நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 7th Science : Term 2 Unit 3 : Changes Around Us

   Posted On :  16.05.2022 06:13 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

வினா விடை

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 :நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
பயிற்சி 


I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 

1. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை __________ ஆக வகைப்படுத்தலாம் 

அ) இயற்பியல் மாற்றம் 

ஆ) வேதியியல் மாற்றம்

இ) வெப்பம் கொள் மாற்றம் 

ஈ) வெப்ப உமிழ் மாற்றம் 

விடை : அ) இயற்பியல் மாற்றம் 


2. பின்வருவனவற்றுள் ___________ வெப்பம் கொள் மாற்றங்களாகும். 

அ) குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

ஆ) குளிர்வடைதல் மற்றும் உறைதல் 

இ) ஆவியாதல் மற்றும் உருகுதல்

ஈ) ஆவியாதல் மற்றும் உறைதல்

விடை : இ) ஆவியாதல் மற்றம் உருகுதல் 


3. கீழ்காண்பவற்றில் __________ வேதியியல் மாற்றமாகும். 

அ) நீர் மேகங்களாவது

ஆ) ஒரு மரத்தின் வளர்ச்சி 

இ) பசுஞ்சாணம் உயிர் எரிவாயுவாவது 

ஈ) பனிக்கூழ் கரைந்த நிலை பனிக்கூழாவது

விடை : இ) பசுஞ்சாணம் உயிர் எரிவாயுவாவது 


4. __________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். 

அ) பூகம்பம்

ஆ) வானில் வானவில் தோன்றுவது 

இ) கடலில் அலைகள் தோன்றுவது

ஈ) மழை பொழிவு

விடை : இ) கடலில் அலைகள் தோன்றுவது 


5. __________ வேதிமாற்றம் அல்ல. 

அ) அம்மோனியா நீரில் கரைவது 

ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு நீரில் கரைவது 

இ) உலர் பனிக்கட்டி நீரில் கரைவது 

ஈ) துருவப் பனிக்குழிழ்கள் உருகுவது 

விடை : ஈ) துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது



II. கோடிட்ட இடங்களை நிரப்புக 

1. ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ___________ மாற்றமாகும்.

விடை : இயற்பியல்

2. தங்க நாணயத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ___________ மாற்றமாகும்

விடை : இயற்பியல்

3. ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் ___________ எரிபொருள் __________ எரிபொருளாக மாறும். இது ___________ மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

விடை : திரவ, வாயு, இயற்பியல்

4. உணவு கெட்டுப்போதல் என்பது __________ மாற்றமாகும்.

விடை: வேதியியல் 

5. சுவாசம் என்பது __________ மாற்றமாகும்.

விடை: வேதியியல் 


III. சரியா? தவறா? தவறெனில், சரியான விடையினைக் கூறவும் 

1. ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.


விடை : தவறு ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால ஒழுங்கற்ற மாற்றதிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

 

2. ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும். 

விடை : தவறு 

ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும். 


3. ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு இயற்பியல் மற்றும் கால ஒழுங்கற்ற மாற்றமாகும்.

விடை : தவறு 

ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு வேதியியல் மற்றும் கால ஒழுங்கு மாற்றமாகும்.

 

4. ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால ஒழுங்கு மாற்றமாகும். 

விடை : தவறு 

ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது இயற்பியல் மாற்றமாகும். 


5. வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும். 

விடை : தவறு 

வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்பம் உமிழ் மாற்றமாகும்.



IV. கீழ்காண்பவற்றை பொருத்துக.

அ ஆ இ

1. உருகுதல் : திரவம் நிலையில் இருந்து திண்ம நிலைக்கு மாறுதல் : கடிகார முள் துடிப்பது

2. குளிர்வித்தல் : திரவ நிலையில் இருந்து வாயுநிலைக்கு மாறுதல் : பனிக்கட்டி உருவாவது

3. ஆவியாதல் : திண்ம நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் : பூக்கள் சேகரித்தல்

4. உறைதல் : வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் : பனிக்கட்டி நீராதல்

5 கால ஒழுங்கு மாற்றம் : ஒழுங்கற்ற கால இடைவெளியில் நடைபெறுவது : நீரில் இருந்து நீராவி

6 கால ஒழுங்கற்ற மாற்றம் : ஒழுங்கான கால இடைவெளியில் நடைபெறுகிறது : நீராவி நீர்துளிகள் ஆவது




விடை :


அ ஆ இ

1. உருகுதல் : திண்ம நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் : பனிக்கட்டி நீராதல்

2. குளிர்வித்தல் : வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் : நீராவி நீர்துளிகள் ஆவது

3. ஆவியாதல் : திரவ நிலையில் இருந்து வாயுநிலைக்கு மாறுதல் : நீரில் இருந்து நீராவி

4. உறைதல் : திரவ நிலையில் இருந்து திண்ம நிலைக்கு மாறுதல் : னிக்கட்டி உருவாவது

5 கால ஒழுங்கு மாற்றம் : ஒழுங்கான கால இடைவெளியில் நடைபெறுகிறது : கடிகார முள் துடிப்பது

6 கால ஒழுங்கற்ற மாற்றம் : ஒழுங்கற்ற கால இடைவெளியில் நடைபெறுவது : பூக்கள் சேகரித்தல்



V. பின்வரும் மாற்றங்களை இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களாக வகைப்படுத்துக

சொரப்பான மரக்கட்டையினை மணலிட்டு தேய்த்து வழுவழுப்பாக்குவது, இரும்பு ஆணி துருப்பிடித்தல் இரும்பு கதவில் பெயிண்ட் பூசுவது, ஒரு காகித கிளிப்பினை வளைப்பது, வெள்ளியை தட்டாக மாற்றுவது, சப்பாத்தி மாவை உருட்டி மெலிதாக்குவது, இரவு-பகல் மாற்றம், எரிமலை வெடிப்பது, தீக்குச்சி எரிவது, மாவிலிருந்து தோசை தயாரிப்பது, கண் இமை சிமிட்டுதல், இடி முழக்கம் தோன்றுவது, புவியின் சுழற்சி, கிரகணங்கள் தோன்றுதல். 

விடை :

இயற்பியல் மாற்றங்கள்

சொர சொரப்பான மரக்கட்டையினை மணலிட்டு தேய்த்து வழுவழுப்பாக்குவது, இரும்பு கதவில் பெயிண்ட் பூசுவது, ஒரு காகித கிளிப்பினை வளைப்பது, வெள்ளியை தட்டாக மாற்றுவது, சப்பாத்தி மாவை உருட்டி மெலிதாக்குவது

வேதியியல் மாற்றங்கள்

இரும்பு ஆணி துருப்பிடித்தல் தீக்குச்சி எரிவது, மாவிலிருந்து தோசை தயாரிப்பது.

கால ஒழுங்கு மாற்றம் 

இரவு-பகல் மாற்றம், புவியின் சுழற்சி

கால ஒழுங்கற்ற மாற்றம் 

எரிமலை வெடிப்பது, கண் இமை சிமிட்டுதல், இடி முழக்கம் தோன்றுவது, கிரகணங்கள் தோன்றுதல்.


VI. ஒப்புமை தருக

1. இயற்பியல் மாற்றம் : கொதித்தல் :: வேதியியல் மாற்றம் __________ 

விடை: துருப்பிடித்தல்

2. மரக்கட்டையிலிருந்து மரத்தூள் : __________ :: மரக்கட்டையிலிருந்து சாம்பல் : வேதியியல் மாற்றம். 

விடை: இயற்பியல் மாற்றம்

3. காட்டுத்தீ : __________ மாற்றம் :: ஒரு பள்ளியில் பாட வேளை மாறுபாடு : கால ஒழுங்கற்ற மாற்றம் 

விடை: கால ஒழுங்கற்ற மாற்றம்



VII. மிகக் குறுகிய வகை வினா 

1. கால ஒழுங்கு மாற்றங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக. 

• பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுதல்

• இதயத்துடிப்பு 


2. இரு வெப்ப உமிழ் வினைகளைக் குறிப்பிடுக. 

• மெக்னீசியம் நாடா எரிதல்

• சுண்ணாம்புடன் நீர் சேர்த்தல் 


3. குளிர்ந்த பாலினை வெப்பப்படுத்தினால் அது சூடாகிறது இது எந்த வகையான மாற்றம்?

• குளிர்ந்த பாலினை வெப்பப்படுத்துதல் ஒரு இயற்பியல் மாற்றம். 

• ஏனெனில் புதிய பொருள் உருவாகவில்லை 

• பாலின் இயைபு மாறாமல் உள்ளது. 


4. செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் எந்த வகை மாற்றமாகும்? 

செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் வேதிப் பொருட்களால் நடைபெறும் வேதியியல் மாற்றமாகும். 


5. ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்? 

• ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்

• ஏனெனில் காகிதத்தின் இயைபு மாறவில்லை. 


6. இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும் ஏன்?

• சீரான கால இடைவெளியில் இதயம் துடிக்கின்றது.

• எனவே இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும். 


7. ஒரு பனிக்கட்டி உருகும்பொழுது எந்த மாதிரியான ஆற்றல் மாற்றங்கள் நிகழ்கின்றன?

• ஒரு பனிக்கட்டி உருகும் பொழுது காற்றிலிருந்து வெப்பம் உறிஞ்சப்டுகிறது. 

• எனவே அது ஒரு வெப்ப ஏற்பு மாற்றமாகும்.



VIII. குறுகிய விடையளி / சிறுவினா 

1. இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் வேறுபடுத்துக. 

இயற்பியல் மாற்றம்

1. புதிய பொருள்கள் உருவாவது இல்லை 

2. தற்காலிக மாற்றம் 

3. மீள் தன்மையுடைய மாற்றம் 

4. இயற்பியல் பண்புகள் மாறுபடலாம் 

5. வேதியியல் பண்புகள் மாறுவதில்லை 

வேதியியல் மாற்றம்

1. புதிய பொருள்கள் உருவாகின்றன

2. நிரந்தர  மாற்றம் 

3. மீள் தன்மையற்ற மாற்றம் 

4. இயற்பியல் பண்புகள் மாறுபடலாம் 

5. வேதியியல் பண்புகள் மாறுகின்றன  


2. ஒரு பொருளில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது? 

• ஒரு பொருளில் ஏற்படும் மாற்றம் என்பது அதன் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் அல்லது வேதி இயைபில் ஏற்படும் மாற்றம் ஆகும். 

• இயற்பியல் பண்புகளில் மட்டும் மாற்றம் நிகழ்ந்தால் அது இயற்பியல் மாற்றம் ஆகும். 

• வேதி இயைபில் மாற்றம் நிகழ்ந்தால் அது வேதியியல் மாற்றம் ஆகும். 

• ஒரு பொருள் இயற்பியல் மாற்றம் அல்லது வேதியியல் மாற்றத்திற்கு உட்படலாம். 

• பனிக்கட்டி நீராக உருகும்போது திண்மநிலையிலிருந்து, திரவ நிலைக்கு மாறுவதால், இது இயற்பியல் மாற்றமாகும். 

• இரும்பு ஈரக் காற்றில் பழுப்பு நிற துரு எனப்படும் புதிய பொருளை உருவாக்குவதால், துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும். 


3. கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா? 

• கடல் நீரினை கொதிக்க வைக்கும் போது தூய நீர் ஆவியாகிறது. உப்பு கொதிகலனில் படிகிறது. (ஆவியாதல்) 

• இந் நீராவியை குளிர்விக்கும்போது தூய நீர் கிடைக்கிறது. (ஆவி சுருங்குதல்)

• இம் முறையில் கடல் நீரிலிருந்து தூய நீரைப் பெறமுடியும். 


