Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | பன்முக எதிரொளிப்பு

ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பன்முக எதிரொளிப்பு | 8th Science : Chapter 3 : Light

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

பன்முக எதிரொளிப்பு

இவ்வாறு தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையானது கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட கோணத்தின் மதிப்பினைச் சார்ந்தது. இரு கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட கோணம் 360° இன் வகுத்தல் காரணிகளாக இருந்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிம்பங்கள் தோன்றுகின்றன.

பன்முக எதிரொளிப்பு


செயல்பாடு 4

இரண்டு சமதள ஆடிகளை எடுத்துக் கொள்க. அவற்றை ஒன்றுக்கொன்று செங்குத்தாகப் பொருத்தி, அவற்றிற்கு இடையில் ஒரு பொருளை வைக்கவும். இப்போது கண்ணாடிகளில் பிம்பங்களைக் காண இயலும். அவற்றில் எத்தனை பிம்பங்களை உங்களால் காணமுடிகிறது? உங்களால் மூன்று பிம்பங்களைக் காணமுடியும். இரண்டு கண்ணாடிகளைக் கொண்டு எவ்வாறு மூன்று பிம்பங்களை உருவாக்கமுடிகிறது?


மேற்கண்ட செயல்பாட்டிலிருந்து இரு சமதள ஆடிகளுக்கிடையே ஒரு பொருளை வைக்கும்போது அவற்றிற்கு இடைப்பட்ட சாய்வுக் கோணம் அதிக எண்ணிக்கையிலான ஏற்படுத்துகிறது என்பதனை பிம்பங்களை உங்களால் அறியமுடிகிறது. ஏனெனில், ஒரு கண்ணாடியால் உருவாக்கப்பட்ட பிம்பமானது, மற்றொரு கண்ணாடிக்குப் பொருளாக உள்ளது. அதாவது,முதல் கண்ணாடியில் தோன்றும் பிம்பம், இரண்டாவது கண்ணாடிக்குப் பொருளாக அமைகிறது. இதே போல், இரண்டாவது கண்ணாடியில் தோன்றும் பிம்பம் முதல் கண்ணாடிக்குப் பொருளாக அமைகிறது. ஆகவே, ஒரு பொருளுக்கு மூன்று பிம்பங்கள் தோன்றுகின்றன. இதுவே பன்முக எதிரொளிப்பு எனப்படுகிறது. இது போன்ற பன்முக எதிரொளிப்பினை ஆடையகங்களிலும், சிகை அலங்கார நிலையங்களிலும் நாம் காணலாம்.

இவ்வாறு தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையானது கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட கோணத்தின் மதிப்பினைச் சார்ந்தது. இரு கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட கோணம் 360° இன் வகுத்தல் காரணிகளாக இருந்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிம்பங்கள் தோன்றுகின்றன. சமதளக் கண்ணாடிகளுக்கு இடைப்பட்டக் கோணம் θ (தீட்டா) எனில், தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை 3600/θ-1- கண்ணாடிகளுக்கு கோணத்தின் மதிப்பைக் நீங்கள் குறைக்கும்போது தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று இணையாக வைக்கும்போது முடிவிலா எண்ணிக்கையில் பிம்பங்கள் தோன்றும்.

கணக்கு 3

ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.

தீர்வு

சாய்வுக் கோணம் = 90°

பிம்பங்களின் எண்ணிக்கை = 360 / θ-1

= 360 /900 --1=4-1=3

 

1. கலைடாஸ்கோப்

இது, ஒளியின் பன்முக எதிரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு எண்ணற்ற பிம்பங்களை உருவாக்கக்கூடிய சாதனம் ஆகும். இது ஒன்றுக்கொன்று சாய்வான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்ணாடிகளைக் கொண்டுள்ளது. விலை குறைந்த பொருள்களைக் கொண்டு இதனை வடிவமைக்கலாம். இக்கருவி உருவாக்கும் வண்ணமயமான பிம்பங்கள் உங்களை பொருளாகப் மகிழ்ச்சியூட்டக் கூடியவை. இந்த சாதனமானது குழந்தைகளால் விளையாட்டுப் பயன்படுத்தப்படுகிறது.


