Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu

   Posted On :  03.07.2023 07:34 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

 

 

கேட்க

தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவரின் வரலாற்றைக் கேட்க.

மறைதிருநாவுக்கரசு’ அவர்களின் வாழ்க்கை வரலாறு :

(i) மறைதிருநாவுக்கரசு தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் மகன் ஆவார்இவர் தம் தந்தையின் விருப்பப்படியும்எண்ணப்படியும் திருவையாற்றில் தமிழ்க் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார்.

(ii) சென்னை நுங்கம்பாக்கம் நகராண்மை உயர்நிலைப் பள்ளியிலும்திருநெல் வேலியில் குலசேகரன் பட்டினம் திருவள்ளுவர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார்தூத்துக்குடி ..சிகல்லூரியில் 1952 முதல் 1967 வரை தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். 1967இல் பணி ஓய்வு பெற்றார்:

(iii) 1937-ல் இந்திமொழி கட்டாயமாக்கப்பட்டதுஅதனை எதிர்த்து தமிழகத்தில் பெரும் போராட்டம் ஏற்பட்டதுஅதில் கலந்து கொண்டு 1938இல் சிறைப்பட்டார்பெரியார்அண்ணாதுரை ஆகியோருடன் சிறையில் இருந்தவர்இவருடைய மனைவி ஞானம்மாள் தம் ஐந்து வயது குழந்தையுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

(iv) மறை திருநாவுக்கரசு ஒரு காந்தியவாதிகாந்தியடிகள் தொடங்கிய அறப்போராட்டத்தில் அரசை எதிர்த்து மேடைகளில் பேசினார்திரு.வி..வுடன் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து இந்திய விடுதலைக்காக உரிமைக்குரல் கொடுத்தார். 1941 சனவரி முப்பது முதல் ஓராண்டு சிறையில் இருந்தார்.

(v) சிவநெறிநாயன்மார்களின் வரலாறு பற்றி சொற்பொழிவுகள் செய்துள்ளார்யாழ்ப்பாணம்கொழும்புமலேசியாபர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்று சமயச் சொற்பொழிவாற்றி உள்ளார்சேக்கிழார் திருப்பணிக் கழகத்தைத் தொடங்கியவர்.

(vi) மறைமலையடிகள் வரலாறுநீலாம்பிகை வரலாறு பெரிய புராண ஆய்வுரை போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

 

கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக.

1. பாரதியார் 2. காந்தியடிகள் 3. வேலுநாச்சியார்

விடை

1. பாரதியார்

(i) பாரதியார்சுப்பையாமுண்டாசுக் கவிஞன்மகாகவிசக்திதான் என்ற பெயர்களுக்கெல்லாம் சொந்தக்காரர் சுப்பிரமணிய பாரதியார்எட்டயபுரத்தில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பதினோராம் நாள் சின்னச்சாமி – இலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

(ii) பாரதியார் ஒரு கவிஞர்எழுத்தாளர்விடுதலை வீரர்பத்திரிக்கையாசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

(iii) தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 15 வயதில் தனது அத்தையுடன் காசிக்குச் சென்றார்இந்துக் கலாசாலையில் சமஸ்கிருதம்இந்தி மொழிகளும் கற்றார்பன்மொழி படித்துவேத உபநிடதங்கள் படித்தார்ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைப் பெற்றார்தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர்பன்மொழிப் புலமை பெற்ற பாரதியார், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனப் பாடியுள்ளார்.

(iv) தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைப்பட்டவர்தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தைத் தணிக்க 1905ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார்பாரதியாருக்கு கப்பல் ஓட்டிய தமிழன் ..சிதம்பரம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதுகல்கத்தாவில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிக்க தேவியைச் சந்தித்தார்அவரைத் தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.

(v) இந்தியா என்னும் வார ஏட்டையும்பால பாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார்.

vi) பாரதியார் மொழிஇனம்நாடுசமுதாயம் என்னும் அனைத்துத் துறைகளையும் விடுதலை விழிகளாகப் பார்த்தார்அவருடைய பேச்சுமூச்சுசெயல் அனைத்துமே விடுதலையாகவும் அதைச் சார்ந்த சமுதாய விடுதலையாகவும் அமைந்தது.

2. காந்தியடிகள்

(i) இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் காந்தியடிகள்இவர் மகாத்மா காந்தி’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

(ii) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்பெற்றோர் காபாகாந்தி-புத்திலிபாய் ஆவர்.

(iii) காந்தி பள்ளிப் பருவத்திலேயே நேர்மையாளராகத் திகழ்ந்தார்அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார்வாய்மையாளராய் விளங்கினார்சிரவண பிதுர்பத்தி என்னும் நூலைப் படித்தார்பெற்றோரை மதிக்கும் குணம் பெற்றார்பதினெட்டு வயதில் இங்கிலாந்து சென்றார்வழக்கறிஞர் கல்வியை முடித்துத் திரும்பினார்.

