Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | இருவித்திலைத் தாவரத் தண்டு மற்றும் வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்குதல்

உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - இருவித்திலைத் தாவரத் தண்டு மற்றும் வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்குதல் | 10th Science : Bio-Botany Practicals

10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள்

இருவித்திலைத் தாவரத் தண்டு மற்றும் வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்குதல்

இருவித்திலைத் தாவரத் தண்டு மற்றும் வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை கொடுக்கப்பட்ட கண்ணாடி நழுவத்தின் மூலம் கண்டறிதல் மற்றும் உற்று நோக்குதல்.

இருவித்திலைத் தாவரத் தண்டு மற்றும் வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்குதல் 


நோக்கம்:

இருவித்திலைத் தாவரத் தண்டு மற்றும் வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை கொடுக்கப்பட்ட கண்ணாடி நழுவத்தின் மூலம் கண்டறிதல் மற்றும் உற்று நோக்குதல்.


கண்டறிதல்: 

அ) கொடுக்கப்பட்ட கண்ணாடி நழுவம் - இருவித்திரைத் தாவரத் தண்டின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகும். 


இருவித்திலைத் தாவரத் தண்டின் குறுக்கு வெட்டுத் தோற்றம்:

இருவித்திலை தாவரத் தண்டின் குறுக்கு வெட்டுத் தோற்றம்:

1. வாஸ்குலார் கற்றைகள் வளைய வடிவில் காணப்படுகிறது.

2. ஒன்றிணைந்த, ஒருங்கமைந்த, திறந்த உள்நோக்கிய சைலம் கொண்ட வாஸ்குலார் கற்றைகள்.

3. தளத் திசுவானது புறணி, அகத்தோல் அடுக்கு, பெரிசைக்கிள் மற்றும் பித் என வேறுபாடு அடைந்துள்ளன. 

4. ஹைபோடெர்மிஸ் 3லிருந்து 6 அடுக்கு கோலன்கைமா திசுவால் ஆனது.



ஆ) கொடுக்கப்பட்ட கண்ணாடி நழுவம் - இருவித்திலைத் தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகும்.

இருவித்திலை தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றம்:

இருவித்திலை தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றம்: 

1. வாஸ்குலார் கற்றையானது ஆரப்போக்கு அமைவில் அமைந்துள்ளது. 2. சைலம் 2லிருந்து 4 கற்றைகளாக உள்ளன. 

3. காஸ்பெரியன் பட்டைகள் மற்றும் வழிச்செல்கள் அகத்தோலில் காணப்படுகிறது. 

4. புறணிப் பகுதியானது பாரன்கைமா செல்களால் ஆனது.




Tags : Bio-Botany Laboratory Practical Experiment உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை.
10th Science : Bio-Botany Practicals : Observation of Transverse Section of Dicot stem and Dicot Root Bio-Botany Laboratory Practical Experiment in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள் : இருவித்திலைத் தாவரத் தண்டு மற்றும் வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்குதல் - உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள்