போக்குவரத்து | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 2 Unit 3 : Transport

   Posted On :  04.09.2023 02:00 am

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 3 : போக்குவரத்து

வினா விடை

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 3 : போக்குவரத்து : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

1. பின்வருவனவற்றுள் நிலவழிப் போக்குவரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?

அ) மகிழுந்து

ஆ) கப்பல்

இ) ஹெலிகாப்டர்

ஈ) விமானம்

விடை: அ) மகிழுந்து

 

2. --------------------- ஆம் ஆண்டு முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.

அ) 2019

ஆ) 1853

இ) 1947

ஈ) 1950

விடை: ஆ) 1853

 

3. தங்க நாற்கரச் சாலை, முக்கிய நகரங்களுள் ஒன்றான

அ) சென்னை

ஆ) கன்னியாகுமரி

இ) மதுரை

ஈ) திருச்சி

விடை: அ) சென்னை

 

4. -------------- பழமையான போக்குவரத்து வகையாகும்.

அ) கப்பல்

ஆ) மிதிவண்டி

இ) நடைப்பயணம்

ஈ) மாட்டு வண்டி

விடை: அ) கப்பல்

 

5. போக்குவரத்து வகைகள் --------------- ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

விடை: ஆ) 4

 

II. பொருத்துக

 

1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் - பேருந்து

2. முக்கியமான மக்கள் போக்குவரத்து - சென்னை

3. கன்னியாகுமரியிலிருந்து ஐம்மு வரை செல்லும் இரயில் - திருச்சிராப்பள்ளி

4. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கப்பல் துறைமுகம் – 2015

5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு - ஹிம்சாகர் விரைவு ரயில்

 

விடை :

1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் - திருச்சிராப்பள்ளி

2. முக்கியமான மக்கள் போக்குவரத்து - பேருந்து

3. கன்னியாகுமரியிலிருந்து ஐம்மு வரை செல்லும் இரயில் - ஹிம்சாகர் விரைவு ரயில்

4. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கப்பல் துறைமுகம் – சென்னை

5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு - 2015

 

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

 

1. மக்களுக்குப் போக்குவரத்து தேவையானது அல்ல. விடை : தவறு

2. துறைமுகங்கள் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. விடை : சரி

3. நாட்டின் பல பகுதிகளை சாலைவழிப் போக்குவரத்து இணைக்கவில்லை. விடை : தவறு

4. சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகச் சிறியதாகும். விடை : தவறு

5. தமிழ்நாட்டில் ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன. விடை : தவறு

 

 

IV. குறுகிய விடையளி.


1. போக்குவரத்து- வரையறு.

மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வது போக்குவரத்து ஆகும்.

 

2. பல்வேறு போக்குவரத்து வகைகளைப் பட்டியலிடுக.

.• சாலை வழி

• இரயில் வழி

• நீர் வழி

• வான் வழி

 

3. மரயில் போக்குவரக விளக்கநாட்டிலிருங்கி செல்லும் நீ முச்சியமான இரண்டு இரயில் இணைப்புகளின் பெயர்களைக் கூறுக.

 

4. இரயில் போக்குவரத்தை விவரி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு இரயில் இணைப்புகளின் பெயர்களைக் கூறுக.

• இந்தியாவின் பல மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்து முறையில் இரயில்  போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.

• 1853ல் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.

• இரயில் போக்குவரத்து வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

தமிழக முக்கிய இரயில் இணைப்புகள் :

• சென்னை - மும்பை - சென்னை விரைவு வண்டி

• சென்னை - புதுதில்லி - தமிழ்நாடு விரைவு வண்டி 

 

5. வான்வழிப் போக்குவரத்து என்றால் என்ன? வான்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும்.

• வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும்.

• விமானங்கள் மற்றும் சிறுவிமானங்கள் (ஹெலிகாப்டர்கள்) போன்றவை வான்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

 

6. போக்குவரத்தின் எவையேனும் மூன்று நன்மைகளை எழுதுக.

• வேளாண் மற்றும் தொழில்துறையின் உற்பத்தியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

• நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்துகிறது. நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

• சுற்றுலாவை மேம்படுத்த உதவுகிறது.

 

 

செயல்திட்டம்

செய்தித்தாள்களைப் பயன்படுத்தி பேருந்து, ரயில், கப்பல் அல்லது விமானம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு மாதிரியை உருவாக்கி வகுப்பில் காண்பி.



Tags : Transport | Term 2 Chapter 3 | 4th Social Science போக்குவரத்து | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
4th Social Science : Term 2 Unit 3 : Transport : Questions with Answers Transport | Term 2 Chapter 3 | 4th Social Science in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 3 : போக்குவரத்து : வினா விடை - போக்குவரத்து | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 3 : போக்குவரத்து