Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | நினைவில் கொள்ளவேண்டியவை

அண்டம் மற்றும் விண்வெளி | மூன்றாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்ளவேண்டியவை | 7th Science : Term 3 Unit 2 : Universe and Space

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : அண்டம் மற்றும் விண்வெளி

நினைவில் கொள்ளவேண்டியவை

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : அண்டம் மற்றும் விண்வெளி : நினைவில் கொள்ளவேண்டியவை

நினைவில் கொள்ளவேண்டியவை

அண்டத்திக் குறித்துப் படிக்கும் படிப்புக்கு வானியல் என்று பெயர்

அண்டத்தில் விண்மீன் திரள்கள், கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், துணைக்கோள்கள், பருப்பொருள் மற்றும் ஆற்றல் அடங்கியுள்ளது.

வளர்பிறைக் காலத்தில் உள்ள நிலவு முதல் கால்பாகம் எனவும், தேய்பிறைக் காலத்தில் உள்ள நிலவு மூன்றாம் கால் பாகம் எனவும் அழைக்கப்படுகிறது.

பிறை நிலவு என்பது நிலவானது அரையளவு ஒளியை விடக் குறைந்த அளவு ஒளியில் இருக்கும் காலம் ஆகும். கூனல்நிலவு என்பது நிலவானது அரையளவு ஒளியை விட அதிக ஒளியில் இருக்கும் காலம் ஆகும்.

கோள்கள் தங்களது பாதையை திருப்பிக்கொள்ளும் நிகழ்வு பிற்போக்கு இயக்கம் எனப்படும்

நம் முன்னோர்கள் கூறிய புவிமையக் கோட்பாடானது, பூமியை மையமாகக் கொண்டு சூரியன் மற்றும் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது.

சூரிய மையக் கொள்கையானது சூரியனை மையமாகக் கொண்டு பூமி மற்றும் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது.

சூரியமையக் கொள்கைக்கு கண்கூடான நிரூபணத்தினை கலிலியோ தந்தார்.

இந்த உலகில் ஆயிரம் கோடி விண்மீன் திரள்களாவது உள்ளன.

ஒரு விண்மீன் திரள் என்பது ஈர்ப்பு விசையால் ஒருங்கமைக்கப்பட்ட அனேக விண்மீன்களின் தொகுப்பு ஆகும்.

புவியிலிருந்து பார்க்கும்பொழுது தென்படும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்புக்கு விண்மீன் மண்டலம் என்று பெயர்.

நிலையான சுற்றுப் பாதையில் கோள்களைச் சுற்றி வரும் பொருள்களுக்கு துணிக்கோள்கள் என்று பெயர்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தான் இந்திய விண்னவெளி ஆராய்ச்சி நிலையமாகும்(ISRO)




இணையச் செயல்பாடு

அண்டம் மற்றும் விண்வெளி


ஒளி எதிரொளிப்பு விதியை தெரிந்துகொள்ளுதல்




படிநிலைகள்

படி 1: URL அல்லது Q.R.Code ஐ பயன்படுத்தி செயல்பாடு பக்கத்தை திறக்கவும்

படி 2: Star பட்டனை Click செய் Side bar ஐத் திறக்கவும்

படி 3: Side ன் மேல் icon ஐ செய்க. மேலும் பட்டனை Click செய்க. RUN INTRO பட்டனை Clickசெய்க இப்போது சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தின் பல்வேறு காட்சிளைக் காணலாம்.

படி 4: இன் கீழ்ப்புறம் உள்ள ஐ செய்தால் குறிப்பிட்ட கோள் நட்சத்திரக் கூட்டம், விண்மீன்கள்மற்றும் விண்கலங்களைத் தேடலாம். 

படி 5: Mouse ஐ இடது, வலது, மேல், கீழ் என நகர்வதன் மூலம் வெவ்வேறு காட்சிகளைக்காணலாம். மேலும் Mouse ஐ Scroll செய்வதன் மூலம் படங்களை பெரிதாக்கவும் சிறிதாக்கவும் செய்யலாம்.

படி6: play பட்டனைத் தேர்வு செய்து ஆண்டு வாரியாக சூரியக் குடும்பத்தைக் காணலாம்.




அண்டம் மற்றும் விண்வெளி URL:

https://www.solarsystemscope.com/ https://play.google.com/store/apps/details?id=air.com.eu.inove.sss2


*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. 

*தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.




Tags : Universe and Space | Term 3 Unit 2 | 7th Science அண்டம் மற்றும் விண்வெளி | மூன்றாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 2 : Universe and Space : Points to Remember Universe and Space | Term 3 Unit 2 | 7th Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : அண்டம் மற்றும் விண்வெளி : நினைவில் கொள்ளவேண்டியவை - அண்டம் மற்றும் விண்வெளி | மூன்றாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : அண்டம் மற்றும் விண்வெளி