Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | கருதுத்சார் நிலவரைபடங்கள்
   Posted On :  27.07.2022 06:18 pm

12 வது புவியியல் : அலகு 11 : கருத்துசார் நிலவரைபடம்

கருதுத்சார் நிலவரைபடங்கள்

ஒருகுறிப்பிட்ட புவியியல்தரம் அல்லது எண்ணிக்கை போன்றவற்றின் இடம்சார் வடிவங்களை காட்ட பல்வேறு நிலவரைபடக் குறியீடுகளை கருத்து சார் நிலவரைபடங்கள் பயன்படுத்துகின்றன.

கருதுத்சார் நிலவரைபடங்கள்

ஒருகுறிப்பிட்ட புவியியல்தரம் அல்லது எண்ணிக்கை போன்றவற்றின் இடம்சார் வடிவங்களை காட்ட பல்வேறு நிலவரைபடக் குறியீடுகளை கருத்து சார் நிலவரைபடங்கள் பயன்படுத்துகின்றன.

1854-ல் லண்டனை சேர்ந்த ஜான் ஸ்னோ என்ற மருத்துவர் லண்டன் நகர் முழுவதும் காலரா பரவியிருந்த இடங்களுக்கான முதல் கருத்து சார் நிலவரைபடத்தை வரைந்து ஆய்வு செய்தார்.

ஒன்று அல்லது பல சிறிய எண்ணிகையிலான புவியியல் தகவல்களின் பரவல்களை காட்டுவதை கருத்து சார் நிலவரைபடங்கள் வலியுறுத்துகின்றன. இவ்வகைப் பரவல்கள் காலநிலை போன்ற இயற்கை நிகழ்வுகளாகவோ அல்லது மக்களடர்த்தி மற்றும் உடல் நலம் போன்ற மக்கள்தொகைக் கூறுகளாகவோ இருக்கலாம்.

மக்கள் தொகை அடர்த்தி, பரவல், ஒப்பளவை, சாய்வு விகிதம் மற்றும் பரப்புசார் தொடர்புகள் மற்றும் இடப்பெயர்வு போன்ற புவியியல் கருத்துகளைக் காட்ட கருத்துசார் நிலவரைபடங்கள் பயன்படுகின்றன.

 

கருத்துசார்நிலவரைபடங்களின் நோக்கங்கள்

• ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தின் தகவல்களைத் தருகின்றன.

• இடம்சார் அமைப்புகளின் பொதுவானத் தகவகல்களைத் தருகின்றன.

• இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலவரைபடங்களில் காணப்படும் அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுகிறது.

திட்டமிடுபவர்கள், ஆய்வாளர்கள், கதாசிரியர்கள், சேகரித்த தகவல்களின் உட்கருத்தை வெளிப்படுத்த விரும்புபவர்கள், ஆழமான கருத்து செறிவுமிக்க கதைகளை கூறவும் அல்லது நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றிய பெரிய புரிதலைப் பெறவும் ஐந்து வகை கருத்து சார் நிலவரைபடங்கள் பயன்படுகின்றன. இவை நிழற்பட்டை நிலவரைபடம் (Choropleth Map), சம அளவுக் கோட்டு நிலவரைபடம் (Isopleth Map), விகிதாச்சாரக் குறியீட்டு நிலவரைபடம் (Proportional symbol Map), புள்ளியிடுதல் நிலவரைபடம் (Dot Map) மற்றும் நிறப்பட்டை நிலவரைபடம் (Chorochromatic Map) போன்றவையாகும். இந்த பாடத்தில் புள்ளியிடுதல் முறை மற்றும் நிழற்பட்டை முறை பற்றி விரிவாகக் காண்போம்.

12th Geography : Chapter 11 : Thematic Mapping : Thematic Map in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 11 : கருத்துசார் நிலவரைபடம் : கருதுத்சார் நிலவரைபடங்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 11 : கருத்துசார் நிலவரைபடம்