கணினியின் பாகங்கள் | பருவம் 1 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 1 Unit 7 : Computer An Introduction

   Posted On :  16.09.2023 11:11 pm

கணினியின் பாகங்கள் | பருவம் 1 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல்

வினா விடை

கணினியின் பாகங்கள் | பருவம் 1 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

1. கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ) மார்ட்டின் லூதர் கிங்

ஆ) கிரகாம்பெல்

இ) சார்லி சாப்ளின்

ஈ) சார்லஸ் பாபேஜ்

விடை: ஈ) சார்லஸ் பாப்பேஜ்

 

2. கீழ்க்காண்பவற்றுள் கணினியின் மறுவடிவம் எது?

அ) கரும்பலகை

ஆ) கைப்பேசி

இ) வானொலி

ஈ) புத்தகம்

விடை: ஆ) கைப்பேசி

 

3. முதல் கணினி  அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

அ) 1980

ஆ)1947

இ) 1946

ஈ) 1985

விடை : இ) 1946

 

4. கணினியின் முதல் நிரலர் யார்?

அ) லேடி வில்லிங்டன்

ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

இ) மேரி க்யூரி

ஈ) மேரிக்கோம்

விடை: ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

 

5. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

அ) கணிப்பான்

ஆ) அபாகஸ்

இ) மின் அட்டை

ஈ) மடிக்கணினி

விடை: இ) மின் அட்டை

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. தரவு என்பது முறைப்படுத்த வேண்டிய விவரங்கள் ஆகும்.

2. உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி மின்னணு எண் ஒருங்கிணைப்பு மற்றும் கணினி

3. தகவல் என்பது தேவைக்கேற்ப முறைப்படுத்தப்பட்ட விவரங்கள் ஆகும்.

4. ஐந்தாம் தலைமுறைக் கணினி செயற்கை நுண்ணறிவு கொண்டது.

5. குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி அனலாக் கம்ப்யூட்டர்

 

 

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

 

1. கணினி ஒரு மின்னணு இயந்திரம். சரி

2. கணினியைக் நியூட்டன். கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.

கணினியைக் கண்டறிந்தவர் சார்லஸ் பாப்பேஜ். தவறு

3. கணினி  கணக்கீடுகளை மிகவும் விரைவாகச் செய்யக்கூடியது. சரி

 

 

IV. பொருத்துக:

முதல் தலைமுறை – செயற்கை நுண்ணறிவு

இரண்டாம் தலைமுறை – ஒருங்கிணைந்த சுற்று

மூன்றாம் தலைமுறை – வெற்றிடக் குழாய்கள்

நான்காம் தலைமுறை - மின்மயப் பெருக்கி

ஐந்தாம் தலைமுறை – நுண்செயலி

 

விடைகள்

முதல் தலைமுறை – வெற்றிடக் குழாய்கள்

இரண்டாம் தலைமுறை – மின்மயப் பெருக்கி

மூன்றாம் தலைமுறை – ஒருங்கிணைந்த சுற்று

நான்காம் தலைமுறை - நுண்செயலி

ஐந்தாம் தலைமுறை – செயற்கை நுண்ணறிவு

 

V. சுருக்கமாக விடையளி.

 

1. கணினி என்றால் என்ன?

கணினி என்பது தரவு மற்றும் தகவல்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்ன ணு இயந்திரம்.

 

2 கணினியின் முன்னோடிகள் யாவை?

(i) சார்லஸ் பாப்பேஜ்: சார்லஸ் பாப்பேஜ் கணிதப் பேராசிரியர். அவர்கள் பகுப்பாய்வுப் பொறியை வடிவமைத்தார். இவர் தான் 'கணினியின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

 (ii) அகஸ்டா அடா லவ்லேஸ்: இவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் உலகின் முதல் கணினி நிரலர்' எனப் போற்றப்படுகிறார்.

 

3. தரவு பற்றி சிறுகுறிப்பு வரைக.

(i) தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள் ஆகும்.

(ii) இவை நேரடியாக நமக்கு பயன் தராது பொதுவாக எண், எழுத்து, படக்குறியீடுகளாக இருக்கும்

 

4. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறுக.

விசைப்பலகை, சுட்டி, பட்டைக் குறி படிப்பான், எண்ணியல் படக்கருவி போன்றவை.

 

5. மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.

வன்பொருள்

கணினியில் இருக்கக்கூடிய மென் பொருட்கள் செயல்படுவதற்கு உதவக்கூடிய கணினியின் பாகங்களே வன்பொருட்கள் எனப்படும்.

மென்பொருள்

கணினியில் நாம்செய்யக்கூடிய வேலைகளுக்கு உதவக்கூடிய கட்டளைகள் அல்லது நிரல்களின் தொகுப்புதான் மென்பொருள்.

 

VI. விரிவாக விடையளி

 

1. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

கணினியின் பயன்பாடுகள் :

1. கணினி துணிக்கடை, ரயில் நிலையம், வங்கி, ஏ.டி.எம் போன்ற இடங்களில் பயன்படுகிறது.

2.  கணினி படம் வரைய, கணக்கு போட, விளையாட பயன்படுகிறது.

3.  கணினி பொது அறிவு வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது.

4.  கணினி பல துறைகளில் பயன்படுகிறது. எ.கா. தொழில், கல்வி, மருத்துவம், அறிவியல், தகவல் தொடர்பு.

5. கணினி தரவு மற்றும் தகவல்களைச் சேகரிக்க பயன்படுகிறது.

 

மனவரைபடம்


Tags : Computer An Introduction | Term 1 Unit 7 | 6th Science கணினியின் பாகங்கள் | பருவம் 1 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 7 : Computer An Introduction : Questions Answers Computer An Introduction | Term 1 Unit 7 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. கணினியின் பாகங்கள் | பருவம் 1 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : வினா விடை - கணினியின் பாகங்கள் | பருவம் 1 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
கணினியின் பாகங்கள் | பருவம் 1 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல்