Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

அமிலங்கள் மற்றும் காரங்கள் | அலகு 14 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 14 : Acids and Bases

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள்

மாணவர் செயல்பாடுகள்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள் : கேள்வி பதில்களுடன் மாணவர் செயல்பாடுகள், தீர்வு

செயல்பாடு 1

தாங்கியுடன் கூடிய ஒரு சோதனைக் குழாயினை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை ஊற்றவும். சில மெக்னீசியம் நாடாத்துண்டுகளை மெதுவாகச் சேர்க்கவும். நீ என்ன காண்கிறாய்? இப்பொழுது ஒரு எரியும் தீக்குச்சியை சோதனைக்குழாயின் வாய்ப்பகுதியில் காட்டவும். ஏதாவது ஒலியைக் கேட்கிறாயா? இவ்வினையில் உருவாகும் ஒரு வாயு 'பாப்' என்ற ஒலியுடன் எரிவதைக் காண்கிறாய் அல்லவா? இதிலிருந்து, ஒரு அமிலமும் உலோகமும் விணைபுரியும்போது ஹைட்ரஜன் வாயு வெளிப்படுவதை அறியலாம். (இந்த சோதனையை ஆசிரியரின்முன்னிலையில் செய்யவும்)

காப்பர் அல்லது பித்தளைப் பாத்திரங்களின் மீது வெள்ளீயம் என்ற உலோகம் (FFWILD) பூசப்படுகிறது. அவ்வாறு பூசவில்லையெனில் உணவுப்பொருள்களிலுள்ள கரிம அமிலங்கள் பாத்திரங்களிலுள்ள தாமிரத்துடன் வினைபுரிந்து உணவை நஞ்சாக்கிவிடும். வெள்ளீயம், பாத்திரங்களை அமிலங்களின் செயல்பாட்டிலிருந்து தனித்துப் பிரித்து உணவு நஞ்சாவதைத் தடுக்கின்றது.


செயல்பாடு 2

ஒரு முகவையில் எலுமிச்சைச் சாற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு சமையல் சோடாவை மெதுவாகச் சேர்க்கவும். என்ன காண்கிறாய்? இதிலிருந்து நீ என்ன அறிகிறாய்?


செயல்பாடு 3

கீழ்கண்ட பொருள்களை வகைப்படுத்துக. சோடியம் ஆக்சைடு. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு, அம்மோனியம் ஹைட்ராக்சைம். பெர்ரிக் ஹைட்ராக்சைடு, ஜிங்க் ஆக்சைடு. சோடியம்  கார்பனேட் (Ne_Co.) சலவைசோடா எனவும்,  பைகார்பனேட் (NaHCo) சமையல் சோடா எனவும், சோடியம் ஹைட்ராக்சைடு (Na0H காஸ்டிக் சோடா எனவும், பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KoH) காஸ்டிக் பொட்டாஷ் எனவும் வணிக ரீதியாக அழைக்கப்படுகின்றன.


செயல்பாடு 4

மஞ்சள் கரைபடிந்த ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக்கொள். வீட்டில் பயன்படுத்தும் சலவை சோப்பைக் கொண்டு துணியைத் துவைக்கவும். நிறத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? ஏன் இந்த மாற்றம் ஏற்படுகிறது?


செயல்பாடு 5

சிறிய பீட்ரூட் ஒன்றை எடுத்துக்கொண்டு அதை சிறு துண்டுகளாக வெட்டவும். அவற்றை சூடான நீரில் கொதிக்க வைத்து சாற்றை வடிகட்டவும். பின்னர் இரண்டு சோதனைக் குழாய்களை எடுத்துக்கொண்டு ஒரு சோதனைக்குழாயில் சோடியம் ஹைட்ராக் கரைசலையும் மற்றொரு சோதனைக்குழாயில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறையும் எடுத்துக் கொள்ளவும். இந்த இரண்டு ஆய்வுக் குழாய்களிலும் பீட்ரூட் சாறினை சிறிதளவு சேர்க்கவும். நிகழும் நிறமாற்றத்தை கூர்ந்து கவனிக்கவும். இதிலிருந்து நீங்கள் என்ன அறிகிறீர்கள்?


ஸ்வீடன் நாட்டு வேதியியலாளர் அர்ஹீனியஸ் அமிலங்கள் பற்றிய ஒரு கொள்கையை முன் வைத்தார். அவரின் கூற்றுப்படி அமிலம் என்பது நீர்க்கரைசலில் H+ அயனிகள் அல்லது H3Oஅயனிகளைத் தரும் வேதிப்பொருளாகும்.


ஊறுகாயில் வினிகர் (அசிட்டிக் அமிலம்) அல்லது பென்சாயிக் அமிலம் இருப்பதால் அவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் உள்ளன.

Tags : Acids and Bases | Chapter 14 | 8th Science அமிலங்கள் மற்றும் காரங்கள் | அலகு 14 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 14 : Acids and Bases : Student Activities Acids and Bases | Chapter 14 | 8th Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள் : மாணவர் செயல்பாடுகள் - அமிலங்கள் மற்றும் காரங்கள் | அலகு 14 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள்