Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 5 | 3 ஆம் வகுப்பு தமிழ் - வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 3rd Tamil : Term 2 Chapter 5 : Vaalu poyi Kathi vanthadu dum dum dum dum

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும்

வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்
பயிற்சி

வாங்க பேசலாம்

* ‘டும் .. டும் .. டும் .. டும்..' படக்கதையை உமது சொந்த நடையில்  கூறுக.  

• ஓணான் ஒன்று வேலியைத் தாண்டும்போது அதன் வாலில் முள்   குத்திவிட்டது.  அதனை எடுத்துவிடுமாறு உழவரிடம் வேண்டியது. உழவர் முள்ளை எடுக்கும்போது அதன் வால் அறுந்துவிட்டதால் கத்தியை  ஓணான்  பெற்றுக்கொண்டது. 

• காட்டில் மரம் வெட்டியைப் பார்த்துக் கத்தியைக் கொடுத்தது. மரம்    வெட்டி கத்தியை  ஒடித்ததால் அதற்காக  விறகுகளைப் பெற்றுக்கொண்டது. 

• வழியில் தோசை சுடும் பாட்டியிடம் விறகுகளைக் கொடுத்துவிட்டு தோசையைப் பெற்றுச் சென்றது. 

• தோசையை மோர் விற்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மோரைப் பெற்றுச் சென்றது. 

• மோர் பானையை தோட்டக்காரரிடம் கொடுத்துவிட்டு, பூக்களைப் பெற்றுச் சென்றது. 

• பூவை மேளம் வாசிக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மேளத்தைப் பெற்றுச் சென்று  மகிழ்வுடன் ஆடிப் பாடியது. 


• வார இதழ்களில் வரும் படக்கதையைப் படித்த அனுபவம் உண்டா ? ஆம் எனில், அக்கதையைப் பற்றி கூறுக.



படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. விறகெல்லாம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

அ) விறகு + எல்லாம்      

ஆ) விறகு + கெல்லாம் 

இ) விற + கெல்லாம்       

ஈ) விறகு + எலாம்

விடை : அ) விறகு + எல்லாம் 


2. 'படம் + கதை' - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது 

அ) படம்கதை      

ஆ) படக்கதை       

இ) படகதை     

ஈ) படகாதை

விடை : ஆ) படக்கதை


3. - இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக.

அ) ஓனான்         

ஆ) ஓநான்       

இ) ஓணான்          

ஈ) ஓணன்

விடை : இ) ஓணான் 


4. தோசை - இச்சொல்லின்  ஒலிப்புடன்  தொடர்பில்லாத  சொல் எது?

அ) ஆசை             

ஆ) மேசை    

இ) பூசை             

ஈ) இசை

விடை : ஈ) இசை



வினாக்களுக்கு விடையளி

1. ஓணான் எதற்காக மருத்துவரிடம் சென்றது?

ஓணான் மருத்துவரிடம் செல்லவில்லை. 


2. தோட்டக்காரன் ஓணானிடம் என்ன கூறினான்?

தோட்டக்காரனிடம் ஓணான் இந்தப் பானையை வைத்துக்கொள் என்று கூறியது. 


3. கதையில் ஓணான் பெற்று வந்த பொருள்களைக் கூறுக. 

கத்தி, விறகு, தோசை, பானை, பூக்கள், மேளம் போன்ற பொருள்களை    ஓணான் பெற்று வந்தது. 


4. படக்கதையிலிருந்து நீ அறிந்து கொண்ட கருத்து யாது? 

துன்பம் வரும் வேளையில் மனச்சோர்வு அடையக்கூடாது. ஒன்றுபோனால்  மற்றொன்று வரும்.



புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக

ஊர் கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன். நான் யார்? 

விடை : தேர் 

இடிஇடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது. அது என்ன?                                   

விடை : பட்டாசு

நிழல் தருவனே காய் தருவேன் பழம் தருவேன். நான் யார்?                                    

விடை : மரம்

'கலை' என்ற சொல்லில் முதல் எழுத்து 

'படம்' என்ற சொல்லில் இடை எழுத்து               

'மடல்' என்ற சொல்லில் இறுதி எழுத்து.

நான் யார்?                                                                                   

விடை : கடல்



சொல் விளையாட்டு

ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க. 


இதே போன்று  ஒட்டகம்,  குருவி,  சிங்கம்,  கவிதை  போன்ற  சொற்களைத் தொடக்கமாக  வைத்துச்  சொற்களை  உருவாக்குக.

ஒட்டம் கதிரன் வந் தங்ம் கழுகு 

குருவி விக்கு மிளகு மின்னல் கனவு 

சிங்கம் சிரிப்பு குப்பை கும் அளவு

விதை ரம் ரம்ம் பட்ம் குடம்


அறிந்து கொள்வோம்

உலக கதைசொல்லல் நாள் - மார்ச் 20

Tags : Term 2 Chapter 5 | 3rd Tamil பருவம் 2 இயல் 5 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 2 Chapter 5 : Vaalu poyi Kathi vanthadu dum dum dum dum : Vaalu poyi Kathi vanthadu dum dum dum dum: Questions and Answers Term 2 Chapter 5 | 3rd Tamil in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும் : வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 5 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும்