உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - ஒங்குதன்மை விதியை அறிதல் | 10th Science : Bio-Botany Practicals
ஒங்குதன்மை விதியை அறிதல்
ஓங்குதன்மை விதியை மாதிரி / படம் / புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அறிதல். மெண்டலின் ஒரு பண்பு கலப்பு ஆய்வினை பட்டாணிச் செடியின் புறத்தோற்ற விகிதம் மற்றும் ஜீனாக்க விகிதத்தையும் சோதனைப் பலகையின் மூலம் கண்டறிதல்.
வண்ணச் சுண்ணக்கட்டி அல்லது வரைபடத்தாள்
உயரமான வண்ணச் சுண்ணக்கட்டிகள் மற்றும் குட்டையான சுண்ணக்கட்டிகளைப் பயன்படுத்தி பெற்றோர் தலைமுறைகளையும், கேமீட்டுகளையும் கணித்தல்.
புறத்தோற்ற விகிதம் 3:1 (நெட்டை : குட்டை)
ஜீனாக்க விகிதம் 1:2:1 (TT: Tt : tt)
ஒரு பண்பின் இரு வேறுபட்ட தோற்றங்களைக் கொண்ட இரு பெற்றோர் தாவரங்களை கலப்புறச் செய்வது ஒரு பண்புக் கலப்பு எனப்படும்.
நெட்டை மற்றும் குட்டை ஆகிய பண்புகளில் வேறுபட்ட இரு தாவரங்களை கலப்புறச் செய்யும் போது (F1), முதல் தலைமுறையில் ஒரு பண்பு மட்டுமே (நெட்டை) வெளிப்படுகிறது. இவ்வாறு முதல் தலைமுறையில் எப்பண்பு வெளிப்படுகிறதோ அப்பண்பு (நெட்டை) ஓங்கு பண்பு எனப்படும். வெளிப்படாத பண்பு (குட்டை) ஒடுங்கு பண்பு எனப்படும்.