பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் | 6th Science : Term 2 Unit 1 : Heat
அறிவியல் - இரண்டாம் பருவம்
அலகு 1
வெப்பம்
கற்றல் நோக்கங்கள்
❖ வெப்ப மூலங்களைப் பட்டியலிடுதல்
❖ வெப்பம் வரையறை செய்தல்
❖ வெப்பமான மற்றும் குளிர்ச்சியான பொருள்களை வேறுபடுத்தி அறிதல்
❖ வெப்பநிலையை வரையறை செய்தல்
❖ வெப்பம் மற்றும் வெப்பநிலையை வேறுபடுத்துதல்
❖ வெப்பச் சமநிலைக்கான நிபந்தனைகளை அறிதல்.
❖ திடப்பொருளில் வெப்பவிரிவு எதனால் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ளுதல்.
❖ வெப்ப விரிவின் நடைமுறைப் பயன்பாடுகளைக் கூறுதல்.
அறிமுகம்
வெப்பம் நாம் அனைவரும் அறிந்ததே. சூரிய ஒளி நம் உடலில் படும்பொழுது
நாம் வெப்பத்தை உணர்கிறோம். வெப்பம் நமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. வெப்பத்தை
உணவு சமைக்கப் பயன்படுத்துகிறோம். பழச்சாறு தயாரிக்கையில் வெப்பத்தைக் குறைக்க பனிக்கட்டிகளைச்
சேர்க்கிறோம். நமக்கு எந்தெந்த மூலங்களில் இருந்து வெப்பம் கிடைக்கிறது என்று நாம்
இப்பொழுது காண்போம்.