எண்கள் | பருவம்-3 அலகு 1 | 2வது கணக்கு - வரிசை எண்களும் குறிப்பிட்ட எண்களும் | 2nd Maths : Term 3 Unit 1 : Numbers
வரிசை எண்களும்
குறிப்பிட்ட எண்களும்
மாயா
சில தானியங்களைப் பறவைகளுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்தாள். அவள் தானியங்களைத்
தரையில் இட்டாள். பறவைகளும் விலங்குகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தானியங்களை
உட்கொண்டன. அவை வந்த வரிசைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. முதலாவதாகக் காகம் வந்தது.
2. இரண்டாவதாகப் பச்சைக் கிளி வந்தது.
3. மூன்றாவதாக புறா வந்தது.
4. நான்காவதாக மைனா வந்தது.
5. ஐந்தாவதாக அணில் வந்தது.
6. ஆறாவதாக குறும்புக்காரக் குரங்கு
வந்து அனைத்து தானியங்களையும் உண்டு முடித்தது.
நூலகத்தில்
முதல் பத்து அலமாரிகள் பருவ இதழ்களுக்காகவும், தினசரிகளுக்காகவும்
ஒதுக்கப்பட்டிருந்தன. 11ஆம் அலமாரியிலிருந்து நூல்கள்
அடுக்கி வைக்கப்பட்டுள்ள விதம் கீழே காண்பிக்கப்பட்டுள்ளன.
மேலே
உள்ள படத்தைப் பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி
i) கதை நூல்களை எந்த அலமாரியிலிருந்து எடுக்க முடியும்? 13வது
ii) வரலாற்று நூல்கள் 16வது இலிருந்து பெற முடியும்
iii) எனக்குப் பிடித்தது 16வது நூல்கள். அவை 18வது அலமாரியில் இருக்கின்றன.
iv) கணித நூல்கள் எந்த இரு அலமாரிகளுக்கு இடையில் இருக்கின்றன? 18வது
v) ஆங்கில நூல்கள் 11வது அலமாரிக்கு அருகில் உள்ளன.
vi) எனக்குப் பொது அறிவு நூல்கள் பிடிக்கும். அவை 13வது அலமாரியில் உள்ளன.
நவம்பர்
14-இன் சிறப்பு என்ன?
ஆஹா! குழந்தைகள்
தினம்
உன்னுடைய
பிறந்த நாள் எப்பொழுது?
என்
பிறந்தநாள் 29 நவம்பரில் வருகின்றது.
நவம்பர்
14 ஆம் நாள், நவம்பர் 29 ஆம்
நாள் ஆகியவை வரிசை எண்கள். இது எண்களின் வரிசை முறையைக் குறிக்கும்.
14, 29 ஆகிய எண்கள் குறிப்பிட்ட எண்கள். இவை எண்ணுவதற்குப் பயன்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள நாட்காட்டியைக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு
விடையளிக்க.
1) நவம்பர் மாதத்தின் 3ஆவது வெள்ளி 15வது தேதி ஆகும்.
ii)
2019 ஆம் ஆண்டின் நவம்பர் 7 ஆம் தேதி வியாழக்
கிழமையில் வரும்.
iii) அந்த மாதத்தின் முதல் ஞாயிறு 3வது நவம்பர் தேதி ஆகும்.
iv)
15-11-2019 நவம்பர் மாதத்தின் 3வது வாரத்தில் வருகிறது.
v) நவம்பர் 4 ஆம் நாள் சனிக்கிழமை எனில், அந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை 18வது தேதியில் வரும்.
(i) உன் அப்பா அல்லது அம்மாவின் அலை பேசி எண்ணை எழுதவும்.
8883375808
இதிலிருந்து
சரியான எண்களைத் தெரிவு செய்து அந்த இலக்கத்தைக் கட்டங்களில் பொருத்துக .
7 வது இலக்கம் 5
6 வது இலக்கம் 7
2 வது இலக்கம் 8
கடைசி
எண் உள்ள இலக்கம் 10வது
(ii) நான் யார் என்று கண்டுபிடியுங்கள்.
என்னைக்
கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள் இதோ!
* என் மூன்றாம் எழுத்து காட்டில் இருக்கும், ‘மேட்டில்'
இருக்காது.
* என் நான்காம் எழுத்து வேலையில் இருக்காது; ‘வேலியில்'
இருக்கும்.
* 'நான்' என்ற சொல்லின் முதலாம்
எழுத்தே என் முதல் எழுத்தாகும்.
* 'கற்க' என்ற சொல்லின் இரண்டாம்
எழுத்தும் என் இரண்டாம் எழுத்தும் ஒன்றாகும்.
விடை : நாற்காலி
(iii) நான் யார் எனக் கண்டுபிடியுங்கள்.
* என் முதல் மற்றும் ஐந்தாம் எழுத்துகள்
வி' ஆகும்.
* என் இரண்டாம் மற்றும் நான்காம் எழுத்துக்கள் க' ஆகும்.
* ‘ட' என்ற எழுத்து என் மூன்றாம் எழுத்தாகும்.
* நான்
உங்களை மகிழ்விக்கும் சொல் ஆற்றல் கொண்டவன்.
விடை : விகடகவி
(iv) பூவின் பெயரைக் கண்டுபிடி.
* என் ஐந்தாம் எழுத்து ‘த்’
மற்றும் மூன்றாம் எழுத்து ‘ப' ஆகும்.
* என் இரண்டாம் எழுத்து ‘அம்மா' என்ற சொல்லில் வரும் இரண்டாம் எழுத்தாகும்.
* 'செடியில்' உள்ள முதல்
எழுத்தும் என் முதல்
எழுத்தும் ஒன்றே.
* என் ஆறாம் எழுத்து ‘தென்னையில்’ இல்லை ‘திண்ணையில்' உண்டு.
* என் நான்காம் எழுத்து ‘பருப்பில்' உண்டு பரப்பில் இல்லை.
விடை : செம்பருத்தி