தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - மாதிரிப்படுத்துதல் | 5th Maths : Term 2 Unit 6 : Information Processing
அலகு − 6
தகவல் செயலாக்கம்
மாதிரிப்படுத்துதல்
மாதிரிப்படுத்துதல் என்பது கணித கருத்துக்களை அறிமுகப்படுத்தும் ஒரு வழி. படங்கள் வரைதல், மாதிரிகள் தயாரித்தல், கணினி செயல்கள் அல்லது கணிதச் சூத்திரங்கள் போன்ற ஒரு செயல்பாடே மாதிரிப்படுத்துதல் ஆகும்.
வட்டம், செவ்வகம், முக்கோணம் போன்ற பல்வேறு வடிவங்கள் கொண்டு செய்யப்பட்ட பின்வரும் மாதிரிகளைக் காண்போம்.
வடிவியல் வடிவங்களாலானப் பொருள்கள்:
பல்வேறு வண்ண மணிகளால் ஆன கலைத்துவமிக்க சங்கிலிகளை காண்போம்.
முயன்று பார்
கொடுக்கப்பட்ட வடிவத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
விடை : சதுரங்களின் எண்ணிக்கை = 6
செயல்பாடு 1
செயல்பாடு 2
0, 1, 2, 3, 4, 5 ஆகிய எண்களுக்கு பதிலாக பின்வரும் வடிவங்கள் வரையப்பட்டுள்ளது. வடிவங்களின் எண்களை கண்டுபிடி.
தெரிந்து கொள்வோம்
ஒரு தெருவில் பூனைகளின் எண்ணிக்கையில் இரு மடங்கு நாய்கள் உள்ளன. இதனை, நாய்கள்−D, பூனைகள்−C எனக் கொண்டால், மேற்குறிப்பிட்ட சூழலை D = 2C என எழுதலாம்.
செயல்பாடு 3
பின்வருவனவற்றை நிறைவுசெய்க.
வட்டங்களின் எண்ணிக்கை = 17
முக்கோணங்களின் எண்ணிக்கை = 18
சதுரங்களின் எண்ணிக்கை = 2
முயன்று பார்
இந்த படத்தில் எத்தனை செவ்வகங்கள் உள்ளன?
விடை : செவ்வகங்களின் எண்ணிக்கை = 18
எடுத்துக்காட்டு
மூன்று வயது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோரால் வாங்கப்பட்ட ஒரு முக்கோண வடிவ இனிப்பப்பம் (cake) கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 பூக்கள் உள்ளன. நீங்கள் இப்போது இதனை ஒவ்வொரு துண்டிலும் 2 பூக்கள் இருக்குமாறு 3 சம துண்டுகளாக வெட்ட வேண்டும். இதனை மூன்று முறைக்கு மேல் வெட்டக்கூடாது.