கனிம வளங்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 3 Unit 2 : Mineral Resources

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : கனிம வளங்கள்

வினா விடை

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : கனிம வளங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
கனிம வளங்கள் ( மூன்றாம் பருவம் அலகு 2 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் )

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. மின்கம்பிகளுக்குள் இருக்கும் உலோகம் __________ ஆகும்.

அ) இரும்பு 

ஆ) துத்தநாகம்

இ) தாமிரம்

விடை : இ) தாமிரம் 


2. நகைகளைத் தயாரிக்க __________ பயன்படுத்தப்படுகிறது. 

அ) துத்தநாகம் 

ஆ) பாக்சைட்

இ) தங்கம்

விடை : இ) தங்கம் 


3. உரமாகப் பயன்படும் கனிமம் __________ ஆகும். 

அ) துத்தநாகம் ஆக்ஸைடு 

ஆ) பொட்டாசியம் 

இ) இரும்புத்தாது

விடை : ஆ) பொட்டாசியம் 


4. துத்தநாகம் __________ இல் காணப்படுகிறது. 

அ) பால் 

ஆ) பிஸ்கெட்

இ) மீன்

விடை : இ) மீன் 


5. விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயன்படும் கனிமம் __________  

அ) துத்தநாகம் 

ஆ) பாக்சைட்

இ) பொட்டாசியம்

விடை : ஆ) பாக்சைட் 


II. பொருத்துக. 

1. பாக்சைட்                -  அ) இரயில் தடங்கள் 

2. இரும்புத் தாது           -  ஆ) தாமிரம் 

3. துத்தநாகம் ஆக்ஸைடு -   இ) அலுமினியம் 

4. உலோக மின்கம்பி      -   ஈ) சோப்பு 

5. பொட்டாசியம்           -   உ) இரப்பர் பொருள்கள்


விடை : 

1. பாக்சைட்              –  இ) அலுமினியம்

2. இரும்புத் தாது         –  அ) இரயில் தடங்கள்

3. துத்தநாகம் ஆக்ஸைடு –  உ) இரப்பர் பொருள்கள்

4. உலோக மின்கம்பி     –  ஆ) தாமிரம்

5. பொட்டாசியம்         -  ஈ) சோப்பு



III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. பூமியில் காணப்படும் சில கனிமங்களின் பெயர்களைக் கூறுக.

இரும்பு 

தாமிரம் 

பாக்சைட் 

தங்கம்

வெள்ளி 

போன்றவை பூமியில் காணப்படும் கனிம வளங்களாகும். 


2. மின்சாரத்தைக் கடத்தும் சில கனிமங்களின் பெயர்களைக் கூறுக. 

இரும்பு 

தாமிரம்,

பாக்சைட்

தங்கம்

வெள்ளி 

போன்றவை மின்சாரத்தைக் கடத்தும் தனிமங்களாகும். 


3. தாமிரத்தின் சில பயன்பாடுகளை எழுதுக.

மின்கம்பி தயாரிக்கப் பயன்படுகிறது. 

கணினி, தொலைக்காட்சி, செல்பேசி முதலான அனைத்து மின் கருவிகளிலும் தாமிரம் பயன்படுகிறது.


4. இரும்புத் தாது குறித்துச் சிறு குறிப்பு வரைக.

இரும்புத் தாது இரும்பு உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இது கனிமம் ஆகும். 

தமிழ்நாட்டில் கஞ்சமலையில் கிடைக்கிறது.

வாகனங்கள், இயந்திரங்கள் இரயில் தடங்கள், கப்பல்கள், தளவாடங்கள் செய்யப் பயன்படுகின்றன.


5. துத்தநாகம் இன்றியமையாத அருந்தனிமம் என்று ஏன் அழைக்கப்படுகிறது? 

மனித ஆரோக்கியத்திற்கு மிகக் குறைந்த அளவு துத்தநாகம் அவசியம். 

நம் உடல் அதிகப்படியான துத்தநாகத்தைச் சேமிக்காது. 

அதனால் நம் உண்ணும் உணவில் ஒரு பகுதி துத்தநாகம் கலந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 

இது வெள்ளை இறைச்சி, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவில் உள்ளது.


செயல் திட்டம் 

பாக்சைட் / லிக்னைட் போன்ற சுரங்கத் திட்டங்களின் படங்களைத் திரட்டி ஒட்டுக. 

பாக்சைட், லிக்னைட், கிரானைட், கிராஃபைட், சுண்ணாம்பு, டைட்டானியம் மற்றும் மேக்னசைட் போன்ற பொருள்களை அடிப்படையாகக் கொண்ட ஏராளமான சுரங்கத் திட்டங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.



செயல்பாடு 

கோடிட்ட இடங்களை நிரப்புக. 


செயல்பாடு 

விமானத்தின் விடுபட்ட பகுதியைக் கண்டுபிடிக்க.


Tags : Mineral Resources | Term 3 Chapter 2 | 3rd Social Science கனிம வளங்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
3rd Social Science : Term 3 Unit 2 : Mineral Resources : Questions with Answers Mineral Resources | Term 3 Chapter 2 | 3rd Social Science in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : கனிம வளங்கள் : வினா விடை - கனிம வளங்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : கனிம வளங்கள்