நமது சுற்றுச்சூழல் | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 3 Unit 4 : Our Environment
நினைவில் கொள்க
❖ உயிரினக் கூறுகளும், உயிரற்ற
கூறுகளும் ஒன்றோடொன்று ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
❖ இரண்டு வகையான சூழ்நிலை
மண்டலங்கள் உள்ளன. 1. நிலவாழ் சூழ்நிலை மண்டலம். 2 நீர்வாழ் சூழ்நிலை மண்டலம்
❖ ஒரு சூழ்நிலை மண்டலத்தில்
உண்ணுதல் மற்றும் உண்ணப்படுதலுக்கான வரிசைமுறையை நாம் உணவுச்சங்கிலி என்கிறோம்.
❖ நம் தினசரி வாழ்கையில்
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் மற்றும் சிதையக்கூடிய கழிவுகளைத் தனித்தனியாக
பிரித்து வைக்க வேண்டும்.
❖ மாசுபாடற்ற உலகை உருவாக்க
3R அவசியம். அவை Reduce – பயன்பாட்டைக் குறைத்தல், Reuse பயன்படுத்துதல், Recycle மீண்டும்
மறுசுழற்சி செய்தல்
❖ திடக்கழிவுகளை எரிக்க வேண்டாம்,
அது காற்று மற்றும் நில மாசுபாட்டை
❖ சுற்றுச்சூழலில் தீங்கு
விளைவிக்கும், தேவையற்ற பொருள்கள் சேர்வதையே நாம் மாசுபாடு என்கிறோம்.
❖ மாசுபாட்டை நாம் நான்கு
வகைகளாப் பிரிக்கலாம் அவை காற்றுமாசுபாடு, நீர் மாசுபாடு, நில மாசுபாடு, ஒலி மாசுபாடு.
❖ மாசுபாட்டைக் குறைத்து,
கழிவுகளைச் சரியாகக் கையாள ஒவ்வொரு மாணவ, மாணவியும் எடுக்கும் சிறிய முயற்சிகளும்,
நல்ல பழக்கங்களும் நிச்சயமாக நம் சுற்றுசூழலைப் பாதுகாக்கும்.
இணையச்செயல்பாடு
உணவுச்சங்கிலி
மற்றும் வெவ்வேறு வாழ்வியல் முறைகளைக் கொண்ட உயிரிகளின் குறிப்பிட்ட சூழலில் உணவு சங்கிலி
கொண்ட சூழலை அறிவோமா!
படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி
செயல்பாட்டின் உணவுச் சங்கிலி பக்கத்திற்குச் செல்லவும்.
படி 2: சுட்டியைப் பயன்படுத்தி உணவுச்சங்கிலியில் இடம்பெறும்
தாவரம் அல்லது விலங்குகளைக் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் பொருத்தவும்.
படி 3: சரியாகப் பொருத்திய பின் உணவு சங்கிலியின் செயல்முறைக்
காட்சியைப் பார்க்க முடியும்.
படி 4: இதே போல் தொடர்ந்து பல்வேறு உணவுச்சங்கிலி நிகழ்வுளை
அடுத்தடுத்து விளையாடிக் கற்கவும்.
சூழ்நிலை மண்டலம்
உரலி:
http://www.sheppardsoftware.com/content/animals/kidscorner/games/
foodchaingame.htm
*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.