Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 3 : Light

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

மாணவர் செயல்பாடுகள்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : கேள்வி பதில்களுடன் மாணவர் செயல்பாடுகள், தீர்வு

செயல்பாடு 1

வளைந்த பரப்புடைய தேக்கரண்டி ஒன்றை எடுத்து, அதில் தோன்றும் பிம்பத்தைக் காண்க. இப்பொழுது அதைத் திருப்பி அதில் தோன்றும் பிம்பத்தைக் காண்க. ஏதாவது வேறுபாட்டைக் காணமுடிகிறதா? காரணத்தைக் கண்டுபிடிக்கவும்.



செயல்பாடு 2

அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் குழி ஆடி மற்றும் குவி ஆடிகளைப் பட்டியலிடுக.


செயல்பாடு 3

ஒரு சமதள ஆடியின் உதவியுடன் சூரிய ஒளியை சுவற்றில் விழச் செய்யவும். சுவரில் பொலிவான புள்ளி தோன்றுகிறதா? இது எவ்வாறு நிகழ்கிறது? ஆடியின் மீது விழுந்த கதிர்கள் எதிராளித்து சுவரை நோக்கி திரும்பி வருவதால் இது நிகழ்கிறது. இதுபோன்ற ஒளிப்புள்ளியினை சொரசொரப்பான பரப்பினைக் கொண்ட பொருளின் மூலம் ஏற்படுத்த முடியுமா?


செயல்பாடு 4

இரண்டு சமதள ஆடிகளை எடுத்துக் கொள்க. அவற்றை ஒன்றுக்கொன்று செங்குத்தாகப் பொருத்தி, அவற்றிற்கு இடையில் ஒரு பொருளை வைக்கவும். இப்போது கண்ணாடிகளில் பிம்பங்களைக் காண இயலும். அவற்றில் எத்தனை பிம்பங்களை உங்களால் காணமுடிகிறது? உங்களால் மூன்று பிம்பங்களைக் காணமுடியும். இரண்டு கண்ணாடிகளைக் கொண்டு எவ்வாறு மூன்று பிம்பங்களை உருவாக்கமுடிகிறது?



செயல்பாடு 5

மூன்று சமதளக் கண்ணாடிப் பட்டைகளை எடுத்துக்காண்டு அவற்றை ஒரு சமபக்க முக்கோண வடிவில் அமைக்கவும். அதன் பக்கங்களை அட்டைத்தாளைக் கொண்டு மூடவும். அதைப்போலவே அடிப்பகுதியையும் மூடவும். வளையல் துண்டு, மணி போன்ற வண்ணமயமான பொருள்களை உள்ளே போடவும். இப்பொழுது மேற்பகுதியை சுட்டைத்தாளைப் பயன்படுத்தி மூடி உள்பகுதியைப் பார்ப்பதற்கு. ஏதுவாக ஒரு சிறு துவாரத்தினை மேற்புறம் இடவும். இதனை கவரக்கூடிய பொருளாக மாற்ற அழகான வண்ணத்தாளைக் கொண்டு சுற்றிலும் ஒட்டவும். இப்பொழுது மெதுவாக, அதைச்சுற்றிக்கொண்டே துவாரத்தின் வழியாக உட்புறத்தினைப் பார்க்கவும். ஓர் அழகான வடிவத்தை உங்களால் காணமுடியும். எச்சரிக்கை கண்ணாடித் துண்டுகளைக் கையாளவும். கவனமாகக் ஆசிரியரின் மேற்பார்வையில் இந்த செயல்பாட்டினைச் செய்யவும்.


செயல்பாடு 6

ஒரு கண்ணாடி முகவையில் நீரினை நிரப்புக. அதனுள் படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு பென்சிலை வைக்கவும். தற்போது முகவையின் வழியே பென்சிலை உற்றுநோக்கவும். பென்சில் நேராகத் இல்லை, நீரின் மேற்பரப்பில் பென்சில் சற்று வளைந்தது போல் தோன்றுகிறது. ஏன்?



செயல்பாடு 7

மேசையின்மீது ஒருமுப்பட்டகத்தினையும் அதனருகில் ஒரு வெள்ளைத் திரையையும் வைக்கவும். டார்ச் விளக்கிலிருந்து வரும் ஒளியை முப்பட்டம் வழியேப் பாயச் செய்யவும். இப்போது நீங்கள் காண்டது என்ன? வெள்ளை ஒளியானது ஊதா, கருநீலம் (indigo), நீலம், பச்சை, மஞ்சள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு என ஏழு வண்ணங்களாக (VIBGYOR) நிறப்பிரிகை அடைவதை உங்களால் காணமுடியும். இப்போது மற்றொரு முப்பட்டகத்தை படத்தில் காட்டியவாறு முதல் முப்பட்டகத்திற்கும் திரைக்கும் இடையில் தலைகீழாக வைக்கவும். தற்போது திரையில் நீங்கள் காண்பது என்ன? இரண்டாவது முப்பட்டகத்திலிருந்து வரும் ஒளியானது வெண்மை நிறத்தில் இருப்பதை. நீங்கள் காணலாம்.

Tags : Light | Chapter 3 | 8th Science ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 3 : Light : Student Activities Light | Chapter 3 | 8th Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : மாணவர் செயல்பாடுகள் - ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்