Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | அண்டம் மற்றும் விண்வெளி

மூன்றாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - அண்டம் மற்றும் விண்வெளி | 7th Science : Term 3 Unit 2 : Universe and Space

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : அண்டம் மற்றும் விண்வெளி

அண்டம் மற்றும் விண்வெளி

* பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிதல் * விண்மீன்திரள்கள் மற்றும் அவற்றின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளுதல் * இரவு வானத்தில் தோன்றும் விண்மீன்கூட்டங்களை அடையாளம் காணுதல் * நட்சத்திரங்கள் குறித்த தகவல்களைப் பெறுதல் * இயற்கை மற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல். * இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்

அலகு 2

அண்டம் மற்றும் விண்வெளி




கற்றல் நோக்கங்கள்

* பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிதல் 

* விண்மீன்திரள்கள் மற்றும் அவற்றின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளுதல்

* இரவு வானத்தில் தோன்றும் விண்மீன்கூட்டங்களை அடையாளம் காணுதல்

* நட்சத்திரங்கள் குறித்த தகவல்களைப் பெறுதல்

* இயற்கை மற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல்.

* இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்


அறிமுகம்

"என் குறிக்கோள் எளிதானது, அது பிரபஞ்சம் ஏன் அவ்வாறே உள்ளது?, ஏன் அது நிலையாக நிற்கிறது? என்பதனை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் ஆகும்."

-ஸ்டீபன் ஹாக்கிங்

விண்மீன்கள் நிறைந்த இரவு வானம், தொன்று தொட்டே மனிதர்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் அதிசயம் ஆகும். நம் மூதாதையர்கள், இரவில் வானத்தில் காணப்பட்ட பொருள்களைக் கவனித்து ஆவணப்படுத்தியுள்ளனர். பிரபஞ்சத்தினைக் குறித்த ஆய்வு வானியல் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பது நமக்குத் தெரியும். இருப்பினும், 2000 அல்லது அதற்கு மேற்பட்ட விண்மீன்களே நம் வெற்றுக் கண்களுக்குப் புலனாகின்றன. நமது பிரபஞ்சத்தின் அளவு பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? பிரபஞ்சம் கற்பனைக்கெட்டாத அளவு பெரியது. பிரபஞ்சம் என்பது பொதுவாக, உள்ளது அல்லது இருப்பதாக அறியப்படும் அனைத்தின் மொத்தம் என வரையறுக்கப்படுகிறது. முழு பிரபஞ்சத்தின் மொத்த அளவு இன்னும் அறியப்படவில்லை என்றாலும், காணக்கூடிய பிரபஞ்சத்தை நம்மால் அளவிட முடியும்.

இந்தப் பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் அனைத்து வகையான பொருள்களும் ஆற்றலும் உள்ளன. அது வியப்பூட்டும் ஓர் உலகமாகும். நமது சூரிய மண்டலத்தின் வசிப்பிடம் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகளை அறிய இந்த அதிசய உலகத்திற்கு நாம் செல்வோம்.


Tags : Term 3 Unit 2 | 7th Science மூன்றாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 2 : Universe and Space : Universe and Space Term 3 Unit 2 | 7th Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : அண்டம் மற்றும் விண்வெளி : அண்டம் மற்றும் விண்வெளி - மூன்றாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : அண்டம் மற்றும் விண்வெளி