Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : வாரித் தந்த வள்ளல்

பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : வாரித் தந்த வள்ளல் | 5th Tamil : Term 3 Chapter 1 : Naadu, samugam, arasu, niruvagam

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்

உரைநடை : வாரித் தந்த வள்ளல்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் : உரைநடை : வாரித் தந்த வள்ளல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

உரைநடை

வாரித் தந்த வள்ளல்


குழந்தைகள் அழுதபடி

அம்மா பசிக்கிறது, சோறு போடுங்கள்

நங்காய்! குழந்தைகள் ஏன் அழுகின்றனர்? உணவு கொடுக்கக்கூடாதா?

இருந்தால் 'கொடுத்திருப்பேனே! தானியங்களும் மாவும் நேற்றே தீர்ந்து போய்விட்டன.

இந்த நிலைக்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனே, என் செய்வேன்?

ஐயனே! நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?

சொல் நங்காட் நீ சொல்லும் யோசனையால் நம் குழந்தைகள் பசி நீங்கட்டும்.

கொல்லி மலை அரசர் வல்வில் ஓரியைச் சென்று கண்டு வாருங்கள்! அள்ளிக் கொடுக்கும் வள்ளல் என்று எல்லாரும் கூறுகிறார்களே!

ஆம் நானும் கேள்விப்பட்டுள்ளேன். வீரத்திலும் கொடைத் திறத்திலும் சிறந்தவர் இப்பொழுதே செல்கிறேன்.


சென்று வாருங்கள்!' தாங்கள் வரும் வழிநோக்கி எங்கள் விழிகள் பார்த்திருக்கும்

வாழிய, மன்னா! இசைப் பாணர் ஒருவர் உங்களைக் காண வாயிலில் காத்திருக்கிறார்.

தடுக்காதே! அவரை விரைந்து உள்ளே அனுப்புக!

கொல்லிமலைக் கொற்றவா!" கொடைத் திறத்தின் கோமகனே! நீவிர் வாழ்க! உமது படை வாழ்க

தரணியெங்கும் தமிழ் இசையின் புகழ் பரப்பும் பாணரே! வருக! வளரட்டும் தமிழ்த் தொண்டு! எம்மை நாடி வந்த காரணம்?

வள்ளலே! வறுமை காரணமாக எமது வீட்டின் அடுப்பில் பூனை உறங்குகிறது.

தமிழ் பரப்பும் பாணரே! உமது நிலை என்னை வருத்தமுறச் செய்கிறது.

உணவின்றி என் இல்லாள் மெலிந்து கிடக்கிறாள். பிள்ளைகளோ காற்றை உண்டு கண்ணில் உயிரைத் தேக்கியபடி இருக்கின்றனர்.


கலக்கம் வேண்டாம் பாணரே! உம் வறுமையைப் போக்குவது, என் பொறுப்பு.

மரம்பழுத்து எல்லாருக்கும் பயன் தருவது போல, எம் துயர் துடைத்து உதவுங்கள்

ஆகட்டும் பாணரே!" அமைச்சரே! வாருங்கள்! இப்பாணரின் குடும்பம் பல தலைமுறைகள் வாழ வழி செய்திடுங்கள்

"அப்படியே அரசே! தங்கள் ஆணைப்படி செய்கிறோம்.

பொற்காசுகளை அள்ளித்தருக! அணி மணிகளும் களிறுகளும் அனுப்பிடுக, பற்பல பரிசுகளைப் பேழைகளில நிறைத்து அனுப்பிடுக

தங்கள் ஆணைப்படியே அனைத்தையும் அனுப்பி வைக்கிறேன் அரசே!

கற்ற கல்வி அறியாமை' அகற்றுதல் போல, உற்ற துயர் துடைக்கும் வள்ளலே! உங்களின் குன்றாப்புகழ் கொடைப் பண்பு ஓங்குக! வாழ்க! வாழ்க! நீவிர் வாழ்க!

போய் வாரும் பாணரே!" நீரும் உமது சுற்றத்தாரும் குறைவின்றி நீடுழி வாழ்க!

Tags : Term 3 Chapter 1 | 5th Tamil பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 3 Chapter 1 : Naadu, samugam, arasu, niruvagam : Prose: Warithantha vallal Term 3 Chapter 1 | 5th Tamil in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் : உரைநடை : வாரித் தந்த வள்ளல் - பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்