அமைப்புகள் | இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்களில் உள்ள எண் அமைப்புகள். | 3rd Maths : Term 2 Unit 2 : Patterns
ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்களில் உள்ள அமைப்புகள் மற்றும் அவற்றின் கூட்டல் மற்றும் கழித்தலில் உள்ள எண் அமைப்புகள்.
நினைவுகூர்தல்
கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் உள்ள ஒற்றை எண்களை வட்டமிடவும்.
i) 26, 29, 37, 42, 45.
ii) 85, 84, 75, 76, 65, 64.
iii) 11, 22, 33, 44, 55, 66.
iv) 357, 896, 572, 951, 865, 423.
v) 952, 698, 342, 780, 920, 850.
மேலே உள்ள எண்களிலிருந்து அட்டவணையை நிறைவு செய்க
ஒற்றை எண்கள்
29,37,45
85,75,65
11, 33, 55,
357, 951, 865,423
இரட்டை எண்கள்
26, 42
84, 76, 64,
22, 44, 66
896, 572,
952, 698, 342, 780,920,850
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் அட்டவணையை உற்றுநோக்கவும். ஒற்றை எண்களைப் பச்சை நிறத்திலும் இரட்டை எண்களை நீல நிறத்திலும் வண்ணமிடவும்.
மேற்கண்ட அட்டவணையில் ஒற்றை எண்களும் இரட்டை எண்களும் மாறி மாறி வருவதை நாம் காணலாம்.
அமைப்புகளை நிறைவு செய்யவும்.
i) 21, 22, 23, 24, 25, 26, 27, 28.
ii) 1, 3, 5, 7, 9, 11, 13, 15.
iii) 2, 4, 6, 8, 10, 12, 14, 16.
iv) 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93,.
v) 39, 41, 43, 45, 47, 49, 51, 53,.
ஒற்றை எண்களை மற்றும் இரட்டை எண்களை கூட்டுவதிலும் கழிப்பதிலும் உள்ள அமைப்புகளை நாம் அறிவோம்.
பின்வரும் எண்களைக் கூட்டுக.
i) 2 2 இரட்டை
+ 3 2 இரட்டை
−−−−−−−−
5 4 இரட்டை
−−−−−−−−
ii) 7 3 ஒற்றை
+ 8 5 ஒற்றை
−−−−−−−−
158 இரட்டை
−−−−−−−−
iii) 7 5 5 ஒற்றை
+ 2 8 6 இரட்டை
−−−−−−−−
1 0 4 1 ஒற்றை
−−−−−−−−
iv) 8 5 3 ஒற்றை
+ 3 2 5 ஒற்றை
−−−−−−−−
1 1 7 8 இரட்டை
−−−−−−−−
v) 9 7 8 இரட்டை
+ 8 7 6 இரட்டை
−−−−−−−−
1 8 5 4 இரட்டை
−−−−−−−−
vi) 2 5 2 இரட்டை
+ 5 5 3 ஒற்றை
−−−−−−−−
8 0 5 ஒற்றை
−−−−−−−−
இதிலிருந்து ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்களைக் கூட்டும்போது ஓர் அமைப்பு உள்ளதை நாம் காணலாம்.
நாம் உற்றுநோக்கிய அமைப்புகளை அட்டவணைப்படுத்துவோம்.
i) ஒற்றை எண் + ஒற்றை எண் = இரட்டை எண்
ii) இரட்டை எண் + இரட்டை எண் = இரட்டை எண்
iii) ஒற்றை எண் + இரட்டை எண் = ஒற்றை எண்
iv) இரட்டை எண் + ஒற்றை எண் = ஒற்றை எண
பின்வரும் எண்களை கழிக்கவும்.
i) 7 5 6 இரட்டை
− 2 5 2 இரட்டை
−−−−−−−−
5 0 4 இரட்டை
−−−−−−−−
ii) 8 9 5 ஒற்றை
− 2 5 3 ஒற்றை
−−−−−−−−
6 4 2 இரட்டை
−−−−−−−−
iii) 4 9 7 ஒற்றை
− 4 3 2 இரட்டை
−−−−−−−−
0 6 5 ஒற்றை
−−−−−−−−
iv) 5 7 6 இரட்டை
− 2 2 3 ஒற்றை
−−−−−−−−
3 5 3 ஒற்றை
−−−−−−−−
v) 2 3 5 ஒற்றை
+ 5 2 1 ஒற்றை
−−−−−−−−
7 5 6 இரட்டை
−−−−−−−−
vi) 7 8 2 இரட்டை
+ 1 4 1 ஒற்றை
−−−−−−−−
9 2 3 ஒற்றை
−−−−−−−−
நாம் உற்றுநோக்கிய அமைப்புகளை அட்டவணைப்படுத்துவோம்.
i) ஒற்றை எண் - ஒற்றை எண் = இரட்டை எண்
ii) இரட்டை எண் - இரட்டை எண் = இரட்டை எண்
iii) ஒற்றை எண் - இரட்டை எண் = ஒற்றை எண்
iv) இரட்டை எண் - ஒற்றை எண் = ஒற்றை எண்