Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பதன் பொருள்

இந்தியப் பொருளாதாரம் - வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பதன் பொருள் | 11th Economics : Chapter 7 : Indian Economy

   Posted On :  06.10.2023 09:42 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்

வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பதன் பொருள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது.

இயல்

இந்தியப் பொருளாதாரம்



இலக்க முறை (Digital) பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளராகும். - சுந்தர் பிச்சை, CEO கூகுல்


கற்றல் நோக்கங்கள்

1. நடப்பு இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள், இயற்கை வளங்கள், உள்கட்டமைப்பு வசதிகளின் நிலை போன்றனவற்றைப் புரிந்து கொள்ளுதல்

2. தலைசிறந்த இந்தியப் பொருளியல் சிந்தனையாளர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்ளுதல்.


வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பதன் பொருள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், அதாவது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பைக் குறிக்கும்

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதன்றி, அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் அல்லது மக்களின் நலவாழ்வையும் உள்ளடக்கியதாகும். ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் என்பது மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (HDI) வாழ்க்கைத் தரக்குறியீடு (PQLI) மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI) ஆகியவற்றைப் பொறுத்தது.

மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI) 

"மொத்த நாட்டு மகிழ்ச்சி" என்ற தொடர் 1972 ஆம் ஆண்டு பூடான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது நிலைத்த முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சார மேம்பாடு, சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே உலக நாடுகள் வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான, வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் நாடுகளைக் குறிக்கும். (.கா.) அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான். வளர்ந்த நாடுகள் என்பவை முழுமையாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. மாறாக தன் வளங்களான நிலம், சுரங்கங்கள், உழைப்பாளர்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தாத நாடுகளை அதாவது குறைந்த தலா வருவாய் கொண்ட நாடுகளை வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகள் என்று அழைக்கிறோம். (.கா.) ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான், இந்தோனேசியா. இந்நாடுகளை முன்னேற்றமடையாத வளர்ச்சி குன்றிய, பின்தங்கிய மற்றும் மூன்றாம் உலக நாடுகள் என்றும் அழைக்கலாம்.

Tags : Indian Economy இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 7 : Indian Economy : Meaning of Growth and Development Indian Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம் : வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பதன் பொருள் - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்