தலப்பட விவரணம் - புவியியல் - வரிசைக்கிரமமான நிலவரைபடங்கள் | 11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map
வரிசைக்கிரமமான நிலவரைபடங்கள் (Open Series Maps)
தேசிய நிலவரைபடக் கொள்கை 2005 ன் படி இந்திய நில அளவைத் துறை இரண்டு வகையான வரிசைக்கிரமமான நிலவரைபடங்களை வெளியிட்டுள்ளது.
1. பாதுகாப்புத் துறை நிலவரைபடங்கள்
(Defence Series Maps)
இந்த தலப் படங்கள் பல்வேறு அளவைகளில் உள்ளன. (எவரெஸ்ட் / IVGS -84 Datum and Polyconic/UTM projection). இந்த நிலவரைபடங்கள் முக்கியமாக பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்கின்றன. நாட்டிற்கான முழு தொடர் வரைபடங்களை பாதுகாப்பு அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது.
2. வரிசைக்கிரமமான நிலவரைபடங்கள் (Open Series Maps)
வரிசைக்கிரமமான தல நில வரைபடங்களை இந்திய நிலஅளவைத் துறை பிரத்தியேகமாக நாட்டின் அடிப்படை மற்றும் கூடுதல் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை ஊக்குவிக்குவிப்பதற்காக வெளியிடுகிறது. வரிசைக்கிரமமான தல படங்கள் பல்வேறு நிலவரைபட எண் மற்றும் யுனிவர்சல் டிரான்ஸ்வர்ஸ் மெர்கேட்டர் கோட்டுச் சட்டம் மீது WGS/84 என்ற மேற்கோளைக் கொண்டுள்ளது. குறிக்கப்பட்டிருக்கும். இந்த வரிசைக்கிரமமான தல படங்கள் கட்டுப்பாடற்றது.
படம் 11.2 வரிசைக்கிரமமான நிலவரைபடங்கள் (Open series Maps)
படம் 11.1 முறைக்குறியீடுகளும் குறியீடுகளும்