தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 4 | 1 ஆம் வகுப்பு கணக்கு - முறையான பட்டியல் | 1st Maths : Term 1 Unit 4 : Information Processing
அலகு 4
தகவல் செயலாக்கம்
முறையான பட்டியல்
கலைச்சொற்கள்
தகவல்
ஒழுங்கமை
விவரங்கள்
குழு
பட்டியல்
சேகரி
பயணம் செய்வோம்
வண்ண வண்ண மீன்கள்
செய்து பார்
பின்வரும் மீன்களுக்கு மீன் தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வண்ணம் தீட்டுக.
கற்றல்
வாங்க விளையாடுவோம்!
பின்வரும் வினாக்களுக்குப் படத்தைப் பார்த்து விடையளி
1.
ஏழு கல் ஆட்டம் விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை
விடை : 2
2.
மின்கம்பங்களின் எண்ணிக்கை
விடை : 1
3.
மரத்தடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
விடை : 2
4.
காக்கைகளின் எண்ணிக்கை
விடை : 4
5.
அனைத்துக் குழந்தைகளும் தொடர்வண்டி விளையாட்டில் பங்கேற்றால் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?
விடை : 9
6.
நீ விளையாடும் மற்ற விளையாட்டுகளைக் கூறுக.
விடை : கண்ணாம்பூச்சி
செய்து பார்
பிறந்தநாள் கொண்டாட்டம்
படத்தைப் பார்த்து, எண்ணி எழுதுக.