(iv) தென் ஆப்பிரிக்கா சென்றார்டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்டதும்இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோதுவெள்ளையர் இல்லை என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும் அவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

(v) தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்கள் மற்றும் அங்கு குடியேறிய இந்திய மக்கள் படும் இன்னல்கள் அவரை மாற்றியதுதென் ஆப்பிரிக்காவில் போராடிய போது தில்லையாடி வள்ளியம்மை இவருக்கு அறிமுகமானார்.

(vi) காந்தியடிகள் பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்அவ்வாறு வந்தபோது – புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் 5 இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்இந்திய மக்கள் போதிய உடைகள் இல்லாமல் இருப்பதைப் பற்றிச் சிந்தித்தார்அதனால் ஏற்பட்ட மாற்றமே காந்தியடிகளின் எளிமைத் திருக்கோலம் ஆகும்.

(vii) விடுதலை பெறுவதற்காக அவர் கண்ட புதுவழி அறவழிகத்தியின்றி இரத்தமின்றி’ புதிய அகிம்சை வழியில் போராடினார்ஒத்துழையாமை இயக்கம்தண்டி யாத்திரைவெள்ளையனே வெளியேறு இயக்கம்தனியாள் அறப்போராட்டம் எனப் பல வழிகளில் விடுதலைக்குப் போராடி விடுதலை பெற்றுத் தந்தார்.

(viii) அறவழி (அகிம்சைஎன்றால் காந்தியடிகளே நம் நினைவிற்கு வருவார்அப்படிப்பட்ட ஒரு தலைவர் நாதுராம் கோட்சே என்ற கொடியவனால் 1948சனவரி 30ஆம் நாள் கொல்லப்பட்டார்பாரதத் தாய்க்காகத் தன் இன்னுயிரையும் தந்து அனைவரின் மனதிலும் வாழ்கிறார்.

3. வேலுநாச்சியார்

(i) ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி வேலு நாச்சியார்.

(ii) இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்துசேதுபதி – சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி. 1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகளாகத் தோன்றியவர்தான் வேலுநாச்சியார்இவர் ஆண்களைப் போல வளர்க்கப்பட்டார்ஆயுதப் பயிற்சி முதல் அனைத்துப் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர்இவர் சிவகங்கையை ஆண்ட மன்னரான முத்துவடுகநாதரை மணந்து கொண்டார்.

(iii) ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின் மீது படையெடுத்தனர்ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றதுஅப்போரில்மன்னர் முத்துவடுகநாதர் வீர மரணமடைந்தார்வேலுநாச்சியார்மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்துஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார்அவருக்கு உதவ விரும்பிய ஐதர்அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.

(iv) மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச் சென்ற வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்ஒரு விஜயதசமி நாளில் இப்போர் நடந்ததுஅப்போரில்கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்டார்.

 

சொல்லக் கேட்டு எழுதுக

இந்தியநாடு  காந்தியடிகள்  ஊன்றுகோல்  வேலுநாச்சியார்

வாழ்த்துகள்  மெய்யுணர்வு  நாற்றங்கால்  உரிச்சொல்

பொதுக்கூட்டம் குற்றாலம்

 

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் ..சிதம்பரனார்..சிஅவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்அவர்வழக்கறிஞர்எழுத்தாளர்பேச்சாளர்தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் 'சுதேசி நாவாய்ச் சங்கம்என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்..சிசென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்மேலும்பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

விடை :

சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியர் ..சிதம்பரனார்.சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியர் ..சிதம்பரனார்.

 

2. ..சிசென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

விடை :

..சிசென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

3. .சிஅவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?

விடை :

..சிபாரதியாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்.

 

4. சிஅவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?

விடை :

..சிஅவர்களின் பன்முகத்தன்மை :

வழக்கறிஞர்எழுத்தாளர்பேச்சாளர்தொழிற்சங்கத் தலைவர்.

 

5. ..சிஅவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?

விடை :

..சிஅவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் :

தமிழ்ஆங்கிலம்.

 

திடம் அறிந்து பயன்படுத்துவோம்

ஒன்று என்பதைக் குறிக்க ஓர்ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றனஉயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(.கா.) ஓர் ஊர்  ஓர் ஏரி

ஒரு நகரம்   ஒரு கடல்

இவை போலவேஉயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(.கா.) அஃது இங்கே உள்ளது

அது நன்றாக உள்ளது

 

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

விடை : ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.

விடை : ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

விடை : அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

 4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

விடை : அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

5. அது ஒரு இனிய பாடல்.

விடை : அஃது ஓர் இனிய பாடல்.

 

அகரவரிசைப்படுத்துக

பெண்கள்பாரதம்புதுமைபீலிபேருந்துபூமிபழங்கள்பொதுக்கூட்டம்பையன்போக்குவரத்துபின்னிரவு

விடை :

(i) பழங்கள்

(ii) பாரதம்

(iii) பின்னிரவு

(iv) பீலி

(v) புதுமை

(vi) பூமி

(vii) பெண்க ள்

(viii) பேருந்து

(ix) பையன்

(x) பொதுக்கூட்டம்

(xi) போக்குவரத்து

 

செயல்திட்டம்

காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் பற்றிய படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.