4. சூரியக் கிரகணம் கால ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.

• இல்லை , சூரியக் கிரகணம் கால ஒழுங்கற்ற மாற்றமாகும்

• ஏனெனில் சீரான கால இடைவெளியில் சூரியக் கிரகணம் நடை பெறுவதில்லை. 


5. சர்க்கரைக் கரைதல் மற்றும் சர்க்கரை எரிதல் - இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது? 

சர்க்கரைக் கரைதல்

1. இயற்பியல் மாற்றம்

2. கரைசலில் சர்க்கரை கரைந்த நிலையில் உள்ளது 

3. வேதி இயைபு மாறவில்லை 

சர்க்கரை எரிதல்

1. வேதியியல்  மாற்றம்

2. சர்க்கரை கரியாக மாறுகிறது 

3. வேதி இயைபு மாறுகிறது



IX. நெடுவினா 

1. உணவு செரித்தல் ஒரு வேதியியல் மாற்றம் இவ்வாக்கியத்தினை விளக்கவும். 

• உணவு செரித்தல் என்பது சிக்கலான உணவு பொருட்கள் நொதிகள் மூலம் எளிய பொருட்களாக மாற்றப்படும் நிகழ்வாகும். 

• உணவு செரித்தலின் போது புதிய எளிய வேதிப் பொருட்கள் உருவாகின்றன. 

• உருவாகும் புதிய எளிய வேதிப் பொருட்களின் இயைபு உணவு பொருட்களிலிருந்து வேறுபடுகின்றன. 

• எனவே உணவு செரித்தல் ஒரு வேதியியல் மாற்றம் ஆகும்.


2. மண் வெட்ட பயன்படும் உபகரணங்களில் இரும்புப் பகுதியுடன் மரக்கைப்பிடி எவ்வாறு பொருத்தப்படுகிறது? 

மண் வெட்ட பயன்படும் உபகரணங்களின் இரும்புப் பகுதி சூடேற்றப்பட்டு மரக்கைப்பிடியுடன் பொருத்தப்படுகிறது.



X. உயர் சிந்தனைத் திறன் வினாக்கள் 

1. உரித்த வாழைப்பழமும், உரிக்காத வாழைப்பழமும் பார்ப்பதற்கு வேறு வேறாகத் தெரிகிறது. இதிலிருந்து வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றம் என்று கூற இயலுமா? 

• கூற இயலாது. வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றமல்ல 

• அது ஒரு இயற்பியல் மாற்றம் 

• ஏனெனில் இம்மாற்றத்தில் புதிய பொருள் உருவாகவில்லை. வாழைப்பழத்தின் இயைபு மாறாமல் உள்ளது. 


2. மிகச் சூடான கண்ணாடி ஒன்று குளிர்ந்த நீரில் போட்டவுடன் விரிசல் அடைகிறது. இம்மாற்றம் எதை உணர்த்துகிறது? 

• இது ஒரு இயற்பியல் மாற்றம் 

• மிகக் சூடான கண்ணாடி குளிர்ந்த நீரில் போட்டவுடன் விரிசல் அடைகிறது. 

• இதில் கண்ணாடியின் உருவம் மாற்றமடைகிறது. இயைபில் எவ்வித மாற்றமுமில்லை.

• எனவே இது ஒரு இயற்பியல் மாற்றம் ஆகும். 


3. நீர் கொதித்தல் ஒரு இயற்பியல் மாற்றம், முட்டை வேகவைத்தல் ஒரு வேதியியல் மாற்றம். ஏன்? 

நீர் கொதித்தல்

1. இயற்பியல் மாற்றம்

2. நீர் (திரவம்), நீராவியாக (வாயு) மாறுகிறது. புதிய பொருள் உறுவாவதில்லை

3. இயைபு மாறவில்லை 

4. மீள்தன்மையுடைய மாற்றம் 

5. தற்காலிக மாற்றம்

முட்டை வேகவைத்தல்

1. வேதியுயல் மாற்றம்

2. புதிய பொருள்கள் உருவாகின்றன 

3. இயைபு மாறுகின்றது 

4. மீளாத்தன்மையுடைய மாற்றம்

5. நிரந்தர மாற்றம்



XI. வலியுறுத்தல் - காரணம் வகை வினா 

1. வாக்கியம் : பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம். 

