Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | இயக்க மற்றும் பயன்பாட்டு மென்பொருள் வகைகள்

வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - இயக்க மற்றும் பயன்பாட்டு மென்பொருள் வகைகள் | 6th Science : Term 3 Unit 6 : Hardware and Software

   Posted On :  22.09.2023 12:35 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்

இயக்க மற்றும் பயன்பாட்டு மென்பொருள் வகைகள்

இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் ஆகியவற்றினை பெறப்படும் மூலம் மற்றும் பயன்பாட்டு உரிமம் ஆகியவற்றைப் பொறுத்து ரெண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் (FREE AND OPEN SOURCE) 2. கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள் (PAID AND PROPRIETARY SOFTWARE)

இயக்க மற்றும் பயன்பாட்டு மென்பொருள் வகைகள்

இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் ஆகியவற்றினை பெறப்படும் மூலம் மற்றும் பயன்பாட்டு உரிமம் ஆகியவற்றைப் பொறுத்து ரெண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் (FREE AND OPEN SOURCE)

2. கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள் (PAID AND PROPRIETARY SOFTWARE)

 

கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள் (FREE AND OPEN SOURCE SOFTWARE)

கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் (Coding's) திருத்திக்கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.

திறந்த மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்தலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் Open Source Initiative.

 

சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

1. லினக்ஸ் (LINUX)

2 ஓபன் ஆபீஸ் (Open Office)

3. இயக்க மென்பொருள் (Operating System)

4. ஜியோஜீப்ரா (Geogebra), etc

 

கட்டண மற்றும் தனியுரிம மென்பொருள் (PAID AND PROPRIETARY SOFTWARE)

கட்டணமற்றும் தனியுரிம மென்பொருள்கள் என்பது அவற்றை பயன்படுத்துதலில் மட்டுமே நிரந்தர அல்லது காலவரையறையுடன் கூடிய உரிமம் உள்ளது. ஆனால் அவற்றைப் பகிரவோ, நிரல்களைத் திருத்தவோ அனுமதி கிடையாது.

சில தனியுரிம மென்பொருள்கள்

1. விண்டோஸ் (Windows)

2. மைக்ரோசாப்ட் ஆபீஸ் (Microsoft office)

3. அடோப் ஃபோட்டோஷாப் (Adobe Photoshop).

Tags : Hardware and Software | Term 3 Unit 6 | 6th Science வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 6 : Hardware and Software : System and Application Software types Hardware and Software | Term 3 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும் : இயக்க மற்றும் பயன்பாட்டு மென்பொருள் வகைகள் - வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்