பருவம் 2 இயல் 4 | 3 ஆம் வகுப்பு தமிழ் - திருக்குறள் கதைகள் : சரியான தீர்ப்பு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 3rd Tamil : Term 2 Chapter 4 : Thirukkural kathaigal : sariyana theerpu
பயிற்சி
வாங்க பேசலாம்
· உமக்குப் பிடித்த திருக்குறள் கதையை உமது சொந்த நடையில் கூறுக.
ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். தன்னுடைய சொந்த உழைப்பால் செல்வந்தராக உயர்ந்தவர். அவர்களுக்கு புகழினி, மதியழகன் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகள் இருவருக்கும் கல்வியை முதன்மைப்படுத்தாது தன்னுடைய தொழிலில் அவர்களை ஈடுபடுத்த எண்ணினார். ஆனால், தந்தையின் ஆலோசனையும் மீறி கல்லூரி வரை இருவரும் படித்து முடித்தனர்.
முத்தனுக்கு கல்வி அறிவு போதுமானதாக இல்லாததால் அவனுடைய வியாபாரக் கூட்டாளிகள் அவனை ஏமாற்றிவிட்டனர். இதனால் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் இழந்து, உணவுக்கே துன்பப்படும் நிலைக்குக் குடும்பம் ஆளாகியது. முத்தனின் குழந்தைகள் இதை அறிந்து பல நிறுவனங்களில் வேலை தேடினர். உரிய கல்வித் தகுதி இருந்ததால் நல்ல வேலை கிடைக்கப்பெற்று குடும்பத்தின் வறுமை நிலையை மாற்றினர். முத்தன் அப்பொழுதுதான் கல்வியின் சிறப்பை அறிந்து கொண்டான். ஏனெனில்,
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. குறள் - 400
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஞாலம் - இச்சொல்லுடன் பொருந்தாத சொல் __________.
அ) உலகம்
ஆ) வையகம்
இ) புவி
ஈ) மலை
விடை : ஈ) மலை
2. கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது __________.
அ) அறம்
ஆ) தீமை
இ) கொடை
ஈ) ஈகை
விடை : ஆ) தீமை
3. 'என்பு’ இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல் ___________.
அ) முகம்
ஆ) எலும்பு
இ) கை
ஈ) கால்
விடை : ஆ) எலும்பு
4. ‘நல்ல + செயல்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________.
அ) நல்லசெயல்
ஆ) நல்செயல்
இ) நற்செயல்
ஈ) நல்லச்செயல்
விடை : இ) நற்செயல்
5. “இன்சொல்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) இனிமை + சொல்
ஆ) இன் + சொல்
இ) இன்மை + சொல்
ஈ) இனிமை + செல்
விடை : அ) இனிமை + சொல்
குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
என்பி
அன்பி
பணிவுடையன்
அணியல்ல
முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக
இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு ஆதல்
பிற மற்றுப் அணியல்ல.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
தகவிலர் தக்கார் அவரவர் என்பது
படும் எச்சத்தாற் காணப்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
பாடி மகிழ்வோம்
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது.
கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட
முட்ட கட்ட முட்ட
இலந்தப் பழத்திற்கு ஆசப்பட்ட கொழந்த
வாழப்பழம் தின்றது.
குழு விளையாட்டு
ஞாலம் அறம் அணி என்பு கேடில் எலும்பு உலகம் அணிகலன் அழிவில்லாத தருமம்
மேற்கண்ட சொற்களை ஓர் அட்டையிலும் அவற்றிற்குரிய பொருள்களை வேறு அட்டையிலும் எழுதி வைத்துக் கொள்க. மாணவர்களை இரு குழுவாகப் பிரிக்க. ஒரு குழு அட்டையில் எழுதிய சொற்களைக் கூற, மற்றொரு குழு அவற்றிற்குரிய சரியான பொருளைக் கூறவேண்டும்.
இதே போல் குழுக்களை மாற்றிச் சொற்களைக் கூறச்செய்து, அவற்றின் பொருளைக் கூறச்செய்க.
சரியாகச் செய்யும் குழுவைக் கைகளைத் தட்டி பாராட்டச் செய்க. இதுபோன்று தொடர்ந்து புதிய சொற்களை வைத்து விளையாடச் செய்க.
செயல் திட்டம்
திருக்குறள் ஓலைச்சுவடி உருவாக்கி, அதில் பத்துக் குறள்களை எழுதி வருக.