Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | சுருக்கமாக விடையளி

அன்றாட வாழ்வில் வேதியியல் - சுருக்கமாக விடையளி | 12th Chemistry : UNIT 15 : Chemistry in Everyday Life

   Posted On :  18.08.2022 10:50 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்

சுருக்கமாக விடையளி

வேதியியல் : அன்றாட வாழ்வில் வேதியியல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : சுருக்கமாக விடையளி

வேதியியல் : அன்றாட வாழ்வில் வேதியியல்

II. சிறுவினாக்கள்


1. டெட்டாலின் புரைதடுப்பான் பண்பிற்கு காரணமான வேதிப்பொருள் எது

 i) குளோரோசைலினால் 

ii) டெர்பினியால் டெட்டாலின் புரைதடுப்பான் பண்பிற்கு காரணமான வேதிப்பொருள் குளோரோசைலினால் ஆகும்.


2. எதிர் உயிரிகள் என்றால் என்ன

நோயுண்டாக்கும் பாக்டீரியாக்களை கொல்லும் திறனுடைய மருந்துகள் அனைத்தும் எதிர்உயிரிகள் எனப்படும். (.கா) அமாக்சிலின், செஃபிக்சைம்.


3. வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.

ஆஸ்பிரின் வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படுகிறது.


4. தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக

தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்புகள் அல்லது நீண்ட சங்கிலி ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களின் சோடியம் உப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளைபொருட்களாகும்

•டிடர்ஜெண்ட்கள் மூன்று வகையாக உள்ளன.



5. புரைதடுப்பான்கள் எவ்வாறு கிருமிநாசினிகளிடமிருந்து வேறுபடுகின்றன.

புரைதடுப்பான்கள் 

1. நுண்ணுயிரிகளை வளர்ச்சியை தடுக்கும். உயிருள்ள திசுக்களின் மீது பயன்படுத்தப்படுகிறது

2. எ.கா. அயோடின் போவிடோன்

கிருமிநாசினிகள் 

1. நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். உயிரற்ற பொருட்களின் மீது பயன்படுத்தப்படுகிறது 

2. எ.கா. குளோரின் சேர்மங்கள், ஹைட்ரஜன் பெராக்சைடு 


6. உணவு பதனப்பொருட்கள் என்பவை யாவை

• நுண்ணியிரிகளின் வளர்ச்சி காரணமாக நொதித்தல், அமிலமாக்கல் அல்லது மற்ற உணவுக் கெடும் செயல்முறைகளை தடுக்கவோ, ஒடுக்கவோ செய்யும் திறனை பெற்ற பொருட்கள் உணவு பதனப் பொருட்கள் எனப்படும்

•  (.கா) அசிட்டிக் அமிலம், சோடியம் மெட்டா பைசல்பைட், சோடியம் பென்சோயேட்


7. சோப்புகள் ஏன் கடின நீரில் செயல்புரிவதில்லை

• கடின நீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் உள்ளன.

• கடின நீரில் சோப்பை பயன்படுத்தும்போது கடினநீரில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் சோப்பில் உள்ள சோடியம் அல்லது பொட்டாசியம் அயனிகளை வெளியேற்றி கொழுப்பு அமிலங்களின் கரையாத உப்புகளாக மாறுகின்றன

• இந்த கரையாத உப்புகள் வீழ்படிவாகின்றன

எனவே சோப்புகள் கடின நீரில் செயல்புரிவ தில்லை


8. மருந்துப் பொருட்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன

• மருந்து என்பது அதை பெறுபவரின் உடலியல் அமைப்பை அல்லது நோயுற்ற நிலையை மாற்றக்கூடிய அல்லது ஆய்வு செய்யக் கூடிய சேர்மமாகும்

• இது நோய் கண்டறிதலுக்காகவும், நோயை தடுக்கவும், நோயிலிருந்து குணமடையச் செய்யவும் பயன்படுகிறது

மருந்துகள் பின்வரும் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன

(i) வேதி அமைப்பு 

(ii) மருந்தியல் விளைவுகள்

(iii) இலக்கு அமைப்பு 

(iv) செயல்பாட்டு தளம் 


9. மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?

• இவை நரம்பு மண்டலத்தை தாக்கும் மருந்துகளாகும்

• மூளையிலுள்ள டோபமைன் எனும் நரம்புத் தூண்டல் கடத்தியை முடக்குவதன் மூலம் மையநரம்பு மண்டலத்தின் மீது மன அமைதிப்படுத்திகள் செயல்புரிகின்றன

• (.கா.) பெரிய மன அமைதிப்படுத்திகள் :ஹேலோபெரிடால், குளோசாபைன். சிறிய மன அமைதிப்படுத்திகள் : டையசிபாம் (வேலியம்) ஆல்பராசோலம்.


10. ஆஸ்பிரின் மூலக்கூறின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.



11. சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்ட்களின் அழுக்கு நீக்கும் செயல்பாட்டின் வழிமுறையை விளக்குக.

• சோப்பிற்கு எடுத்துக்காட்டு சோடியம் பால்மிடேட் 

• சோப்பின் அழுக்கு நீக்கும் செயல்பாடு சோப்பில் உள்ள கார்பாக்சிலேட் அயனியின் (பால்மிடேட் அயனி) அமைப்புடன் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது

• பால்மிடேட் அயனி இருமுறை அமைப்பை கொண்டுள்ளது.


• ஹைட்ரோ கார்பன் பகுதி முனைவற்ற பகுதி, நீரை வெறுக்கும், எண்ணெய் மற்றும் பிசுக்கில் கரைகிறது. நீரில் கரைவதில்லை

• கார்பாக்ஸில் பகுதி முனைவுற்ற பகுதி, நீர் விரும்பும் தன்மை கொண்டது, நீரில் கரைகிறது

• தூசித் துகள்கள் அல்லது எண்ணெய் பிசுக்கு ஆகியன துணிகளில் அழுக்காக ஒட்டிக் கொண்டுள்ளன

• அழுக்குடன் சோப்பை சேர்க்கும்போது, சோப்பின் ஹைட்ரோகார்பன் பகுதி பிசுக்கில் கரைகிறது

• எதிர் மின்சுமை கொண்ட கார்பாக்ஸிலேட் முனை பிசுக்கின் மேற்பகுதியில் வெளியே நீட்டிக் கொண்டுள்ளது 

• அதே நேரம் எதிர்மின்சுமை கொண்ட கார்பாக்ஸிலேட் தொகுதிகள் நீரினால் வலுவாக கவரப்படுகின்றன

• இதன் காரணமாக சிறிய நுண் கொழுப்புப் பொருள் (micelles) திவலை உருவாகிறது

• பிசுக்கானது திடப்பொருளிலிருந்து வெளியேற்றப்பட்டு மிதக்கிறது

• நீரில் அலசும்போது இந்த பிசுக்கானது நீருடன் வெளியேறுகிறது

• இதனால் துணிகளிலிருந்து விடுபட்டு நுண்கொழுப்பு பொருட்கள் நீரில் கழுவி நீக்கப்படுகின்றன

• நுண் கொழுப்பு பொருட்களின் மேற்பரப்பானது எதிர்மின்சுமையை பெற்றிருப்பதால் துகள்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய குமிழாக மாறுவதில்லை .

• நீருக்கும், நீரில் கரையாத பிசுக்கிற்கும் இடையே பால்மமாக்கும் காரணியாக செயல்படும் தன்மையை பொறுத்தே சோப்பின் அழுக்கு நீக்கும் தன்மை அமைகிறது

• டிடர்ஜெண்ட்களின் அழுக்கு நீக்கும் செயல் பாடும் சோப்புகளின் அழுக்கு நீக்கும் செயல் பாட்டை ஒத்துள்ளது


12. சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் தயாரிக்க பயன்படும் இனிப்புச் சுவையூட்டி எது

சாக்கரின், ஆஸ்பார்டேம், அலிடேம் போன்றவை.


13. போதை தரும், போதை தராத மருந்துப் பொருட்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

போதை தரும் மருந்து பொருட்கள் 

1. வலியை நீக்கி தூக்கத்தைக் கொடுக்கின்றன. இவை போதை தரக்கூடியவை. மிக குறைந்தளவு கோமா மற்றும் உயிரிழத்தலை உருவாக்கலாம்

2. வலியிலிருந்து நிவாரணம் அளிக்க குறைந்த அல்லது நீண்டகாலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது 

3. பொதுவாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு உண்டாகும் வலி, இறுதிநிலைப் புற்றுநோய் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது

4. .கா: மார்ஃபின், கோடீன்

போதை தராத மருந்து பொருட்கள் 

1. குறிப்பிட்ட இடத்திலுள்ள அழற்சி துலங்கல்களை குறைத்து வலியையை நீக்குகின்றன.

2. குறுகிய கால வலி நிவாரணியாக பயன்படுகிறது.

3. தலைவலி, தசைவலி, சிராய்ப்பு அல்லது மூட்டு சுழற்சி போன்ற மிதமான வலிகளை போக்க பயன்படுகிறது

4. எ.கா: புரூஃபென், ஆஸ்பிரின்


14. கருத்தடை மருந்துகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

அண்ட விடுவிப்பு அல்லது கருத்தரித்தலை தடுக்கும் தொகுப்பு ஹார்மோன்கள் கருத்தடை மருந்துகள் எனப்படும். (.கா) தொகுப்பு ஈஸ்ட்ரோஜன் – 

i. எத்தினைல் ஈஸ்ட்ராடையால் 

ii. மென்ஸ்ட்ர னால்

தொகுப்பு புரொஜஸ்ட்ரோன் 

i. நாரீதின்ட்ரோன் 

ii. நாரீதை நோட்ரெல்


15. பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக.

• இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வகை ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ள பலபடியானது பல்லின பலபடி எனப்படுகிறது

•  (.கா) SBR இரப்பர் (BuNa-S). இது ஸ்டைரீன் மற்றும் பியூட்டாடையீன் ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டது

• பல்லின பலபடிகள், ஒற்றைப் பலபடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன

ஸ்டைரீன் மற்றும் பியூட்டாடையீன் சேர்ந்து பல்லின பலபடி (பியூனா-S) ஐத் தருகிறது.



16. மக்கும் பலபடிகள் என்றால் என்ன? எடுத்துக் காட்டுகள் தருக.

• குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாமாகவே அல்லது நுண்ணியிரிகளால் எளிதாக சிதைக்கப் பட்டு மக்கும் இயற்கை பலபடிகள் மக்கும் பலபடிகள் எனப்படுகின்றன

• (.கா) பாலி ஹைட்ராக்ஸி பியூட்டிரேட் (PHB), பாலி கிளைக்காலிக் அமிலம் (PGA), பாலிலாக்டிக் அமிலம் (PLA) 


17. டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

• ஒற்றைப்படிகள் - எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெரிதாலிக் அமிலம் (அல்லது) டைமெத்தில் டெரிதாலேட் 

• வினையூக்கி - ஜிங்க் அசிட்டேட் / ஆன்டிமனி ட்ரையாக்சைடு 

• வெப்பநிலை - 500K 

• விளைபொருள்டெரிலீன்



18. இரப்பரின் வல்கனையாக்கல் பற்றி குறிப்பு வரைக.

• இயற்கை இரப்பர் மற்றும் சல்பர் சேர்ந்த கலவையை சூடுபடுத்தும்போது இரப்பர் வலிமையானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் மாறும் செயல்முறைஇரப்பர் உரனூட்டல்" அல்லது வல்கனையாக்கல் எனப்படும் 

• இயற்கை இரப்பர் 3-5% சல்பருடன் 100-150°Cக்கு வெப்பப்படுத்தப்படுகிறது

இதில் சிஸ்-1,4-பாலிஐசோபிரீன் சங்கிலிகள் டைசல்பைடு பிணைப்புகளால் (-S-S-) குறுக்க பிணைக்கப்படுகின்றன

பண்புகள்

• வலிமையானது 

சல்பரின் அளவு ரப்பரின் இயற்பண்பை தீர்மானிக்கிறது

• 1 முதல் 3% வரை சல்பரைக் கொண்டுள்ள இரப்பர் மிருதுவானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது

3 முதல் 10% வரை சல்பரைக் கொண்டுள்ள இரப்பர் கடினமானதாக ஆனால் நெகிழும் தன்மை கொண்டதாக உள்ளது


19. பின்வருவனவற்றை நேர்க்கோட்டு, கிளைச்சங்கிலி அல்லது குறுக்க பலபடிகள் என வகைப்படுத்துக

) பேக்கலைட் 

) நைலான் 

) பாலித்தீன்

 பலபடி

) பேக்கலைட்

) நைலான்

) பாலித்தீன் (HDPE)

) பாலித்தீன் (LDPE)

வகை 

குறுக்கபலபடி

நேர்கோட்டு பலபடி

நேர்கோட்டு பலபடி

கிளைச்சங்கிலி பலபடி


20. வெப்பத்தால் இளகும் மற்றும் வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள் வேறுபடுத்துக.

வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக்குகள் 

1. நேர்கோட்டு பலபடிகள், சங்கிலிகளுக்கு இடையே வலிமைகுறைந்த வாண்டர்வால்ஸ் விசை செயல் படுகிறது

2. வெப்பப்படுத்தும்போது இளகி, குளிர்விக்கும் போது இறுகுகின்றது

3. வெப்பத்தால் நெகிழும் பலபடி

4. மீள்வார்ப்பிற்கு உட்படுத்தலாம்

5. சேர்ப்பு பலபடியாக்கல் மூலம் உருவாக்கப்படுகிறது

6. குறைந்த வலிமையுடையவை

7. (.கா) பாலிஎத்தீன், பாலிஸ்டைரின்

வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள் 

1. குறுக்கு பலபடிகள்

2. வெப்பப்படுத்தும்போது இளகாமல், உருகும் தன்மையற்ற பொருளாக மாறுகின்றன.

3. வெப்பத்தால் இறுகும் பலபடி 

4. மீள்வார்ப்பிற்கு உட்படுத்த இயலாது 

5. குறுக்க பலபடியாக்கல் மூலம் உருவாக்கப்படுகிறது

6. அதிக வலிமையுடையவை 

7. (.கா) பேக்கலைட், மேலமைன்,

ஃபார்மால்டிஹைடு பிசின


Tags : Chemistry in Everyday Life அன்றாட வாழ்வில் வேதியியல்.
12th Chemistry : UNIT 15 : Chemistry in Everyday Life : Short Answer Questions Chemistry in Everyday Life in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் : சுருக்கமாக விடையளி - அன்றாட வாழ்வில் வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்