செயல்பாடு 5

மூன்று சமதளக் கண்ணாடிப் பட்டைகளை எடுத்துக்காண்டு அவற்றை ஒரு சமபக்க முக்கோண வடிவில் அமைக்கவும். அதன் பக்கங்களை அட்டைத்தாளைக் கொண்டு மூடவும். அதைப்போலவே அடிப்பகுதியையும் மூடவும். வளையல் துண்டு, மணி போன்ற வண்ணமயமான பொருள்களை உள்ளே போடவும். இப்பொழுது மேற்பகுதியை சுட்டைத்தாளைப் பயன்படுத்தி மூடி உள்பகுதியைப் பார்ப்பதற்கு. ஏதுவாக ஒரு சிறு துவாரத்தினை மேற்புறம் இடவும். இதனை கவரக்கூடிய பொருளாக மாற்ற அழகான வண்ணத்தாளைக் கொண்டு சுற்றிலும் ஒட்டவும். இப்பொழுது மெதுவாக, அதைச்சுற்றிக்கொண்டே துவாரத்தின் வழியாக உட்புறத்தினைப் பார்க்கவும். ஓர் அழகான வடிவத்தை உங்களால் காணமுடியும். எச்சரிக்கை கண்ணாடித் துண்டுகளைக் கையாளவும். கவனமாகக் ஆசிரியரின் மேற்பார்வையில் இந்த செயல்பாட்டினைச் செய்யவும்.

 

2. பெரிஸ்கோப்

ஒரு பொருள் அல்லது நீர் மூழ்கிக்கப்பலுக்கு மேலாக அல்லது அதைச் சுற்றியுள்ள பிற பொருள்கள் அல்லது கப்பல்களைப்பார்ப்பதற்காகபயன்படுத்தப்படும்கருவியே பெரிஸ்கோப் ஆகும். ஒளி எதிரொளித்தல் விதிகளின் அடிப்படையில் இக்கருவியானது செயல்படுகிறது. இது நீண்ட வெளிப்பகுதியைக் கொண்டுள்ளது. அதன் உட்பகுதியில் 45° கோணச் சாய்விவ் ஒவ்வொரு, முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது


பொருத்தப்பட்டுள்ளது. நீண்ட தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் மேல்முனையில் உள்ள கண்ணாடியில் பட்டு. செங்குத்தாகக் கீழ்நோக்கி எதிரொளிக்கப்படுகிறது. இவ்வாறு வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள கண்ணாடியிலும் பட்டு, எதிரொளிக்கப்பட்டு கிடைமட்டத் திசையில் சென்று பார்ப்பவரின் கண்களை அடைகிறது. சிக்கலான அமைப்புடைய சிலவகை பெரிஸ்கோப்களில் உயர் காட்சித்திறனைப் பெறுவதற்காக, கண்ணாடிகளுக்குப் பதிலாக ஒளியிழைகள் ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாட்டைப் பொருத்து இதன் உட்பகுதியில் உள்ள கண்ணாடிகளுக்கிடையே உள்ள தூரமானது மாற்றியமைக்கப்படுகிறது.

பயன்கள்

• போர்களிலும், நீர்மூழ்கிக் கப்பல்களை வழிநடத்துவதற்கும் பெரிஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது.

• பதுங்கு குழியிலிருந்து இலக்கினைக் குறி பார்ப்பதற்கும், சுடுவதற்கும் ராணுவத்தில் இது பயன்படுகிறது.

• தடைசெய்யப்பட்ட ராணுவப்பகுதிகளுக்குள் செல்லாமலேயே பெரிஸ்கோப்பினைப் பயன்படுத்தி அந்த இடங்களை புகைப்படம் எடுக்க முடியும்.

• உடல் உள்உறுப்புக்களைப் பார்ப்பதற்கு ஒளியிழை பெரிஸ்கோப்பினை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.


Tags : Light | Chapter 3 | 8th Science ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 3 : Light : Multiple Reflections Light | Chapter 3 | 8th Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : பன்முக எதிரொளிப்பு - ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்