அண்டம் மற்றும் விண்வெளி | மூன்றாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்ளவேண்டியவை | 7th Science : Term 3 Unit 2 : Universe and Space
நினைவில் கொள்ளவேண்டியவை
❖ அண்டத்திக் குறித்துப் படிக்கும் படிப்புக்கு வானியல் என்று பெயர்
❖ அண்டத்தில் விண்மீன் திரள்கள், கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், துணைக்கோள்கள், பருப்பொருள் மற்றும் ஆற்றல் அடங்கியுள்ளது.
❖ வளர்பிறைக் காலத்தில் உள்ள நிலவு முதல் கால்பாகம் எனவும், தேய்பிறைக் காலத்தில் உள்ள நிலவு மூன்றாம் கால் பாகம் எனவும் அழைக்கப்படுகிறது.
❖ பிறை நிலவு என்பது நிலவானது அரையளவு ஒளியை விடக் குறைந்த அளவு ஒளியில் இருக்கும் காலம் ஆகும். கூனல்நிலவு என்பது நிலவானது அரையளவு ஒளியை விட அதிக ஒளியில் இருக்கும் காலம் ஆகும்.
❖ கோள்கள் தங்களது பாதையை திருப்பிக்கொள்ளும் நிகழ்வு பிற்போக்கு இயக்கம் எனப்படும்
❖ நம் முன்னோர்கள் கூறிய புவிமையக் கோட்பாடானது, பூமியை மையமாகக் கொண்டு சூரியன் மற்றும் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது.
❖ சூரிய மையக் கொள்கையானது சூரியனை மையமாகக் கொண்டு பூமி மற்றும் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது.
❖ சூரியமையக் கொள்கைக்கு கண்கூடான நிரூபணத்தினை கலிலியோ தந்தார்.
❖ இந்த உலகில் ஆயிரம் கோடி விண்மீன் திரள்களாவது உள்ளன.
❖ ஒரு விண்மீன் திரள் என்பது ஈர்ப்பு விசையால் ஒருங்கமைக்கப்பட்ட அனேக விண்மீன்களின் தொகுப்பு ஆகும்.
❖ புவியிலிருந்து பார்க்கும்பொழுது தென்படும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்புக்கு விண்மீன் மண்டலம் என்று பெயர்.
❖ நிலையான சுற்றுப் பாதையில் கோள்களைச் சுற்றி வரும் பொருள்களுக்கு துணிக்கோள்கள் என்று பெயர்.
❖ பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தான் இந்திய விண்னவெளி ஆராய்ச்சி நிலையமாகும்(ISRO)
இணையச் செயல்பாடு
அண்டம் மற்றும் விண்வெளி
ஒளி எதிரொளிப்பு விதியை தெரிந்துகொள்ளுதல்
படிநிலைகள்
படி 1: URL அல்லது Q.R.Code ஐ பயன்படுத்தி செயல்பாடு பக்கத்தை திறக்கவும்
படி 2: Star பட்டனை Click செய் Side bar ஐத் திறக்கவும்
படி 3: Side ன் மேல் icon ஐ செய்க. மேலும் பட்டனை Click செய்க. RUN INTRO பட்டனை Clickசெய்க இப்போது சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தின் பல்வேறு காட்சிளைக் காணலாம்.
படி 4: இன் கீழ்ப்புறம் உள்ள ஐ செய்தால் குறிப்பிட்ட கோள் நட்சத்திரக் கூட்டம், விண்மீன்கள்மற்றும் விண்கலங்களைத் தேடலாம்.
படி 5: Mouse ஐ இடது, வலது, மேல், கீழ் என நகர்வதன் மூலம் வெவ்வேறு காட்சிகளைக்காணலாம். மேலும் Mouse ஐ Scroll செய்வதன் மூலம் படங்களை பெரிதாக்கவும் சிறிதாக்கவும் செய்யலாம்.
படி6: play பட்டனைத் தேர்வு செய்து ஆண்டு வாரியாக சூரியக் குடும்பத்தைக் காணலாம்.
அண்டம் மற்றும் விண்வெளி URL:
https://www.solarsystemscope.com/ https://play.google.com/store/apps/details?id=air.com.eu.inove.sss2
*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.
*தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.