சரணாலயங்கள் | இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 2 Unit 2 : Sanctuaries
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. கார்பெட் தேசியப் பூங்கா __________ இல் உள்ளது.
அ) உத்தரகாண்ட்
ஆ) பெங்களூரு
இ) சென்னை
விடை : அ) உத்தரகாண்ட்
2. மேற்குவங்காளத்தில் உள்ள தேசியப்பூங்கா __________
அ) சுந்தரவனம் தேசியப் பூங்கா
ஆ) கிர் தேசியப் பூங்கா
இ) அண்ணா தேசியப் பூங்கா
விடை : அ) சுந்தரவனம் தேசியப் பூங்கா
3. __________ சரணாலயம் வேடந்தாங்கலில் உள்ளது.
அ) சிங்கங்கள்
ஆ) பறவைகள்
இ) புலிகள்
விடை : ஆ) பறவைகள்
4. தமிழ்நாட்டில் __________ உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
விடை : அ) மூன்று
5. கிர் தேசியப் பூங்கா __________இல் உள்ளது.
அ) குஜராத்
ஆ) அசாம்
இ) ஹைதராபாத்
விடை : அ) குஜராத்
II. பொருத்துக.
1. புலி - நீலகிரி
2. சிங்கம் - மேற்கு வங்காளம்
3. யானை - அசாம்
4. பறவைகள் - குஜராத்
5. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் - வேடந்தாங்கல்
விடை :
1. புலி - மேற்கு வங்காளம்
2. சிங்கம் - குஜராத்
3. யானை - நீலகிரி
4. பறவைகள் - வேடந்தாங்கல்
5. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் - அசாம்
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
1. சரணாலயம் என்றால் என்ன?
சரணாலயம் என்பது விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுவதில் இருந்தும் மற்ற மனித செயல்பாடுகளிலிருந்தும் பாதுகாத்து வைக்கும் இடமாகும்.
2. கார்பெட் தேசியப்பூங்காவில் என்னென்ன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன?
வங்காளப்புலிகள், புலிகள், மான்கள்.
3. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள விலங்குகளின் பெயர்களை எழுதுக.
❖ இந்தியச் சிறுத்தைப்புலி
❖ யானைகள்
❖ கருஞ்சிறுத்தை மற்றும்
❖ வரையாடு
4. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் எங்குப் பாதுகாக்கப்படுகின்றன?
❖ ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் காசிரங்கா தேசியப்பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன.
❖ உலகில் உள்ள காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளன.
❖ தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவற்றின் எண்ணிக்கை தற்பொழுது உயர்ந்துள்ளது.
5. விலங்குகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
❖ விலங்குகளை நாம் துன்புறுத்தக்கூடாது.
❖ விலங்குகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
செயல் திட்டம்
பின்வரும் சரணாலயம் / தேசியப் பூங்கா / உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ள மாநிலங்களின் பெயர்களை எழுதுக.
1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு
2. கிர் தேசியப் பூங்கா - குஜராத்
3. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் - தமிழ்நாடு
4. காசிரங்கா தேசியப் பூங்கா - அசாம்
5. கார்பெட் தேசியப் பூங்கா – உத்தரகாண்ட்
செயல்பாடு
1. பின்வருவனவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
சரணாலயம்
காட்டு விலங்குகளைப் பாதுகாக்கக்கூடிய இடம்.
தேசியப் பூங்கா
ஒட்டுமொத்த தாவரம், விலங்குகள் அடங்கிய சூழலைப் பாதுகாத்தல்.
உயிர்க்கோள காப்பகம்
அழிந்துபோகும் உயிர்களைக் காக்கும் நோக்கில் சூழலைப் பாதுகாத்தல்.
2. உனக்கு வங்காளப் புலிகளைப் பார்க்க வேண்டுமெனில் எந்த தேசியப் பூங்காவிற்குச் செல்வாய்? அப்பூங்காவின் பெயரையும் அதன் அமைவிடத்தையும் எழுதுக.
❖ கார்பெட் தேசியப் பூங்காவில் வங்காளப்புலிகளைப் பார்க்கலாம்.
❖ அது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
3. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள மூன்று விலங்குகளின் படங்களை ஒட்டி அவற்றின் பெயர்களை எழுதுக.
4. விலங்குகள் அல்லது பறவைகள் பெயரை எழுதுக.
விராலிமலை சரணாலயம்
மயில்
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
இந்திய யானை
இந்திய சிறுத்தை
கருஞ்சிறுத்தை
நீலகிரி வரையாடு
காசிரங்கா தேசியப் பூங்கா
யானைகள்
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்
காட்டு ஆசிய நீர் எருமை
சதுப்பு நில மான்
காட்டெருமை
கார்பெட் தேசியப் பூங்கா
புலி
சிறுத்தை
காட்டுபூனை
நரிகள்
சிந்தனை செய்
1. உலகப்புலிகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
ஜுலை 29.
2. இடம்பெயரும் பறவைகளுக்கும், இடம்பெயராத பறவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி சிந்தித்துப் பார்.
இடம்பெயரும் பறவை
பருவ காலத்திற்கேற்ப இடம் பெயரும்.
நீண்டதூரம் இடம்பெயர்ந்து செல்லும்.
இடம்பெயராத பறவை (உள்நாட்டுப் பறவை)
குறிப்பிட்ட இடத்தில், எல்லாப் பருவங்களிலும் வாழும்.
நீண்ட தூரம் பறக்காது.