நினைவில் கொள்க
❖ இயக்கம் என்பது நிலைமாற்றம் ஆகும். அதை ஒரு பொருள் கடந்த தூரம் அல்லது இடப்பெயர்ச்சியினால் வரையறுக்கலாம்.
❖ திசைவேகத்தைப் பொறுத்து ஒரு பொருளின் இயக்கம் சீரானதாகவோ சீரற்றதாகவோ இருக்கும்.
❖ ஒரு பொருளின் வேகம் என்பது தொலைவு மாறுபாட்டு வீதம் ஆகும் பொருளின் திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் ஆகும்.
❖ ஒரு பொருளின் முடுக்கம் என்பது அப்பொருளின் திசைவேக மாறுபாட்டு வீதம் ஆகும்.
❖ சீரான முடுக்கத்தில் செல்லும் ஒரு பொருளின் இயக்கத்தை கீழ்க்கண்ட மூன்று சமன்பாடுகளைக் கொண்டு விளக்கலாம். அவை :
v
= u + at; s = ut + 1/2 at2; v2 = u2 + 2as
❖ தடையின்றி தானே கீழே விழும் பொருளின் முடுக்கத்தைக் குறிப்பிடும் பொழுது 'a'
க்கு பதிலாக ‘g’ பயன்படுத்தப்படுகிறது.
❖ சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு பொருள் மையநோக்கு விசையைப் பெறுகிறது.
❖ மைய விலக்கு விசை, மையநோக்கு விசைக்கு எதிர் திசையில் செயல்படும்.
A-Z சொல்லடைவு
இயக்கம்
: பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றம்.
கடந்த தொலைவு : ஒரு பொருள் தனது இயக்கத்தில் கடந்து சென்ற உண்மையான தொலைவு.
இடப்பெயர்ச்சி
: ஒரு பொருள் இயங்கும் திசையில் துவக்கப்புள்ளிக்கும் முடிவுப் புள்ளிக்கும் இடைப்பட்ட மிகக் குறைந்த தொலைவு.
வேகம்
: காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் இயங்கும் வீதம்
(கடந்த தொலைவு
/ காலம்).
திசைவேகம்
: காலத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட திசையில் பொருள் இயங்கும் விதம்.
முடுக்கம்
: இயங்கும் பொருளின் திசைவேகத்தின் எண் மதிப்பு
(அ) திசையில் ஏற்படும் மாற்றம்.
வட்டப்பாதை இயக்கம்
: ஒரு வட்டத்தின் சுற்றளவு அல்லது வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம்.
மைய நோக்கு விசை
: வட்டப் பாதையில் இயங்கும் பொருளின் மீது மையத்தை நோக்கி ஆரத்தின் வழியாகச் செயல்படும் விசை.
மைய விலக்கு விசை
: வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது மையத்தை விட்டு வெளிநோக்கி ஆரத்தின் வழியே செயல்படும் விசை.
ஈர்ப்பு விசை : புவியின் மையத்திற்கும் புவியின் மேலுள்ள பொருளுக்கும் இடையே அவற்றின் நிறையைப் பொறுத்து ஏற்படும் விசை.