Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | உரைநடை: தமிழ்நாட்டில் காந்தி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தமிழ்நாட்டில் காந்தி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu

   Posted On :  03.07.2023 05:50 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது

உரைநடை: தமிழ்நாட்டில் காந்தி: கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது : உரைநடை: தமிழ்நாட்டில் காந்தி: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

) கோவை

) மதுரை

) தஞ்சாவூர்

) சிதம்பரம்

[விடை : ) மதுரை]

 

2. காந்தியடிகள் ----------- அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

) நாமக்கல் கவிஞர்

) பாரதிதாசன்

) .வே.சாமிநாதர்

) பாரதியார்

[விடை : ) .வே.சாமிநாதர்]

 

பொருத்துக

1. இலக்கிய மாநாடு பாரதியார்

2. தமிழ்நாட்டுக் கவிஞர் சென்னை

3. குற்றாலம் ஜி.யு.போப்

4. தமிழ்க் கையேடு அருவிபாரதியார்

விடை

1. இலக்கிய மாநாடு சென்னை

2. தமிழ்நாட்டுக் கவிஞர் பாரதியார்

3. குற்றாலம் அருவி

4. தமிழ்க் கையேடு ஜி.யு.போப்

 

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலோசனை நாம் எச்செயலைச் செய்தாலும் பெரியவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும்.

2. பாதுகாக்க நம் நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

3. மாற்றம் பருவமழை பொய்த்ததால் பூமியின் தட்பவெப்பநிலை மாற்றம் அடைகிறது.

4. ஆடம்பரம் நாம் ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்த்து எளிமையாக வாழவேண்டும்.

 

குறுவினா

1. காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?

விடை

காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் நுழையாததற்குக் காரணம் :

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லை என்பதால் காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்லவில்லை.

 

2. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.

விடை

1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். .வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். .வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும்

ஆவல் உண்டாகிறதுஎன்று கூறினார் காந்தியடிகள்.

 

சிறுவினா

1. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.

விடை

காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு :

(i) காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.

(ii) செல்லும் வழியில், வயலில் வேலை செய்யும் உழவர்களைக் கண்டார். அவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருந்தனர்.

(iii) அப்போது, காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

(iv) பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார்.

(v) அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அந்த எளிமைத் திருக்கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார்.

 

2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.

விடை

(i) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.

(ii) ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

(iii) திருக்குறள் அவரைக் கவர்ந்த நூல்.

(iv) 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். .வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.

(v) .வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்து, “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறதுஎன்று கூறினார். இந்நிகழ்வுகளே காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன.

 

சிந்தனை விளா

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?

விடை

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகள் :

(i) உண்மை பேசுதல்

(ii) நேர்மை

(iii) இன்னா செய்யாமை

(iv) பிறர் துன்பம் தீர்க்கும் திறம்

(v) அகிம்சை வழிப் போராட்டம்

(vi) ஆடம்பரத்தை எதிர்த்து எளிமையைப் போற்றியமை

(vii) தீண்டாமையை எதிர்த்தமை

(viii) ஒற்றுமையைப் போற்றியமை.


 

கற்பவை கற்றபின் 

 

 

1. காந்தியடிகளின் பொன்மொழிகளைத் திரட்டுக.

விடை

காந்தியடிகளின் பொன்மொழிகள் :

(i) எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உய்த்திருக்கிறது.

(ii) நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.

(iii) அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.

(iv) எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.

(v) பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.

(vi) பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம்.

(vii) குணநலனும், புனிதத்தன்மையுமே பெண்ணின் உண்மையான ஆபரணம்.

(viii) சாதுவான வழியில், உன்னால் உலகத்தையும் அசைக்க முடியும்.

(ix) உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.

(x) எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.

(xi) தோல்வி மனச்சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.

 

2. காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க

விடை

காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்கள் :

(i) கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம்

(ii) வரிகொடா இயக்கம்

(iii) ஒத்துழையாமை இயக்கம்

(iv) உண்ணாவிரதம்

(v) உப்பு சத்தியாகிரகம்

(vi) சட்டமறுப்பு இயக்கம்

(vii) தனியாள் அறப்போராட்டம்

(viii) வெள்ளையனே வெளியேறு.

 

Tags : Term 3 Chapter 1 | 6th Tamil பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu : Prose: Tamil nadil Gandhi: Questions and Answers Term 3 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது : உரைநடை: தமிழ்நாட்டில் காந்தி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது