அலகு 3 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் | 8th Social Science : History : Chapter 3 : Rural Life and Society
அலகு - 3
கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
கற்றலின்
நோக்கங்கள்
>ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்த நிலவருவாய் கொள்கை
>நிலவருவாய் கொள்கையின் நிறை, குறைகள்
>விவசாயிகளின் நெருக்கடிகள் மற்றும் கிளர்ச்சிகள்
அறிமுகம்
காலனி
ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக
இருந்தது. இக்காலத்தில் வேளாண்மை மக்களின் முதல்நிலைத் தொழிலாக இருந்தது. நெசவுத்தொழில்,
சர்க்கரை தொழில், எண்ணெய் தொழில் இன்னும் பிற தொழில்கள் வேளாண்மையைச் சார்ந்தே நடைபெற்றன.
ஆங்கில அரசானது இந்தியாவின் பழமையான வேளாண்மை முறையையும் மற்றும் நிலவருவாய் கொள்கையையும்
ஏற்றுக் கொள்ளவில்லை. நிலையான நில வருவாய் திட்டம், மகல்வாரி திட்டம், இரயத்துவாரி
திட்டம் என்னும் மூன்று பெரிய நிலவருவாய் மற்றும் நில உரிமை திட்டத்தை ஆங்கில அரசு
இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கெதிரான பொருளாதார
சுரண்டல் முறைபிற்காலத்தில் அவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வைத்தது.