வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 3 Unit 6 : Hardware and Software

   Posted On :  22.09.2023 12:38 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்

வினா விடை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

 

1. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?

அ. தாய்ப்பலகை

ஆ. SMPS

இ RAM

ஈ.. MOUSE

விடை: ஈ) MOUSE

 

2 கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

அ. இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

ஆ. இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

இ இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

ஈ. இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

விடை: அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

 

3. LINUX என்பது

அ. கட்டண மென்பொருள்

ஆ. தனி உரிமை மென்பொருள்

இ கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

ஈ கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

விடை: ஈ) கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்

 

4. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

அ. WINDOWS

ஆ. MAC OS

இ. Adobe Photoshop

ஈ. இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

 

5. --------------------- என்பது ஒரு இயங்குதளமாகும்.

அ. ANDROID

ஆ. Chrome

இ Internet

ஈ.. Pendrive

விடை : அ) ANDROID

 

II. பொருத்துக

1. MAC OS - இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்

2 Software - கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்

3. Hardware - உள்ளீட்டு கருவி

4. Keyboard - RAM

5. LINUX – Geogebra

 

விடைகள்

1. MAC OS - கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்

2 Software - Geogebra

3. Hardware - RAM

4. Keyboard - உள்ளீட்டு கருவி

5. LINUX - இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்

 

III. சிறுவினா

 

1. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.


வன்பொருள்

கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருட்கள் ஆகும்.

உள்ளீட்டு வெளியீட்டு கருவிகள் மற்றும் கணினியின் மையச் செயலகப் பெட்டியினுள் அமைந்திருக்கும் நினைவகம், தாய்ப்பலகை, SMPS, CPU, RAM, CD Drive, Graphics Card இதில் அடங்கும்.

மென்பொருள்

மென் பொருட்கள் எண்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியில் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.

தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப்  பயன்படுத்த முடியும்.

 

2. இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?


கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.

கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை கொண்ட மென் பொருளை,  இயக்க மென்பொருள் என்கிறோம், இயங்கு தளமின்றி கணினியைப் பயன்படுத்த முடியாது.

(எ.கா.) Linux, Windows, Mac, Android.

அமைப்பு மென்பொருள்

அமைப்பு மேலாண்மை நிரல்

1, இயத்த அமைப்பு

2. இயக்கி கருவிகள் (அ) சாதனங்கள்

3, கணினி பயன்பாடுகள்

மென்பொருள் உருவாக்கம்

1, நிரலாக்க மொழி

2, மொழி - மொழி பெயர்ப்பான்

3, இணைப்பான் (Linker)

4. ஏவுதல் (Loader)

 

3. கட்டற்ற மற்றும் சிறந்த மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?

கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.

திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது,

(எ.கா.) : 1, லினக்ஸ், 2, ஜியோ ஜீப்ரா

Tags : Hardware and Software | Term 3 Unit 6 | 6th Science வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 6 : Hardware and Software : Questions Answers Hardware and Software | Term 3 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும் : வினா விடை - வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்