உலகெலாம் தமிழர்கள் | பருவம் 3 அலகு 1 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 3 Unit 1 : Tamils Around the World

   Posted On :  04.09.2023 02:09 am

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 1 : உலகெலாம் தமிழர்கள்

வினா விடை

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 1 : உலகெலாம் தமிழர்கள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. இலங்கையின் அலுவலக மொழிகளில் ஒன்று --------------------- ஆகும்.

அ) மாண்டரின்

ஆ) இந்தி

இ) தமிழ்

ஈ) சமஸ்கிருதம்

விடை: இ) தமிழ்

 

2. நவீன சிங்கப்பூர் ---------------- இல் நிறுவப்பட்டது.

அ) 1819

ஆ) 1820

இ) 1947

FF) 1835

விடை: அ) 1819

 

3. பண்டைய காலங்களில், மலேசியாவில் உள்ள கெடா மாநிலம் கடல் வழியாக தமிழ்நாட்டின் ------------------------ உடன் இணைக்கப்பட்டிருந்தது

அ) விசாகப்பட்டினம்

ஆ) நாகப்பட்டினம்

.இ) மதுரை

ஈ) சென்னை

விடை: ஆ) நாகப்பட்டினம்

 

4. மியான்மரின் முதன்மையான சமயம் ----------------- ஆகும்.

அ) இந்து சமயம்

ஆ) சமண சமயம்

இ) புத்த சமயம்

ஈ) சீக்கிய சமயம்

விடை: இ) புத்த சமயம்

 

5. ஆங்கிலேயர்கள் மொரீஷியஸைக் கைப்பற்றிய ஆண்டு --------------- ஆகும்.

அ) 1810

ஆ) 1820

இ) 1910

ஈ)  1920

விடை: அ) 1810

 

 

II. சரியா, தவறா என எழுதுக.

 

1.மலேசியாவில் பல்லவர்களும் சோழர்களும் செல்வாக்கு பெற்றிருந்தனர். (விடை: சரி)

2. தென் பசிபிக் பகுதியில் உள்ள எரிமலை தீவுகளின் கூட்டம் பிஜி ஆகும்.  (விடை: சரி)

3.மன்னர் அனவர்தா மின்சாவின் மகன் கியான்சித்தா ஆவார். (விடை: சரி)

4. ரீயூனியன் தீவு என்பது, பிரெஞ்சு வெளியுறவுத் துறையின் ஒரு பகுதியாகும். (விடை: சரி)

5. தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர். (விடை: தவறு)

 

 

II. பின்வருவனவற்றைப் பொருத்துக


1. ஆனந்தா கோயில் - சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் 

2. துணைநிலை ஆளுநர் - ரத்து ஜோனி

3. திருக்குறளி - நாகப்பட்டினம்

4. அஞ்சல் அருங்காட்சியகம் - மியான்மர்

5. பண்டைய துறைமுகம் – மொரீஷியஸ்

 

விடை:

1. ஆனந்தா கோயில் - மியான்மர்

2. துணைநிலை ஆளுநர் - சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்

3. திருக்குறளி - ரத்து ஜோனி

4. அஞ்சல் அருங்காட்சியகம் - மொரீஷியஸ்

5. பண்டைய துறைமுகம் – நாகப்பட்டினம்

 

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

 

1. தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான கடந்தகால உறவுகளை விவரிக்கவும்.

• தமிழ்நாட்டிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான உறவுகள் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

• பண்டைய காலங்களில் தமிழர்களின் கப்பல்கள் தற்போதைய மலேசியா : 2 மாநிலமான கெடாவை (தமிழில் கடாரம்) அடைந்தன.

•  பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் மலேசியாவின் பண்பாடு மற்றும் : அரசியலில் தமிழர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர்.

• மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லிகோர் கல்வெட்டில் மலேசியாவுடன் : தமிழ்நாடு கொண்டிருந்த வணிக உறவு குறிப்பிடப்பட்டுள்ளது.

• மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் தைப்பூசமும் : ஒன்றாகும்.

• மலேசிய பயிற்று மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றாகும்.

 

2. ரீயூனியன் தீவு - குறிப்பு வரைக,

• மொரிஷியஸ் அருகிலுள்ள ரீயூனியன் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு ஆகும்.

• இது பிரெஞ்சு வெளியுறவுத்துறையின் ஓர் அங்கமாகும்.

• அங்கோர் வாட் (கம்போடியா) மலைக்கோயில் புகழ்பெற்றதாகும்.

 

3. அலுவலக மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழியினைக் கொண்ட நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

இலங்கை

சிங்கப்பூர்

மொரீஷியஸ்

 

3.அலுவலக மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழியினைக் கொண்ட நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.


4. மொரீஷியஸ் நாட்டைக் கட்டமைத்ததில் தமிழர்களின் பங்களிப்பினைக் கூறுக.

• தமிழர்கள் இத்தீவை வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும் பல கட்டிடங்களைக் கட்டுவதற்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கு உதவிபுரிந்தனர்.

• போர்ட் லூயிஸில் உள்ள அஞ்சல் அருங்காட்சியம் தமிழர்களால் கட்டப்பட்டது.

 

5. அ. மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகை எது?

மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் தைப்பூசம் ஒன்றாகும்.

ஆ.மியான்மர் நாட்டின் தேசத் தந்தை யார்?

அனவர்தா மின்சா.. இவர் மியான்மரின் தேசத் தந்தையாகவும் மிகவும் புகழ்பெற்ற மனனர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

 

 

செயல்திட்டம்

உலக வரைபடத்தை ஒட்டுக.


உலகெங்கிலும் பரவிக் காணப்படும் தமிழர்களின் கட்டடக்கலை சார்ந்த படங்களை ஒட்டுக,


Tags : Tamils Around the World | Term 3 Chapter 1 | 4th Social Science உலகெலாம் தமிழர்கள் | பருவம் 3 அலகு 1 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
4th Social Science : Term 3 Unit 1 : Tamils Around the World : Questions with Answers Tamils Around the World | Term 3 Chapter 1 | 4th Social Science in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 1 : உலகெலாம் தமிழர்கள் : வினா விடை - உலகெலாம் தமிழர்கள் | பருவம் 3 அலகு 1 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 1 : உலகெலாம் தமிழர்கள்