விடை


 

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

தேசிய ஒருமைப்பாடு

 

 

மொழியோடு விளையாடு

 

 

இரண்டு சொற்கனை இணைத்துப் புதிய சொற்கனை உருவாக்கு.

(.காஎனக்கு   எனக்குண்டு   எனக்கில்லை

விடை :


 

கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.


விடை :

1. பாரி வீட்டுக்கு வந்தான்.

2. எழிலி வீட்டுக்கு வந்தாள்.

3. மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.

4. மாடு வீட்டுக்கு வந்தது.

5. மாடுகள் வீட்டுக்கு வந்தன.

 

கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக


.காகுமரன் – பெயர்ச்சொல்

விடை

1. பேருந்து – பெயர்ச்சொல்

2. வண்டி – செய்தான்

3. மாடு – பெயர்ச்சொல்

4. நகரம் – பெயர்ச்சொல்

5. நடக்கிறாள் – வினைச்சொல்

6. பெயர்ச்சொல் – வினைச்சொல்

7. மற்று – இடைச்சொல்

8.  – இடைச்சொல்

9. மாநகரம் – உரிச்சொல்

10. உறுபசி – உரிச்சொல்

 


நிற்க அதற்குத் தக

 

 

என் பொறுப்புகள்

1. தாய் தந்தையின் வீட்டு வேலைகளில் என்னால் முடிந்த உதவிகனைச் செய்வேன்.

2. பள்ளிபொது இடங்களில் உள்ள பொருட்களை உடைக்காமல் பாதுகாப்பேன்.

3. தமிழ்த்தாய் வாழ்த்துநாட்டுப்பண்தேசியக்கொடி முதலியவற்றிற்கு உரிய மரியாதை தருவேன்.

 

கலைச்சொல் அறிவோம்

1. நாட்டுப்பற்ற – Patriotism

2. இலக்கியம் – Literature

3. கலைக்கூடம் – Art Gallery

4. மெய்யுணர்வு – Knowledge of Reality Patriotism

 


இணையத்தில் காண்க

விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத் தலைவர்கள் பற்றிய செய்திகளை அறிக.

 

இணையச் செயல்பாடுகள்

சொல் விளையாட்டு


படிநிலைகள்:

• கொடுக்கப்பட்டிருக்கும் உரவி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி, "சொல்லி அடி செயலியை நிறுவுக.

• செயலியைத் திறந்தவுடன் வரும் திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் 'படம் பார்த்துக் கண்டுபிடி', 'குறிப்புகள் மூலம் கண்டுபிடி', 'சொல்லுக்குள் சொல்', 'பிற மொழிச்சொற்கள்', 'எதிர்ச் சொற்கள்மற்றும் 'இணைச்சொற்கள்போன்ற தெரிவுகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்க.

• எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைக்கொண்டு அதன் பெயர்களை அடையாளம் காணுதல்இதே போன்று பிற விளையாட்டுகளின் மூலம் சொற்களஞ்சிய அறிவை வளர்த்துக் கொள்க.


செயல்பாட்டிற்கான உரலி

https://play.google.com/store/apps/details?id=aithra.tamil.word.game.solliadi

ஒத்த பிற செயலிகள்

1மாயக்கட்டம் 2. புதிர்நானூறு 3. திருக்குறள் விளையாட்டு

கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே

 


கற்பவை கற்றபின் 



பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக.

1வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.

விடை

வளவன்பேருந்து – பெயர்ச்சொல்

2. நாள்தோறும் திருக்குறளைப் படி

விடை

திருக்குறள் – பெயர்ச்சொல்படி – வினைச்சொல்

3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது” என்றார் ஆசிரியர்.

விடை

சாலச்சிறந்தது – உரிச்சொல்

 

கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

விடை

தீண்டல்இன்பம் – இடைச்சொல்

 

செய்தித்தாளில் விளையாட்டுச் செய்தி ஒன்றைப் படித்துஅதில் இடம்பெற்றுள்ள நால்வகைச் சொற்களை எழுதுக.

விடை:

இந்தியா - இலங்கை இடையிலான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் யுவராஜ்சிங்கிற்கு முன்பாக இறங்கி 91 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்த தோனியின் செயல் சாலச் சிறந்த ஆட்டம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

1. இந்தியாஇலங்கையுவராஜ் சிங்தோனி – பெயர்ச்சொல்

2. அடித்ததுசெயல் – வினைச்சொல்

3. இடையிலான – இடைச்சொல்

4. சாலச் சிறந்த – உரிச்சொல்

Tags : Term 3 Chapter 1 | 6th Tamil பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu : Tamil Language Exercise - Questions and Answers Term 3 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது