Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மென்பொருள் மற்றும் மென்பொருளின் வகைகள்

வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மென்பொருள் மற்றும் மென்பொருளின் வகைகள் | 6th Science : Term 3 Unit 6 : Hardware and Software

   Posted On :  22.09.2023 12:34 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்

மென்பொருள் மற்றும் மென்பொருளின் வகைகள்

மென்பொருள்களைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. இயக்க மெண்பொருள் (SYSTEM SOFTWARE) 2. பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE)

மென்பொருள் (SOFTWARE)


மென்பொருள் இல்லா வன்பொருள் ஒரு முழு கணினியாக முடியாது. மென்பொருள்கள் என்பது வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய, கணினியால் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும். வண்பொருளைப்போல் நம்மால் இதைத் தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும். 

இணையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே மின்னஞ்சல் பயன்பாட்டில் இருந்தது.

 

மென்பொருள் வகைகள்:

மென்பொருள்களைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. இயக்க மெண்பொருள் (SYSTEM SOFTWARE)

2. பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE)


 

.இயக்க மென்பொருள் (OPERATING SYSTEM-OS)

கணினியின் சாதனங்களை ஒன்றுடன் மென்பொருள் ஒன்று இணைக்கும் இயக்க மென்பொருள் ஆகும். கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் (Data) கொண்ட மென்பொருளை, இயக்க மென்பொருள் என்கிறோம். இயக்க மென்பொருள் (OS) இன்றி கணினியைப் பயன்படுத்த இயலாது. (எ.கா.) - Linux, Windows, Mac, Android.

 

பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE)

கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருள்களே பயன்பாட்டு மென்பொருள்  இயக்க மென்பொருள்பயன்பாட்டு மென்பொருள்கள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளைச் செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகின்றன.

எ.கா - Video players, Audio players, Word processing softwares, Drawing tools, Editing software's, etc.


Tags : Hardware and Software | Term 3 Unit 6 | 6th Science வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 6 : Hardware and Software : Software and Types of Software Hardware and Software | Term 3 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும் : மென்பொருள் மற்றும் மென்பொருளின் வகைகள் - வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்