காரணம் : இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும். 

அ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும். 

ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் வாக்கியம் காரணத்திற்கு சரியான விளக்கம் அல்ல 

இ) வாக்கியம் சரி, ஆனால் காரணம் தவறு 

ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி.

விடை : ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி 

சரியான வாக்கியம் : பட்டாசு வெடித்தல் ஒரு வேதியியல் மாற்றம்.


2. வாக்கியம் : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு   நிலைக்கு     மாறுவது கொதித்தல் எனப்படும். 

காரணம் : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும். 

அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும். 

ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல. 

இ) வாக்கியம் சரி, ஆனால் காரணம் தவறு 

ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி. 

விடை : ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல. 

சரியான காரணம் : ஒரு திரவத்தினை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் அதிக ஆற்றலைப் பெற்று வேகமாக அதிர்வடைகிறது. போதிய ஆற்றலைப் பெற்றவுடன் துகள்கள் தன்னிடையே உள்ள ஈர்ப்பு விசையினை எதிர்கொண்டு ஒன்றையொன்று விலக்கி தனித்தனியே ஒழுங்கற்றதாக இடம் பெயர்கிறது. 


3. வாக்கியம் : மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும். 

காரணம் : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும். 

அ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும். 

ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல. 

இ) வாக்கியம் சரி, ஆனால் காரணம் தவறு. 

ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி.

விடை : வாக்கியம் மற்றும் காரணம் இரண்டுமே தவறு

சரியான வாக்கியம் : மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு வேதியில் மாற்றமாகும். 

சரியான காரணம் : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைப்பொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியாது. 


4. வாக்கியம் : இரும்பிலிருந்து இரும்பு ஆக்ஸைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும். 

காரணம் : இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும். 

அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி. மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும். 

ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல. 

இ) வாக்கியம் சரி ஆனால் காரணம் தவறு. 

ஈ) வாக்கியம் தவறு ஆனால் காரணம் சரி. 

விடை : அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி. மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.


5. வாக்கியம் : ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது. 

காரணம் : மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும். 

அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும். 

ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல. 

இ) வாக்கியம் சரி. ஆனால் காரணம் தவறு. 

ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி. 

விடை : அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி. மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.



XII. படம் சார்ந்த வினா 

1. படத்தினை உற்றுநோக்கி இதனுடன் தொடர்புடைய மாற்றங்களைப் பட்டியலிடவும். 


அ) வேதியியல் மாற்றம்

ஆ) வெப்ப உமிழ் மாற்றம்

இ) கால ஒழுங்கற்ற மாற்றம் 


2. படத்தில் காணும் கெட்டிலில் உப்பு நீர் இருப்பதாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.


அ) கெட்டிலில் நடைபெறும் நிகழ்வின் பெயர் என்ன?

விடை : கொதித்தல் 

ஆ) கெட்டிலில் உள்ள திரவம் என்னவாகும்.

விடை : ஆவியாகும் 

இ) உலோகத் தட்டின் குளிர்ந்த பகுதியில் நிகழக்கூடிய மாற்றம் என்ன? 

விடை : ஆவி சுருங்குதல் 

ஈ) முகவையில் சேகரிக்கப்படும் நீரின் தரம் பற்றி நீவிர் அறிவது என்ன? 

விடை : தூய நீராகும்



Tags : Changes Around Us | Term 2 Unit 3 | 7th Science நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 2 Unit 3 : Changes Around Us : Questions Answers Changes Around Us | Term 2 Unit 3 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் : வினா விடை - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்