தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 16 : Plant and Animal Hormones
தாவர மற்றும்
விலங்கு ஹார்மோன்கள்
நினைவில்
கொள்க
• ஆக்சின்கள்
வேர் மற்றும் தண்டின் நுனியில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து
நீட்சிப் பகுதிக்கு இடம்பெயர்கின்றன.
• சைட்டோகைனின்கள் தாவர
செல்களில் செல் பகுப்பு அல்லது சைட்டோகைனஸிஸ் நிகழ்வை ஊக்குவிக்கின்றன.
• விதையிலாக் கனிகள்
(பார்த்தினோகார்பிக் கனிகள்) உருவாதலை ஜிப்ரல்லின்கள் தூண்டுகின்றன.
• அப்சிசிக் அமிலம், உதிர்தல்
மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஆகும். இது பல்வேறு வகையான
இறுக்க நிலை காலங்களில் தாவரங்களின் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.
• எத்திலின், கனிகள்
முதிர்ச்சி அடைவதிலும் பழுப்பதிலும் முக்கியப் பங்காற்றும் வாயு நிலை ஹார்மோன்
• பிட்யூட்டரி சுரப்பி பிற
நாளமில்லாச் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதால் இது “தலைமைச்சுரப்பி” என்றும் அழைக்கப்படுகிறது.
• தைராய்டு சுரப்பியில்
சுரக்கும் ஹார்மோன்கள் ட்ரை அயோடோதைரோனின் (T3), டெட்ரா அயோடோ தைரோனின் அல்லது தைராக்சின் (T4)
• பாராதார்மோன் இரத்தத்தில்
கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.
• கணையச் செல்கள் இன்சுலின், குளுக்கோகான்
ஆகியவற்றைச் சுரக்கின்றன. அவை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கின்றன.
• அட்ரினல் கார்டெக்ஸில்
சுரக்கும் ஹார்மோன்கள் கார்ட்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரான், அட்ரினல்
மெடுல்லாவில் சுரக்கும் ஹார்மோன்கள் எபிநெப்ரின் மற்றும் நார் எபிநெப்ரின்.
• ஆண் இனப்பெருக்கச்
சுரப்பியான விந்தகம் டெஸ்டோஸ்டீரானையும் பெண் இனப்பெருக்கச் சுரப்பியான
அண்டச்சுரப்பி ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானையும் சுரக்கின்றது.