பருவம் 1 | 2 ஆம் வகுப்பு தமிழ் - வந்த பாதை | 2nd Tamil : Term 1 : Vantha Pathai
இரண்டாம் வகுப்பு - தமிழ் முதல் பருவம்
கற்றல் விளைவுகள்
1. கேட்டல்
• படங்கள், ஓவியங்கள், கதைப்படங்களை நுட்பமாக உற்றுநோக்கியும் சொல்லக்கேட்டும் சுவைப்பர்.
• கேட்டறியாத, எளிய சொற்களமைந்த பாடல்களைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.
• சிந்தனையைத் தூண்டும் எளிய கதைகளைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.
• எளிய வாய்மொழி அறிவுரைகளையும் கட்டளைகளையும் வினாக்களையும் கேட்டுப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவர்.
• பிறர் பேசுவதைப் பொறுப்புடனும் கவனத்துடனும் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.
2. பேசுதல்
• ஓசைநயமிக்க பாடல்களைத் தனியாகவும் குழுவாகவும் உரிய ஒலிப்புடன் பாடுவர்.
• படக்கதையைப் பார்த்து நிகழ்வைக் கூறுவர்.
• செய்திகளைத் திரட்டும் பொருட்டு வினா எழுப்புவர்.
• பார்த்தவை, கேட்டவைப் பற்றிப் பேசுவர்.
• கேட்டும் படித்தும் அறிந்த பாடல்கள், கதைகளிலிருந்து கேட்கப்படும் எளிய வினாக்களுக்கு முழுமையான சொற்றொடரில் விடை கூறுவர்.
• சொற்கள், தொடர்களை முறையாகவும் சரியாகவும் ஒலிப்பர்.
• கேட்டறிந்த கதைகள், பாடல்களைத் தம் கற்பனையின் அடிப்படையில் கூறுவர். தமக்குரிய நடையில் பேசுவர்.
• கேட்டவற்றுடன் தம் அனுபவங்களைத் தொடர்புபடுத்திப் பொருள் விளங்கும் வகையில் தெளிவாக வெளிப்படுத்துவர்.
3. படித்தல்
• தமிழ் மொழியின் அனைத்து எழுத்துகளின் ஒலிவடிவ, வரிவடிவத் தொடர்புகளை இனங்கண்டு முறையாக உச்சரிப்பர்.
• எளிய சொற்கள், சிறுசிறு தொடர்களை உரிய ஒலிப்புடன் உரக்கப் படிப்பர்.
• எளிய சந்தப் பாடல்களை உரிய ஓசையுடன் படிப்பர்.
• எளிமையான சிறுசிறு படக்கதைகளையும் பாடல்களையும் படிப்பர். • படிக்கும் பகுதியின் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடையளிப்பர்.
• படித்த பகுதியில் கேட்கப்படும் சிறுசிறு வினாக்களுக்கு விடையளிப்பர்.
4. எழுதுதல்
• படங்களைப் பார்த்துப் பெயர்கள், சிறுசிறு தொடர்களைத் தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுவர்.
• சொற்களையும், சிறுசிறு தொடர்களையும் சொல்லக்கேட்டு எழுதுவர்.
• எளிய பாடல்கள், கதைகள், உரைப்பகுதிகளிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முழுமையான தொடர்களில் விடையளிப்பர்.
• சிறுசிறு தொடர்களைத் தம்முடைய நடையில் எழுதுவர்.
• கேட்டவற்றை படித்தவற்றை / சிந்தித்து உணர்ந்தவற்றைப் படங்களாகவோ, சொற்களாகவோ, தொடர்களாகவோ வெளிப்படுத்துவர்.
5. நடைமுறை இலக்கணம்
• ஒலி இயைபுச் சொற்களை உருவாக்குவர்.
• ஒருமை, பன்மை விகுதிகளை (கள்,க்கள்,ங்கள்) அறிந்து பயன்படுத்துவர்.
• பெயர்ச்சொற்கள், பதிலிப் பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களை அறிந்து பயன்படுத்துவர்.
6. கற்கக் கற்றல்
• படக்கதைகளைப் பார்த்தறிந்து / படித்தறிந்து கதை கூறுவர்.
• பெயர்ப்பலகைகள், அறிவிப்புகளைப் படிப்பர்.
• விரும்பும் நூல்களைத் தேடிப் படிப்பர்.
7. சொற்களஞ்சியப் பெருக்கமும் சொல்லாட்சித் திறனும்
கீழ்க்காணும் சொற்களைக் கற்றறிந்து பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவர்.
• பெயர்ச்சொற்கள்
• வினைச்சொற்கள்
• பதிலிப் பெயர்ச்சொற்கள்
• வீடு, பள்ளியில் உள்ள பொருள்களின் பெயர்கள்
• குடும்ப உறுப்பினர் பெயர்கள்
• தின்பண்டங்களின் பெயர்கள்
8. படைப்புத் திறன்
• முதல் எழுத்தை மாற்றி வேறு சொற்களை உருவாக்குவர்.
• குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் பல்வேறு சொற்களை எழுதுவர்.
• கொடுக்கப்பட்ட சொல்லிலிருந்து பல்வேறு சொற்களை உருவாக்குவர்.
9. விழுமியங்களைஉணர்ந்து பின்பற்றும் திறன்
• விதிகளைப் பின்பற்றுவர்.
• தூய்மை பேணுவர்.
• பொருள்களைப் பாதுகாப்பர்.
• பிறருக்கு உதவுவர்.
• பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவர்.
10. வாழ்வியல் தேர்ச்சிக்கான திறன்கள்
கீழ்க்காணும் வாழ்வியல் திறன்களைப் பெற்று உரிய நேரங்களில் பயன்படுத்துவர்.
• தன்னை அறியும் திறன்.
• சிக்கல் தீர்க்கும் திறன்.
• முடிவெடுக்கும் திறன்.
• கூர்சிந்தனைத் திறன்.
• படைப்பாக்கச் சிந்தனைத் திறன்.
• சிறந்த தகவல் தொடர்புத் திறன்.
• உறவுகளை இணக்கத்துடன் பேணும் திறன்.
• பிறரை அவர் நிலையிலிருந்து புரிந்துகொள்ளும் திறன்.
• உணர்வுகளைக் கையாளும் திறன்.
• மன அழுத்தத்தைக் கையாளும் திறன்.